விர்ச்சுவல் கடன் அட்டை சேவை அளிக்கும் வங்கிகள்

விர்ச்சுவல் கடன் அட்டை சேவை அளிக்கும் வங்கிகள்
சென்னை: நாம் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளைப் பற்றி படிக்கின்றோம். எனவே, இப்போது பெரும்பாலான மக்கள் வலைத்தளங்களின் ஆன்லைன் நடவடிக்கைகளில் தங்களுடைய கடன் அட்டை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள தயங்குகின்றனர். வாடிக்கையாளர்களின் இந்த கவலையை போக்க பெருன்பாலான வங்கிகள் ஆன்லைன் பரிமாற்றத்திற்கென்றே விர்ச்சுவல் கடன் அட்டைகளை வழங்குகின்றன. ஆனால் நம்மில் பலருக்கும் வங்கிகளின் இத்தகைய சேவை தெரியாது. எனவே, இங்கே மெய்நிகர் கடன் அட்டைகளைப் பற்றி நாம் விரிவாக புரிந்து கொள்வோம்.

இந்தியாவில் பல வங்கிகள் விர்ச்சுவல் கடன் அட்டைகளை வழங்குகின்றன. மேலும் விவரங்களுக்கு அந்தந்த வங்கிகளின் விர்ச்சுவல் அட்டைக்கான இணைய தள முகவரிகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

பாரத ஸ்டேட் வங்கியின் மெய்நிகர் அட்டை

கோடக் netc @ RD

ஆக்ஸிஸ் வங்கியின் இ-பணப்பையை அட்டை

ஐசிஐசிஐ மெய்நிகர் கடன் அட்டை

எச்டிஎப்சி நெட் சேஃப்

விர்ச்சுவல் கடன் அட்டை (VCC) என்றால் என்ன?

முதன்மை கடன் அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் கூடுதலாக விசா(விர்ச்சுவல்) கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும், இத்தகைய கடன் அட்டைகள் பிளாஸ்டிக் வடிவத்தில் இருப்பதில்லை. நீங்கள் ஆன்லைன் மூலம் உடனடியாக விர்ச்சுவல் கடன் அட்டையை உருவாக்கலாம். அதற்கு நீங்கள் அந்தந்த வங்கிகளின் வலைத்தளங்களில் கடன்/பற்று அட்டை விவரங்களை வழங்க வேண்டும்.

விர்ச்சுவல் கடன் அட்டை உருவான பிறகு நீங்கள் அட்டை எண், செல்லுபடியாகும் விவரங்கள், காலாவதியாகும் தேதி மற்றும் CVV எண் போன்றவற்றை ஆன்லைனில் பார்க்க முடியும். அத்தகைய விவரங்களை நீங்கள் பிறகு ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். விர்ச்சுவல் கடன் அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் அச்சம் இல்லாமல் இலவசமாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்கு நீங்கள் உங்களுடைய முதன்மை கடன் அட்டையின் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விர்ச்சுவல் கடன் அட்டை செல்லுபடியாகும் காலம் எவ்வுளவு?

மெய்நிகர் கடன் அட்டைகள் அதிகபட்சம் 24மணி முதல் 48 மணி நேரமோ, அல்லது பரிவர்த்தனை முடிவடையும் வரையோ, செல்லுபடியாகும். விர்ச்சுவல் கடன் அட்டையை பயன்படுத்தும் பொழுது உங்களுடைய முதன்மை கடன் அட்டைகளின் விபரங்கள் வியாபாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை, மேலும் விர்ச்சுவல் கடன் அட்டையை ஒரு முறை நாம் பயன்படுத்திய பின் அதன் செயல்பாடு காலாவதியாகிவிடும். எனவே கடன் அட்டை மோசடிகள் பெரும்பாலும் தடுக்கபடுகின்றன.

விர்ச்சுவல் அட்டையின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பு எவ்வுளவு?

உங்களுடைய விர்ச்சுவல் கடன் அட்டையின் குறைந்த பட்ச கடன் வரம்பு ரூபாய் 1 ஆக இருக்கும். மேலும் இதனுடைய அதிக பட்ச வரம்பை உங்களுடைய முதன்மை கடன் அட்டையின் அதிக பட்ச வரம்பிற்கு உட்பட்டு மாற்றிக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+