வருமான வரி தாக்கல் செய்ய சில குறிப்புகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி தாக்கல் செய்ய சில குறிப்புகள்!!
இதோ ஜூலை 31 நெருங்கிவிட்டது. நம்மில் பெரும்பாலோனோர் 2012-13 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் சம்பந்தமான கவலையில் மூழ்கி தூக்கத்தை தொலைத்து இருப்போம். ஒருவர் தன்னுடைய வருமான வரியை தாக்கல் செய்யும் முன் வருமான வரித்துறை செய்துள்ள சில திருத்தங்களை நினைவில் கொள்வது மிக முக்கியமானது.

வருமான வரித்துறை 2013-14 மதிப்பீட்டு ஆண்டிற்கான சில முக்கியமான திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை கவனத்தில் கொண்டு நாம் நம்முடைய வரித் தாக்கலை மேற்கொள்ள வேண்டும். வரித்துறையால் பதிலீடு செய்யப்பட்ட சில வருமான வரி வடிவங்களாவன: SAHAJ ITR1, ITR2, ITR3, SUGAM ITR 4, ITR 4, ITR4S மற்றும் ITR V.

எப்பொழுது வரித் தாக்கல் செய்தாலும் உங்களுடைய சரியான நிரந்தர கணக்கு எண் விவரங்களை குறிப்பிட மறவாதீர்கள். அத்தகைய விபரங்களை வரியை தாக்கல் செய்யும் நேரத்தில் சரிபார்க்கவும். இங்கே இந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான வரித் தாக்கல் சம்பந்தமாக வரிவிதிப்பு துறை அறிமுகப்படுத்தியுள்ள சில மாற்றங்களை காணலாம். இந்த மாற்றங்கள் தொந்தரவு இல்லாமல் உங்களுடைய வரித் தாக்கலை மேற்கொள்ள உதவும்.

* ஒருவருக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மூலம் வருமானம் கிடைத்தால் அவர் SAHAJ ITR1 படிவத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தவிர்த்து ஒரு சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் பிற வகைகளில் கிடைக்கும் (லாட்டரி அல்லது குதிரை பந்தயத்தில் இருந்து வருமான தவிர) வருமானத்திற்கும் SAHAJ ITR1 படிவத்தையே பயன்படுத்த வேண்டும். மறுபுறம்,

* ஒருவருக்கு ITR1 இன் கீழ் வராத (சேவை அல்லது வணிக) தொழில் முறை வருமானம் கிடைத்தால் அவர் SAHAJ ITR2 படிவத்தை பயன்படுத்தி வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

* ITR3 படிவம், கூட்டு வணிக நிறுவனம் மூலம் வருமானம் பெறும் தனி நபர்களுக்கு பொருந்தும்.

* வணிகத்தின் மூலம் வருமானம் பெறும் நபர்கள் உத்தேசமான வரிவிதிப்பின் கீழ் நன்மைகளைப் பெற விரும்பினால் SUGAM ITR4 படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

* ITR4 படிவத்தை ITR4S ன் கீழ் இடம்பெறாத தொழில்முறை மற்றும் வணிக வருமானத்தை பெறுபவர்கள் பயன்படுத்த வேண்டும்.

இந்திய வருமான வரித்துறை, ரூ 5 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறும் தனி நபர்கள் மின்னணு வடிவத்திலும் வரித்தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், இரட்டை வரிவிதிப்பு நிவாரணத்தை கோரும் எவரும் மின்னணு வடிவத்திலேயே வரித் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. எனினும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கான வருமானம் எவ்வுளவு இருந்தாலும் படிவம் 7 ஐ பயன்படுத்தி வரித் தாக்கல் செய்யும் பொழுது மின்னணு வடிவத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.

கடந்த ஆண்டு வரை, 'மற்ற ஆதாரங்கள்' என்ற தலைப்பின் கீழ் இழப்புகளைச் சந்தித்த தனிநபர்கள் ITR1 படிவத்தை பயன்படுத்தலாம். எனினும் புதிய திருத்தங்களின் படி இழப்புக்களை சந்தித்த தனி நபர்கள் SAHAJ ITR1 படிவத்தை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. புதிய திருத்தங்களின் படி வருமான வரித் தாக்கல் செய்யும் தனி நபர்கள் 'மற்ற ஆதாரங்கள்' என்ற தலைப்பின் கீழ் இழப்புகளைச் சந்தித்திருந்தால் SAHAJ ITR1 படிவத்தை பயன்படுத்தி வரித் தாக்கல் செய்ய முடியாது எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தை பொறுத்தவரை, SAHAJ (ITR1) படிவத்தை பயன்படுத்தி வரி தாக்கல் செய்யும் தனிநபர்களுக்கான நடைமுறைகள் மற்றும் விதிகள் வெளிநாட்டில் சொத்துக்கள் (நிறுவனத்தின் வட்டி உட்பட அனைத்தும்) கொண்ட நபருக்கு அல்லது இந்தியாவுக்கு வெளியே உள்ள எந்தவிதமான கணக்கிலும் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற எவருக்கும் பொருந்தாது.

வருமான வரி சட்டம் 1961 கீழ் 90, 90A மற்றும் 91 ன் படி இரட்டை வரிவிதிப்பு நிவாரணம் கோரும் தனி நபர்கள் SAHAJ ITR படிவத்தை பயன்படுத்த முடியாது.

வருமான வரித்துறையின் புதிய திருத்தங்களின் படி, 2013-14 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரித்தாக்கலின் போது, ரூ 5000 அதிகமாக விலக்களிக்கப் பட்ட வருமானம் பெறக் கூடிய எவரும் SAHAJ படிவத்தின் மூலம் வரித்தாக்கல் செய்யமுடியாது எனத் தெளிவாக குரிப்பிடப்பட்டுள்ளது.

வரி செலுத்துபவர்கள் அவர்களுடைய வரித் தாக்கலின் பொழுது எந்தவிதமான ஆவணங்களையும் இணைத்து அனுப்பத் தேவையில்லை. மறுபுறம், புதிய திருத்தங்களின் படி வரி செலுத்துபவர்கள் இந்திய வருமான வரிச் சட்டம் 1961 கீழ், 115AB அல்லது 92E, 115JB பிரிவுகளின் படி, மின்னணு வரித்தாக்கலின் பொழுது ஆடிட்டர் அறிக்கையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

ITR3 மற்றும் ITR4 இல் தொடங்கப்பட்ட புதிய அட்டவணை ALன் கீழ் வரி செலுத்துபவர் அவருடைய அனைத்து அசையா சொத்துக்களின் விவரங்கள், வங்கி வைப்பு, பங்குகளில் முதலீடு, நகைகள், பணம், வாகனங்கள் முதலியன மற்றும் தொடர்புடைய கடன் பொறுப்புகள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். மேலும் HUFக்கு ஆண்டு வருமானம் ரூ 25 லட்சத்திற்கும் அதிகமானால் அவர்களும் மேற்கூரிய அனைத்தையும் தெரிவிக்க வேண்டும்.

வரி செலுத்துவோர் அனைவரும் அவர்களின் வருமானம் மற்றும் பிற முதலீட்டு ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான நேரம் இது. எல்லோரும் தங்களுடைய முதலாளிகளிடமிருந்து TDS சான்றிதழ்கள், வங்கிகள் மற்றும் பிறரிடம் இருந்து ஏனைய பிற சான்றிதழ்களை சேகரித்து வைக்க வேண்டும். 26AS படிவத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் TDS சான்றிதழ்களுக்கு எதிராக சரிபாருங்கள். அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதைத் திருத்தி வருமான வரித்துறையின் சமீபத்திய திருத்தங்களின் படி சரியான ITR படிவத்தை தேர்ந்தெடுத்து கவனத்துடன் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து வரி சேமிப்பு பத்திரங்களின் நன்மைகளை பெற்றிடுங்கள். வருமான வரித் தாக்கலின் போது விலக்கு அளிக்கப்பட்ட வருமானங்களான டிவிடெண்ட் மாற்றும், பொது வருங்கால வைப்பு நிதி வட்டி போன்றவற்றை குறிப்பிட மறக்காதீர்கள். பணத்தை திரும்பப் பெறும் விஷயத்தில் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க மறவாதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Latest Amendments for Filing Income Tax Return for FY 2012-13 (AY 2013-14)

As 31st July is coming close, everyone is worried about filing of income tax return for FY 2012-13. One should keep in their mind that tax department has made certain amendments for filing IT return.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X