நிதி சார்ந்த கனவுகளை அடைய சில வழிகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய நிரந்தரமில்லா உலகத்தில் நிதி சார்ந்த திட்டமிடுதல் என்பது அவசியமான ஒன்றாகிவிட்டது. அதே போல் தான் நிதி சார்ந்த கனவுகளை அடைவதற்கு முன் தனக்கிருக்கும் கடன்களை பற்றிய திட்டமிட்தல் மிகவும் முக்கியம். அனைவருக்கும் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு தங்களின் சொத்தையும், வளத்தையும் பெருக்குவதற்கு அனைவரும் முயற்சி செய்வர் . ஆனால் உடனடி நிதி சார்ந்த குறிக்கோள்கள் மற்றும் பொறுப்புகளில் இந்த நீண்ட கால பொறுப்பை சம்பந்தப்படுத்துவது தவறு. நிதி சார்ந்த திட்டமிடுதலுக்கு மேற் கூறியவைகளில் உறுதியாகவும், நுட்பமாகவும் செயல் பட வேண்டும்.

நிதி சார்ந்த கனவுகளை அடையும் வழிகளை அறிய தொடர்ந்து கட்டுரையை படிக்கவும்.

கால நேரம்
 

கால நேரம்

நிதி சார்ந்த பொறுப்புகள் என்பது முடிவில்லா செயல்; அது அன்றாட தேவைக்காக இருந்தாலும் சரி, அல்லது மருத்துவ செலவு போன்ற எதிர்பாரா செலவுக்காக முன் கூட்டியே தயார் படுத்துவதாக இருந்தாலும் சரி. சம்பளம் வாங்குபவர்கள் தங்களின் 6-8 மாத சம்பளத்தை சீக்கிரமே விற்க கூடிய முதலீட்டில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலை நீக்கம் போன்ற அவர்களின் அவசர காலத்துக்கு இந்த பணம் பெரிதும் உதவியாக இருக்கும்.

இடைசார்ந்துள்ள

இடைசார்ந்துள்ள

நிதி பொறுப்புகளை சந்திக்க நிதி சார்ந்த திட்டமிடுதலும், நிதி சார்ந்த கனவுகளும் ஒன்றுக்கொன்று இடைசார்ந்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் தவறான பாதையில் சென்றாலும் அது ஒருவரின் பொருளாதார நலனை வெகுவாக பாதித்து விடும். உதாரணத்திற்கு சரி வர வருமானம் வராத ஒருவர் வீட்டுக்கடன் வாங்கினால், காலப்போக்கில் அவரால் தவணை கட்ட முடியாமல் போகலாம். மேலும் கடன் சுமையால் தன்னுடைய தினசரி நிதி தேவையை கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

நிதி சார்ந்த பொறுப்புகள் என்பது அதை அடையும் வரை முடிவில்லா முயற்சி செய்வது தான். இத்தகைய முயற்சி நம் நிதி சார்ந்த கனவுகளை அடைய காலப்போக்கில் பணம் சேர்ந்து கொண்டே போகும்.

திட்டமிடுதல்
 

திட்டமிடுதல்

எந்த ஒரு வேலைக்கும் திட்டமிடுதல் என்பது அவசியமான ஒன்றாகும். அது உங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும். அதனால் நிதி சார்ந்த பொறுப்புகளுக்கும் கனவுகளும் திட்டமிடுதல் என்பது அதி முக்கியமான ஒன்றாகும். நிதி சார்ந்த கனவுகளுக்கான திட்டமிடுதல் முறைப்படி இருக்க வேண்டும். அதற்கு பல நிதி சார்ந்த கூறளவுகளையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அளவு

அளவு

நிதி சார்ந்த பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் அளவில் பெரியதாக இருக்க வேண்டியதில்லை. அதாவது உங்கள் கனவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அதற்கு ஆகும் செலவு குறைவாக இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: financial
English summary

Target financial responsibility before financial dreams

In today's uncertain environment, financial planning is an utmost necessity and meeting one's financial liabilities at hand hold far more relevance than planning for one's financial dreams.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X