தற்போது இந்தியாவில் இருக்கும் நிதி நெருக்கடியிலும், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகளால் சரி வர லாபம் ஈட்டாத பங்குகள், சொத்தாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பல பேர் அரசாங்கத்துக்கு சொந்தமான வங்கிகளின் பங்குளை விற்கத் தொடங்கியுள்ளனர். இவ்வகை பங்குகளின் விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு குறைந்த நிலைக்கு இறங்கியுள்ளது.
ஆனால் இதில் அதிகப்படியான பங்குகளின் வணிகம் இப்போது நல்ல விலையில் நடக்கிறது. இப்படி எதிர் நிலையான முறையில் வாங்கும் இந்த பங்குகள் வருங்காலத்தில் அதிக பங்காதாயத்தை கொடுக்கும். ஆனால் அதற்கு குறைந்தது இரண்டு வருடமாவது காத்திருக்க வேண்டும்.
ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்:
ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஜூலை 24-ஆம் தேதி, 52 வார குறைவான அளவாக 163.15 ரூபாயாக இருந்தது. தற்போது இந்த பங்கின் விலை அதன் ஏட்டு மதிப்போடு ஒப்பிடுகையில் வெறும் 0.38 மடங்கிற்கும் P/E-யுடன் ஒப்பிடுகையில் வெறும் 3.61 மடங்கிற்கும் வணிகம் செய்யப்படுகிறது. வருங்காலத்தில் இந்த வருடம் கொடுத்ததை போலவே இந்த வங்கி பங்காதாயத்தை கொடுத்தால், 5%-க்கும் அதிகமாகவே கிடைக்கும்.
கனரா வங்கி:
அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள சிறந்த வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் பங்கு 52 வார குறைவான அளவாக 295 ரூபாயாக தேசிய பங்குச் சந்தையில் மாறியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அதிகப்படியாக 533 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதனால் பாதிக்கு பாதியாக இப்போது இந்த பங்குகளை வாங்கலாம். ஏட்டு விலையோடு ஒப்பிடுகையில் 0.5 மடங்கு குறைந்திருப்பதால் இந்த பங்குகளை தேர்ந்தெடுப்பது சிறந்த முடிவாகும்.
தேனா வங்கி:
மற்ற வங்கிகளை போலவே தேனா வங்கியும் ஜூலை 24-ஆம் தேதி 52 வார குறைந்தபட்ச விலைக்கு இறங்கியது. தற்போது 63.80 ரூபாயாக உள்ள இதன் பங்குகளை வாங்கினால் அதிகப்படியாக 45% பங்காதாயத்தை கொடுக்கும். இது 17% வரி விலக்கு பங்காதாயத்தை ஈட்டித் தரும். வங்கி இதே பங்காதாயத்தை அடுத்த வருடமும் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா:
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் பங்கு 52 வார அதிகபட்ச விலையான 288 ரூபாயிலிருந்து பாதிக்கு பாதியாக இப்போது 146 ரூபாய்க்கு இறங்கியுள்ளது. இதன் பங்குகள் ஜூலை 24-ஆம் தேதி தேசிய பங்குச் சந்தையில் 52 வார விலையில் மிக குறைவான விலையாக 145.25 ரூபாய்க்கு கீழிறங்கியது. இதன் விலையை ஏட்டு மதிப்பு மற்றும் வருமான விகிதத்தோடு ஒப்பிடுகையில் தற்போது வாங்குவதற்கு இதுவும் சிறந்த பங்காக விளங்குகிறது.
பேங்க் ஆப் இந்தியா:
பேங்க் ஆப் இந்தியாவின் பங்குகளும் கடந்த ஒரு வருடத்தில் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விலைக்கு இறங்கியுள்ளது. 195 ரூபாய் மதிப்பில் உள்ள இந்த பங்குகளையும் தற்போது வாங்கலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications