ஹச்யுஎஃப் (HUF) என்பது பிரிக்கப்படாத இந்து குடும்பத்தை குறிக்கிறது. இது திருமணமான தம்பதிகள் அல்லது ஒரு கூட்டு குடும்பத்தின் உறுப்பினர்களால் உருவாக்கப்படுகிறது. ஹச்யுஎஃப் இல் குறந்தது இரண்டு பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால் அந்த இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் கண்டிப்பாக ஆணாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினர் பெரும்பாலும் 'கர்தா' ஆக கருதப்படுவார். ஹச்யுஎஃப் என்பது இந்து மத சட்டங்களால் நிர்வகிக்கப்பட்டாலும், இது சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினருக்கும் பொருந்தும்.
இது எவ்வாறு இயங்குகிறது?
தனிப்பட்ட நபரின் சம்பள வருமானத்தை ஹச்யுஎஃப்க்கு திசை திருப்ப முடியாவிட்டாலும், அவர் கூடுதலாக வருவாய் சம்பாதிக்க திட்டமிட்டு, அதை ஹச்யுஎஃப் மூலம் செயல்படுத்தினால், வருமான வரியை கணிசமாகக் குறைக்க முடியும்.
உதாரணமாக, ஒருவருடைய சம்பள வருமான ரூ 12 லட்சம் என வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு கூடுதலாக ரூ 6 லட்சம் வருமானம் பல்வேறு வணிகம் மூலம் வருகிறது எனில், அதை அவர் ஒரு ஹச்யுஎஃப்ஐ உருவாக்கி, அதன் பெயரில் செயல்படுத்தினால் மொத்த வரி வருவாய் ஹச்யுஎஃப் கீழ் வரும். அதன் மூலம் கணிசமான அளவிற்கு வருமான வரியை சேமிக்க முடியும். ஏனெனில் ஹச்யுஎஃப்க்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு வரி விலக்குகள் தனி நபருக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே ஒருவருக்கு தனிநபரின் கீழ் கிடைக்கும் வருவாயை விட ஹச்யுஎஃப்ன் கீழ் கிடைக்கும் வருவாய்க்கு அதிக வரி சேமிப்பு கிடைக்கும்.
வாடகை வருமானம்
வாடகை வருவாய் கிடைத்து வந்தால், அதை ஒரு தனிப்பட்ட நபருடைய கணக்கின் கீழ் காட்டுவதை விட ஒரு ஹச்யுஎஃப்ன் கீழ் கணக்கு காட்டுவது அதிக வரி சேமிப்பை பெற்றுத் தரும்.
வணிக வருவாய்
குடும்ப வணிகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலாபங்கள், ஒரு ஹச்யுஎஃப்னுடைய கணக்கில் சேர்க்கப்பட்டால் அதிகப்படியான வரி விலக்குகளைப் பெறலாம். மேலும் இது அதிகமான வரி சேமிப்பிற்கும் வழி வகுக்கும்.
ஊதியம்
கர்தா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான ஊதியம், ஒரு ஹச்யுஎஃப் வருமானத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடன்
ஹச்யுஎஃப்ன் வணிகம் அல்லது மூலதனம் விரிவடைந்து வருகிறது என்றால், அத்தகைய விரிவாக்கத்திற்காக ஹச்யுஎஃப்ன் தனிப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களில் ஹச்யுஎஃப் கடன் கொடுத்து உதவலாம். அத்தகைய ஹச்யுஎஃப் கடன்களுக்கு வட்டி வசூலிக்கலாம் அல்லது வசூலிக்காமலும் இருக்கலாம்.
குடும்ப தீர்வு அல்லது ஒப்பந்தம்
குடும்ப தீர்வுவின் ஒரே நோக்கம் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில், சொத்து தொடர்பான தற்பொழுது இருக்கும் அல்லது எதிர்காலத்தில் உருவாகக்கூடிய மோதல்களை தவிர்ப்பது ஆகும். இந்த ஒப்பந்த ஏற்பாட்டில் பரிமாற்றம் அனுமதிக்கப் படுவதில்லை. ஆகவே இதற்கு பரிசு வரி, மூலதன வரி போன்றவை கிடையாது. ஆகவே இந்த குடும்ப அமைப்பில், வரி நிகழ்வு கணிசமாக குறைகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications