
எனினும் வயது வராத மைனர், டியூசன் எடுப்பதன் மூலமாகவோ அல்லது பரிசுகள் மூலமாகவோ வருமானம் பெற்றால், அதற்கு அவர் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். அதாவது மேற்சொன்ன மூலங்களில் இருந்து அவர் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு அதிகமான வருமானத்தைப் பெற்றால் அதற்கு அவர் வருமானவரி செலுத்த வேண்டும்.
ஒருவர் 18 வயதிற்கு குறைவான மைனராக இருந்தால், எந்தந்த வருமானங்களுக்கெல்லாம் வரி செலுத்த வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
உதாரணமாக நீங்கள் ஒரு பெற்றோராக இருந்து, பிள்ளைகளின் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து இருந்தாலோ, அல்லது அவர்களது பெயரில் முதலீடு செய்திருந்தாலோ, அவற்றிலிருந்து வரும் வட்டியை, நீங்கள் வருமானவரி தாக்கல் செய்யும் போது வருமானவரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் மைனர் தனியாக வருமானவரி தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆனால் அவர் பெறும் ரூ.2 லட்சத்திற்கு அதிகமான வருமானம், அவருடைய பெற்றோர் வருமானவரித் தாக்கல் செய்யும் போது இணைக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு, ஒரு சில காரணங்களுக்காக விதிவிலக்கும் உண்டும்.
பெரியவர்களுக்கான வருமானவரி தாக்கல்
மைனர்களைத் தவிர்த்த அதாவது 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும், ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக வருமானத்தைப் பெற்றால் அதற்கு அவர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றால்,அவர்கள் எலக்ட்ரானிக் படிவத்தின் மூலம் வருமானவரித் தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 ஆகும்.


Click it and Unblock the Notifications