இந்திய குடிமக்களின் மீது அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள முனிசிபாலிட்டிகள் ஒரு சிறிய தொகையை வரியாக விதிக்கின்றன. அதுபோல் கார்ப்பரேசன்களும், அவர்கள் மீது கார்ப்பரேட் வரி அல்லது வருமான வரி அல்லது சொத்து வரி என்று வரிகளை விதிக்கின்றன. இதை தவிர மத்திய அரசும் மற்றும் மாநில அரசுகளும் சில வரிகளை விதிக்கின்றன. இதைத்தான் நேர்முக வரி என்று சொல்கிறோம்.
நேர்முக வரி
ஒவ்வொரு குடிமகனும் தான் பெறும் வருமானத்திற்கான நேர்முக வரியை கண்டிப்பாக செலுத்த வேண்டும். அந்த நேர்முக வரியை மற்றவர் மீது சுமத்த முடியாது. மேலும் இந்த நேர்முக வரியானது ஒவ்வொரு குடிமகனின் மீது சுமத்தப்படும் குறைவான பளுவாகும்.
எனினும் நேர்முக வரியை முறையாக நிர்வாகம் செய்வதன் மூலம், குடிமக்களின் வருமானத்திலிருந்தும் மற்றும் சொத்துக்களிலிருந்து முறையாக வரியைப் பெறலாம்.
நேர்முக வரியின் பிரிவுகள்
வருமான வரி, கார்ப்பரேசன் வரி, சொத்து வரி, வீட்டு வரி மற்றும் அன்பளிப்பு வரி ஆகியவை நேர்முக வரி பிரிவின்கீழ் வருகின்றன.
மறைமுக வரி
மறைமுக வரி என்பது, நேர்முக வரிக்கு முற்றிலும் மாறுபட்டது. குடிமக்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதாவது பொருள்களை வாங்கும் பொழுது அல்லது சேவைகளை பெறும் பொழுதோ அவர்கள் மீது மறைமுகமாக வரி விதிக்கப்படுகிறது. எனினும் அந்த வணிக நடவடிக்கைகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றால், அவர்கள் வரி செலுத்துவதிலிருந்து தப்பிவிடுகின்றனர்.
மறைமுக வரியின் செயல்பாடு
மேலும் மறைமுக வரியை மற்றவர் மீது மிக எளிதாக சுமத்திவிடலாம். உதாரணமாக, ஒரு வியாபாரிக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை, அவர் சேவை வரி என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்மீது மிக எளிதாக சுமத்திவிடலாம். மேலும் மறைமுக வரி பொதுவாக நடுத்தர மற்றும் அதற்கு கீழ்நிலையில் இருக்கும் மக்களிடமிருந்தே பெறப்படுகிறது. மேலும் குடிமக்கள் பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது, பெரும்பாலும் இந்த மறைமுக வரியைச் செலுத்துவதில்லை.
அனைவருக்கும் மறைமுக வரி
மறைமுக வரியை எல்லா மக்களும் அதாவது அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், செலுத்த வேண்டியிருப்பதால், வருமானவரி மற்றும் சொத்து வரியைவிட முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. எனினும், குடிமக்கள் வாங்கும் அடிப்படைப் பொருள்களுக்கும், ஆடம்பர பொருள்களுக்கும் விதிக்கப்படும் மறைமுக வரியில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. மேலும் மக்கள் பொருள்களை வாங்கும் போதே, மறைமுக வரியைச் செலுத்திவிடுவதால், மறைமுக வரியை நிர்வாகம் செய்ய அதிக அளவு பணம் தேவையில்லை.
மறைமுக வரியின் பிரிவுகள்
சென்ட்ரல் எக்சைஸ், கஸ்டம்ஸ் டூட்டி, வணிக வரி, சேவை வரி, ப்ரஃபசனல் வரி மற்றும் வாட் வரி போன்றவை மறைமுக வரியின் கீழ் வருகின்றன.
பொருளாதார வளர்ச்சி
இந்த இரண்டு வரிகளும் மிகவும் முக்கியமானவை. இவை முறையாக செலுத்தப்படும் போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications