ஒவ்வொரு நிறுவனத்தின் அடிப்படை வசதிகளுக்குத் தகுந்தார் போல பல்வகையான கிரடிட் ரேட்டிங்குகளை கரிசில் (CRISIL), ஐசிஆர்எ (IRCA), எஸ் அண்டு பி (S & P) மற்றும் கேர் (CARE) போன்ற அமைப்புகள் வழங்குகின்றன.
வைப்பு நிதிகள், ஒப்பந்தங்கள், பத்திரங்கள் அல்லது என்சிடிக்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பாக மேற்சொன்ன அமைப்புகள் வெளியிட்டிருக்கும் நிறுவனங்களுக்கான கிரடிட் ரேட்டிங்குகளை சரிபார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் பாதுகாப்பு இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் உங்களுடைய அசல் மற்றும் வட்டி போன்றவற்றை இழப்பதை தவிர்க்க முடியும். பல்வேறு வகையான கிரடிட் ரேட்டிங்குகளின் முழுமையான விவரத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கிரிசில் எஎஎ (மிக மிக பாதுகாப்பானது)
கிரிசிலின் எஎஎ கிரடிட் ரேட்டிங் பெற்ற நிறுவனங்கள் ஆற்றும் நிதி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் ஆகியவை மிக மிக பாதுகாப்பானதாகும். இந்த நிறுவனங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஆபத்துகள் மிக மிக குறைவாக இருக்கும்.
கிரிசில் எஎ (உயர்தர பாதுகாப்பு)
கிரிசிலின் எஎ கிரடிட் ரேட்டிங் பெற்ற நிறுவனங்கள் ஆற்றும் நிதி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் ஆகியவை உயர்தர பாதுகாப்பைக் கொண்டிருக்கும். இந்த நிறுவனங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஆபத்துகள் மிக குறைவாக இருக்கும்.
கிரிசில் எ (போதுமான பாதுகாப்பு)
கிரிசிலின் எ கிரடிட் ரேட்டிங் பெற்ற நிறுவனங்கள் போதுமான பாதுகாப்பைக் கொண்டிருக்கும். இந்த நிறுவனங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஆபத்துகள் சற்று குறைவாக இருக்கும்.
கிரிசில் பிபிபி (தேவையான பாதுகாப்பு)
கிரிசிலின் பிபிபி கிரடிட் ரேட்டிங் பெற்ற நிறுவனங்கள் ஆற்றும் நிதி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றில் தேவையான பாதுகாப்புகள் இருக்கும். இந்த நிறுவனங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஆபத்துகள் அதிகம் இருக்காது.
கிரிசில் பிபி (ஆபத்துக்கான வாய்ப்பு உண்டு)
கிரிசிலின் பிபி கிரடிட் ரேட்டிங் பெற்ற நிறுவனங்கள் ஆற்றும் நிதி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றில் ஆபத்துகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.
கிரிசில் சி (மிக அதிக ஆபத்து)
கிரிசிலின் சி கிரடிட் ரேட்டிங் பெற்ற நிறுவனங்கள் ஆற்றும் நிதி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றில் மிக அதிக ஆபத்துகள் உள்ளன.
கிரிசில் டி (இழுத்து மூட வாய்ப்பு)
கிரிசிலின் டி கிரடிட் ரேட்டிங் பெற்ற நிறுவனங்கள் ஆற்றும் நிதி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் ஆகியற்றில் ஆபத்துகள் மட்டுமே இருக்கும். இந்த நிறுவனங்கள் விரைவில் தங்கள் கடைகளை சாத்திவிடும் என்று உறுதியாக கூறலாம்.
எனவே வைப்பு நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக கிரிடிட் ரேட்டிங்குகளை சரிபார்த்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications