
2. ஏல சொத்துகள் விலை மலிவானது. இது சந்தை மதிப்பை விட சுமார் 15 முதல் 25 சதவீதம் வரை குறைவாக உள்ளது. ஏலம் விடும் வங்கிக்கு அந்த கடனை திரும்பப் பெறுவதற்கான ஒரு நிர்பந்தம் உள்ளது. எனவே அந்த சொத்துகளை குறைந்த விலையில் வாங்கலாம்.
3. இது மிகவும் பாதுகாப்பானது.
4. அந்த சொத்தைப் பற்றிய சட்ட அம்சங்கள், ஆவணங்கள், மதிப்பீடு மற்றும் உண்மையான இடம் போன்றவை வங்கிகளால் சரிபார்க்கப் பட்டிருக்கும். எனவே மோசடி அல்லது சட்ட சிக்கல் குறித்த எந்த விதமான பயமும் தேவையில்லை.
5. விற்பனையாளரின்(வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்) நம்பகத்தன்மை சார்ந்திருப்பது நமக்கு மிகவும் பாதுகாப்பானது.
6. ஏலம் முடிந்த மூன்று மாதங்களில் அந்த சொத்து முழுமையாக ஒப்படைக்கபடும். மேலும் அந்த சொத்தின் உரிமை உங்களுடைய நிதித் தேவைகளை பூர்த்தி செய்த ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு ஒதுக்கப்படும்.
7. இந்த ஏல முறை செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையானது மற்றும் நம்பகமானது. அதில் மறைக்கப் பட்ட நிபந்தனைகள் மற்றும் உண்மைகள் எதுவும் இருக்காது.
ஏலத்தில் எவ்வாறு பங்கேற்று சொத்து வாங்குவது?
1. ஏல அறிவிப்பை நன்றாக படித்து பாருங்கள். அந்த சொத்தினுடைய முகவரி, அளவு, நிர்ணயிக்கப்பட்ட விலை, ஏல வைப்புத் தொகை (EMD), ஆய்வு தேதி (DOI), ஏலத் தேதி, இடம், மற்றும் நேரம், ஏல படிவங்களை வாங்கும் இடம் போன்ற தகவல்களை சேகரிப்பது .
2. ஏல அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருந்து டெண்டர் படிவத்தை வாங்குவது.
3. EMDக்கான வரைகோலையை தயார் செய்வது.
4. பூர்த்தி செய்யப்பட்ட ஏல படிவத்துடன், EMD க்கான வரைகோல் மற்றும் சான்றுகளை (முகவரி சான்று, நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி பாஸ் புத்தகம் நகல் முதலியன) இணைந்து அதற்குரிய மையத்தில் சமர்ப்பிப்பது.
5. ஏலத்திற்கான நடைமுறைகள் ஆரமிப்பது.
6. தகுந்த ஏலத் தொகையுடன் ஏலத்தில் பங்கேற்பது
7. ஏல முயற்சியில் வெற்றி பெற்றால் அதே நாளில் ஏலத் தொகையில் சுமார் 25 சதவீதத்தை (EMD உட்பட) வங்கியில் செலுத்துவது. அல்லது, மீண்டும் EMD வரைகோலையை பெற காத்திருப்பது.
8. முயற்சியில் வெற்றி பெற்ற பின் மீதி 75 சதவீத பணத்தை உரிய காலத்திற்குள் வங்கியில் செலுத்துவது. சில வங்கிகள் ஏலத்தில் சொத்து வாங்குவதற்காக கடன் வசதிகளை வழங்குகின்றன.
9. ஏலத்தில் வெற்றி பெற்ற நபர் தன் சொந்த பெயரில் சொத்தை பதிவு செய்வது.
முடிவுரை
ஏலத்தில் ஒரு வீட்டை வாங்கும் யோசனை பல முதலீட்டாளர்களுக்கு விசித்திரமாக தோன்றலாம், ஆனால் அது ஒரு சொத்து வாங்கும் பாரம்பரிய வழியை விட அதிகம் லாபமானது. சந்தையில் ஏராளமான நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் ஏலத்தில் பங்கு பெற்று சொத்து வாங்குவதற்கு உதவி புரிவர். இது எதிர்காலத்தில் ஏலம் மூலம் சொத்து வாங்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும்.


Click it and Unblock the Notifications