
வங்கிகளில் புது அக்கவுன்ட்கள் திறப்பதற்கும், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கும், அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கும், கடனீட்டுப் பத்திரங்களைக் கையாள்வதற்கும், மற்றும் நிதி தொடர்பான பல்வேறு இதர ட்ரான்ஸாக்ஷன்களுக்கும் பான் நம்பர் தேவைப்படுகின்றது.
தனிநபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானதாகும். அத்தகைய தனிநபர்கள்/ஹெச்யூஎஃப்கள் (HUF)/தனிநபர் அல்லாதவர்கள் போலி பான் கார்டுகள் வைத்திருப்பின், அதனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு வேளை, போலி பான் கார்டு வைத்திருப்போர் அவ்வாறு ஒப்படைக்கத் தவறினால், அரசாங்கம் சட்டப்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கும்.
ஒரு தனிநபர் எவ்வித உள்நோக்கமும் இன்றி தெரியாமல் புதிய பான் கார்டுக்கு ஆவண செய்யதிருக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களும் இருக்கலாம். அவை பின் வருமாறு:
1. வீட்டு முகவரி
ஒரு தனிநபரின் வீட்டு முகவரி மாறும் பட்சத்தில், அவர் இரண்டாவது பான் கார்டுக்கு ஆவண செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால், பான் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்மனண்ட் அக்கவுண்ட் நம்பர், இந்தியாவின் எந்த மூலையிலும் செல்லுபடியாகக் கூடிய ஒரு நிரந்தர அடையாள எண் ஆகும். அந்நபரின் கடிதத் தொடர்புக்கான முகவரியில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றத்தை மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தால் போதுமானது. அவ்வாறு தெரியப்படுத்தும் போது, அப்புதிய முகவரிக்கான அத்தாட்சியையும் சேர்த்து சமர்ப்பித்தல் அவசியம்.
2. கவனக்குறைவாக ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில்
ஒரு நபர் கவனக்குறைவாக ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பின், அவர் http://incometax.sparshindia.com/pan/newPAN.asp என்ற வருமான வரி வெப்சைட்டுக்குச் சென்று, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள பான் கார்டைப் பற்றிய தகவல்களை அளித்து, அதனை திருப்பி ஒப்படைக்க முனையலாம்.
எவரேனும் கூடுதலாக வழங்கப்பட்ட பான் கார்டை ஆஃப்லைன் மோட் (Offline mode) -இல் ஒப்படைக்க விரும்பினால், அவர் ஒரு மனுவை எழுதி, சப்ஜெக்ட் என்ற இடத்தில் "பான் தகவலில் ஒரு மாற்றம்" என்று குறிப்பிட்டு, என்எஸ்டிஎல் டிஐஎன் ஃபெஸிலிட்டேஷன் மையங்களான யூடிஐ சென்டர்களுக்கு அனுப்பி வைக்கலாம். மனுவின் கடைசி வரியில், கூடுதல் பான் கார்டு பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
ஒருவர் தன்னிடமுள்ள கூடுதல் பான் கார்டை திருப்பி ஒப்படைப்பது தொடர்பான மனுவை, அவர் வசிக்கும் பகுதியின் விசாரணை அதிகாரம் கொண்ட வரிவிதிப்பு அதிகாரிக்கும் அனுப்பி வைக்கலாம். இந்த மனுவில் அவரது பெயர், தொடர்புக்கான தகவல்கள், தன்னிடம் வைத்துக் கொள்ளப் போகும் பான் கார்டு பற்றிய தகவல்கள், மற்றும் ஒப்படைக்கப் போகும் பான் கார்டு பற்றிய தகவல்கள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இந்த மனு பெறப்பட்டதாகக் கூறி அனுப்பி வைக்கப்படக்கூடிய ரசீதையோ அல்லது வேறு ஏதேனும் கடிதத்தையோ பத்திரமாக வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், இதுவே போலி பான் கார்டை திருப்பி ஒப்படைத்து விட்டதற்கான சான்றாக விளங்கக்கூடியதாகும்.


Click it and Unblock the Notifications