
சீட்டு எவ்வாறு வேலை செய்கிறது?தனிநபர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்து, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுடைய பங்களிப்பு அளிப்பார்கள். அவர்களில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக ஏலமிட்ட தேதியில் பெறுவார்.
உதாரணமாக இப்போது சுமார் 10 உறுப்பினர்கள் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அந்த சீட்டின் மொத்த கால அளவு சுமார் 10 மாதங்கள் இருக்க வேண்டும். தற்பொழுது ஒர்வொரு உறுப்பினரும் சுமார் 1000 ரூபாயை தங்களுடைய பங்களிப்பாக செலுத்துகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு நபருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றால், அவர் ஒரு குறைந்த விகித ஏல தொகைக்கு ஏலம் எடுப்பார். உதாரணமாக மேலே கூறப்பட்ட வழக்கில் ஏல தொகை ரூ 10,000 (10 உறுப்பினர்கள் X ரூ 1000 = ரூ 10000) அல்லது அதற்கு குறைந்த அளவாக இருக்க வேண்டும். ஒரு சில நபர்களுக்கு அவசர பண தேவை இருக்கலாம் என்பதால் ஏலத்தின் முதல் மாதத்தில் ரூ 10000 க்கு பதில் ரூ 9000 க்கு ஏலம் எடுக்கலாம்.
அவ்வாறு ஏலம் போகும் விஷயத்தில், ஒவ்வொரு உறுப்பினரும் ரூ 1000 க்கு பதில் ரூ 900 மட்டுமே செலுத்த வேண்டும் . ஏனெனில் இந்த மாதத்திற்கு ஏலம் எடுத்த நபர் தனது அவசர தேவையின் காரணமாக ரூ 10000க்கு பதில் ரூ 9000 க்கே ஏலம் எடுத்தார். ஆகவே மீதம் உள்ள ரூ 1000 உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். ஆரம்ப காலத்தில் ஏலம் எடுக்காததால் பிற நபர்கள் தள்ளுபடியை சீட்டின் நன்மையாக அனுபவிக்கிறார்கள்.
சீட்டு நிதிகள் பெரும்பாலும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் சில சீட்டு நிறுவனங்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கர்நாடகாவில் இது சீட்டு நிதி (கர்நாடகா) விதிகள் 1983 ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. கேரளாவில், சீட்டு நிறுவனங்கள் கேரளா சீட்டு சட்டம் 1975 மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இதேபோல், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, புது தில்லி போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களால் சீட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. கேரளா மாநிலத்தில் கேரள மாநில நிதி நிறுவனங்கள் லிமிடெட் என்கிற மாநில அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனம், சீட்டுகளை நடத்தி வருகிறது. இது வேறு சில மாநிலங்களுக்கும் பொருந்தும்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications