ஒருவர் தன்னுடைய தேவைகளை நிறைவு செய்வதற்காகவே தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் செலவழிக்காமல், இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அதாவது அவர் தனது தேவைகளுக்கு அதிகமாக வருமானம் ஈட்டுதால் என்று பொருள். இதைத்தான் பொருளாதார சுதந்திரம் என்று சொல்கிறோம்.
அத்தகைய வருமானத்தைக் கொண்டு பல சொத்துக்களை உருவாக்க முடியும். இந்த வாய்ப்பு அனைவருக்கும் சாத்தியமானால், கண்டிப்பின் பேரில் வேலை செய்யாமல் எல்லோருமே மகிழ்ச்சியோடும் மன திருப்தியோடும் வேலைகளை செய்வர்.
அனைவருமே ஒரு தரமான வாழ்க்கையைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். சொத்துக்களை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார சுதந்திரம் பெற சில குறிப்புகளை கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த குறிப்புகள் வாசகர்களாகிய உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறோம்.
பொருளாதார பட்டியல்
ஒருவர் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன், அவரிடம் இருக்கும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள், அவருடைய நிகழ்கால மற்றும் எதிர்கால வரவுகள், நிகழ்கால மற்றும் எதிர்கால செலவுகள் மற்றும் அவருடைய பொருளாதார நடவடிக்கைகள் ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியலை அவர் தயார் செய்ய வேண்டும். இந்த பட்டியலைத் தாயாரிப்பதன் முலம் பொருளாதாரத்தில் தாம் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய முடியும். அதன் மூலம் பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கான முயற்சிகளை அவர் தொடங்க முடியும்.
இருப்பவற்றை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுங்கள்
மனித வாழ்க்கையில் ஏராளமான எதிர்பாராத இடர்பாடுகள் மற்றும் இயற்கை அழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே அவற்றை முன்னறிந்து, உங்கள் சொத்துக்களை முதலில் இன்சூர் செய்ய வேண்டும்.
பொருளாதாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்
தேவையில்லாத செலவுகள் சிறியவையாக இருந்தாலும் அவற்றை முதலில் நிறுத்த வேண்டும். உதாரணமாக, தேவையில்லாத வரிகள், வட்டிகள், தவறான செலவுகள் மற்றும் தவறான முதலீடுகள் மூலம் பணம் செலவாகிறது என்று உணர்ந்தால் அவற்றை உடனே நிறுத்தவும்.
கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துதல்
சொத்துக்களை உருவாக்குவதற்காக வாங்கப்பட்ட கடன்கள் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியவில்லையானால், உங்கள் சொத்தை நீங்கள் பாதுகாக்க முடியாது. எனவே வாங்கிய கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
வரிகளை உரிய நேரத்தில் செலுத்துதல்
வட்டிகள் மட்டும் அல்லாமல், வரிகள் மூலம் ஆகும் செலவுகள், சொத்துக்களை உருவாக்குவதற்கு தடைகளாக உள்ளன. எனவே பொருளாதார வல்லுனர்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி வரிகளை முறையாகக் செலுத்த வேண்டும். தொடக்கத்தில் அவ்வாறு வரி கட்டுவது அதிகமான செலவாக தெரியும். ஆனால் காலப்போக்கில் நீங்கள் கட்டும் வரி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இரண்டு மந்திரங்கள்
பொருளாதார சுதந்திரம் பெறவேண்டும் என்றால் இரண்ட இரண்டு மந்திரங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று நீங்கள் வரவுக்கு குறைவாக செலவு செய்தல். இரண்டாவது நீங்கள் குறைவான விலைக்கு வாங்கி அதிகமான விலைக்கு விற்பனை செய்தல்.
நீண்ட கால செயல்முறை
லாட்டரி மூலமாகவோ அல்லது பரம்பரை சொத்துக்கள் மூலமாகவோ நீங்கள் திடீர் பணக்காரர் ஆகிவிடாலம். ஆனால் அவை அனுபவங்களை தராது. எனவே சொத்துக்களை உருவாக்குவது என்பது நீண்ட கால செயல்முறை என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
ஒருங்கினைந்த வட்டி
ஒருங்கிணைந்த வட்டியை உலகின் 8வது அதிசயம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார். நெடுங்காலமாக உங்கள் வட்டி ஒருங்கிணைக்கப்பட்டு வளர்ந்து வந்தால், அதுவே உங்களுக்கு ஒரு மிகப் பெரிய சொத்தாக இருக்கும்.
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
பணம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் என்பது உண்மை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்காது என்பதை தெரிந்து வைத்திருங்கள். ஏனெனில் உங்கள் வாழ்க்கை என்ற இயந்திரத்தை உராய்வு இல்லாமல் இலகுவாக இயக்கும் எண்ணெயே பணம் ஆகும். அந்த இயந்திரமே பணம் அல்ல என்பதை நீங்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications