சென்னை: ரிட்டர்ன்களை வைத்துப் பார்த்தால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றை விட அதிக லாபத்தை தரும் 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. உண்மையில், இவற்றுள் சில திட்டங்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 30 சதவீதத்துக்கும் மேலான ரிட்டர்ன்களை உருவாக்கியுள்ளன. இத்திட்டங்களின் கடந்த கால பதிவுகளை மட்டுமே வைத்து அவற்றின் எதிர்கால செயல்பாடுகளை கணிக்க இயலாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
(Tata Group sees lose of Rs 25,000 crore in market valuation within a week)
எஸ்பிஐ எஃப்எம்சிஜி – டிவிடென்ட் திட்டம்
எஸ்பிஐ எஃப்எம்சிஜி, கடந்த 1 வருடத்தில் சுமார் 37 சதவீத ரிட்டர்ன்களை வழங்கியுள்ளது. இதன் பெயர் உரைப்பது போல எஃப்எம்சிஜி, அதிகமாக விற்கும் நுகர்வோர் பொருட்கள் பிரிவில் மட்டுமே முதலீடு செய்கின்றது. இது ஐடிசி, யுனைட்டட் ஸ்பிரிட்ஸ், இமாமி மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்றவற்றில் முதலிடு செய்கிறது.
எஸ்பிஐ ஃபார்மா – வளர்ச்சித் திட்டம்
ஒரு வருட ரிட்டர்னாக சுமார் 33 சதவீதத்தைக் கொண்டிருக்கும் எஸ்பிஐ ஃபார்மாவின் வளர்ச்சித் திட்டம் சிறப்பாக செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுள் ஒன்றாகும். இத்திட்டம் சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டி'ஸ், சிப்லா மற்றும் க்லென்மார்க் போன்ற வலுவான நிறுவனத்தில் முதலிடு செய்கிறது. இத்திட்டத்தின் சமீபத்திய நிகர சொத்து மதிப்பு சுமார் 63.66 ரூபாயாகும்.
ஐசிஐசிஐ ப்ரூ எஃப்எம்சிஜி ரெக் – வளர்ச்சித் திட்டம்
கடந்த சில மாதங்களாக பந்தயத்தில் முந்தி வரும் ஐடிசி உள்ளிட்ட பல நிறுவனங்களில் முதலிடு செய்கிறது. கடந்த ஒரு வருடத்தில் சுமார் 29 சதவீதம் வரையிலான ரிட்டர்னை அளித்துள்ளது. இதன் தற்போதைய நிகர சொத்து மதிப்பு சுமார் 115.63 ரூபாய் ஆகும்.
யூடிஐ ஃபார்மா & ஹெல்த்கேர் – வளர்ச்சித் திட்டம்
சுமார் 27 சதவீதம் வரையிலான ரிட்டர்னைக் கொண்டு, சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இதன் ஃபண்ட்ஸ் போர்ட்ஃபோலியோ சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டி'ஸ் மற்றும் சிப்லா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஃபார்மா – வளர்ச்சி
ரிலையன்ஸ் ஃபார்மா ஒரு வருட ரிட்டர்னாக சுமார் 26 சதவீதத்தை உருவாக்கம் செய்துள்ளது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், டிவிஸ் லாப்ஸ், டாக்டர் ரெட்டி'ஸ் ஆகியவற்றோடு இதர நிறுவனங்களையும் உள்ளடக்கிய போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications