வங்கிகளுக்கான கேபிடல் அடிக்வசி ரேஷியோ (சிஏஆர்) என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகளுக்கான கேபிடல் அடிக்வசி ரேஷியோ (சிஏஆர்) என்றால் என்ன?
சிஏஆர்ஐப் பொறுத்தவரை, பேஸல் (basel) கமிட்டியின் வழிகாட்டுதல்களையே முக்கியமாகக் கடைபிடிக்கப்படுகின்றன.

கேபிடல் அளவுகோல்கள் மற்றும் கேபிடல் வழிமுறைகள் ஆகியவை பற்றிய பெரும்பான்மையான வழிகாட்டுதல்கள் பேஸல் கமிட்டியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தகைய அடிப்படை வழிகாட்டுதல்களை இந்தியா மட்டுமல்லாது பல்வேறு பொருளாதாரங்களும் கடைபிடித்து வருகின்றன. இந்தியா பேஸல் கமிட்டியின் வழிகாட்டுதல்களை 1992 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.

கேபிடல் அடிக்வசி ரேஷியோ (சிஏஆர்) அல்லது கேபிடல் டு ரிஸ்க் அசெட்ஸ் ரேஷியோ (சிஆர்ஏஆர்) என்பது வங்கியின் நிதி நிலைமையின் பலம் மற்றும் நிலைப்பாடு ஆகியவற்றின் அளவீடாகும். இந்த ரேஷியோ, வங்கியின் ரிஸ்க்-வெயிட்டட் அசெட்ஸ்களாக விளங்கும் முதலீடுகளின் மெட்ரிக் அளவையாகும்.

ஃபார்முலா

கேபிடல் அடிக்வசி ரேஷியோ (சிஏஆர்) அல்லது (சிஆர்ஏஆர்) = டயர்-1 கேபிடல் + டயர்-2 கேபிடல் / ரிஸ்க் வெயிட்டட் அசெட்ஸ்

சிஏஆர் ரேஷியோவின் கேபிடல் பகுதி, டயர்-1 கேபிடல் மற்றும் டயர்-2 கேபிடல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

டயர்-1 கேபிடல்

டயர்-1 கேபிடலில் அங்கம் வகிக்கும் கேபிடலானது, வெளியிடப்பட்ட இலவச சேமிப்பு + செலுத்தப்பட்ட கேபிடல் + சட்டப்பூர்வமான சேமிப்புகளில் இருந்து குறைக்கப்பட்ட நடப்பு மற்றும் முன்னெடுத்து வரப்பட்ட இழப்புகள் + துணை நிறுவனங்களில் செய்யப்படும் ஈக்விட்டி முதலீடுகள் + புலனாகாத சொத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

டயர்-2 கேபிடல்

ஹைப்ரிட் கடன் மூலதன தேவைகள் மற்றும் சார்நிலை கடன்கள் + பொதுவான இழப்பீடு சேமிப்புகள் மற்றும் வெளியிடப்படாத சேமிப்புகள் ஆகியவை டயர்-2 கேபிடலில் அங்கம் வகுக்கின்றன.

கேபிடலின் இவ்விரு பகுதிகளும் தனித்துவமானது. டயர்-1 கேபிடலானது, எவ்வகையான இழப்புகளையும், அன்றாட வங்கி அலுவல்களுக்கு இடைஞ்சல் வராதவாறு தாங்கிக்கொள்ளவோ அல்லது அவ்விழப்புகளின் விளைவுகளை மட்டுப்படுத்தவோ கூடிய ஆற்றலை வங்கிகளுக்கு வழங்குகின்றன. டயர்-2 கேபிடல் பகுதியோ வங்கி நிறுவனத்தை மூடும் தறுவாயில் இருக்கும் வங்கிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குகிறது.

டயர்-2 கேபிடல், முதலீட்டாளர்களின் வட்டித்தொகையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே காக்கும். கொடுக்கப்பட்ட நிதி நிலைமையின் பலத்தின் அளவைப் பொறுத்து, வெயிட்டட் அசெட்களைக் கொண்டோ அல்லது அக்குறிப்பிட்ட நாட்டின் வழிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச, மொத்த மூலதனத் தேவையைப் பொறுத்தோ ரிஸ்க் எடுக்கப்படும்.

சிஏஆரின் பயன்கள்

ஒரு வங்கி, டெபாசிட்கள் மற்றும் இதர அபாயங்களான ஆபரேஷனல் ரிஸ்க்குகள், கிரெடிட் ரிஸ்க்குகள் போன்றவற்றை எதிர்கொள்வதில் எத்தகைய ஆற்றலுடன் விளங்குகிறது என்பதைத் தீர்மானிக்கும் இந்த வழிமுறை, அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், சிஏஆர் ரேஷியோ சொத்துக்களில் இருக்கக்கூடிய பல்வேறு வகை அபாயங்களையும் கவனத்தில் கொள்ள உதவுகிறது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள கேபிடல் அடிக்வசி ரேஷியோ அளவுகோல்கள்
சமீப காலமாக தொடர்ந்து பல மாதங்களாக நிலவி வரும் நிதிப் பற்றாக்குறையானது, கேபிடல் அடிக்வசி தொடர்பான விதிமுறைகளை கடைபிடிப்பதை கட்டாயமாக்க வேண்டிய நிலைக்கு அரசை தள்ளியிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி அமைப்பின் சிஏஆர், 2012 ஆம் ஆண்டின் இறுதியில், சுமார் 13.5% ஆக நிலைபெற்றிருந்ததாகவும், இதில் டயர்-1 கேபிடல் சுமார் 9.7% பங்கு வகித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆர்பிஐ 2013 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து செல்லுபடியாகக் கூடிய பேசல் III கேபிடல் விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் படி, உலக சிஏஆர் அளவீடான 8 சதவீதத்தைக் காட்டிலும், வங்கிகள் 1% அதிகமாக, அதாவது சுமார் 9% அளவிலான சிஏஆரை கொண்டிருத்தல் அவசியம். பிடிஐ, அதன் பொருளடக்கத்தில், சுமார் 5 வருட அவகாசத்தில், பேசல் III கேபிடல் விதிமுறைகளை சிறப்பான முறையில் கடைபிடிக்க வேண்டுமெனில், அதற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்று ஆர்பிஐ கவர்னரான திரு டி.சுப்பாராவ் அவர்கள் கூறியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Capital Adequacy Ratio (CAR) for Banks?

The guidelines with respect to capital standards and capital measures are widely laid down by the Basel Committee.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X