மியூச்சுவல் ஃபண்டின் என்ட்ரி மற்றும் எக்ஸிட் லோட் என்றால்..?

மியூச்சுவல் ஃபண்டின் என்ட்ரி மற்றும் எக்ஸிட் லோட் என்றால்..?
பெரும்பாலான முதலீட்டாளர்கள், தாங்கள் நெடுங்காலமாக கடினப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை, நல்ல லாபம் கிடைக்கும் என்பதற்காக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கின்றனர். எனவே மியூச்சுவல் ஃபண்டில் உள்ள கட்டணங்கள் மற்றும் அவை வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்திருப்பது அவசியமாகும்.

மியூச்சுவல் ஃபண்டில் உள்ள என்ட்ரி மற்றும் எக்ஸிட் கட்டணங்கள் மிகவும் முக்கியமானவையாகும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்பாக இந்த கட்டணங்களைத் தெரிந்து வைத்திருந்தால் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.

முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்டுகளில் தனது பணத்தை முதலீடு செய்யும் போது, மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், தங்களுடைய நிர்வாகச் செலவுகள் மற்றும், இதர செலவுகளை, முதலீட்டாளர் மீதே விதிக்கின்றன. சுருக்குமாக சொன்னால், இந்த செலவுகளை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான கமிசன் என்று அசட் மேனேஜ்மென்ட் கம்பனிகளால் (எஎம்சிஎஸ்) அழைக்கப்படுகின்றன.

என்ட்ரி லோட்

என்ட்ரி லோட் என்றால், ஒரு முதலீட்டாளர் ஒரு பரஸ்பர நிதி திட்டத்தை வாங்கும் போது அவருக்கு விதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சதவீத கட்டணம் ஆகும். இந்த என்ட்ரி லோட் கட்டணம் முதலீட்டாளரின் முதலீட்டு அளவை குறைக்கிறது.

உதாரணமாக, ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தில் சேர்வதற்கு 5 சதவீத என்ட்ரி லோட் விதிக்கப்பட்டால், முதலீட்டாளர் முதலீடு செய்த பணத்திலிருந்து இந்த 5 சதவீத பணம் கழிக்கப்படும். அதனால் முதலீட்டாளரின் முதலீடு 5 சதவீதம் குறையும். எனவே சுருக்கமாகச் சொன்னால், ஒரு முதலீட்டாளர் பரஸ்பர நிதித் திட்டத்தை வாங்கும் போது நெட் அசட் வேல்யு (என்எவி) மற்றும் என்ட்ரி லோட் ஆகியவற்றையும் சேர்த்து வாங்குகிறார்.

இதற்கு முன்பு முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட 2.25 சதவீத என்ட்ரி லோட் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த தடையினால், பரஸ்பர நிதி நிறுவனங்களும், பரஸ்பர நிதி துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

எக்ஸிட் லோட்

எக்ஸிட் லோட் என்றால், ஒரு முதலீட்டாளர், தான் பரஸ்பர நிதித் திட்டத்தில் சேர்த்து வைத்த பணத்தை திட்ட காலத்திற்கு முன்பு திரும்ப பெறும் போது, அவர் மீது விதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சதவீத கட்டணம் ஆகும். இந்த எக்ஸிட் லோட் கட்டணத்தால், முதலீட்டாளர் திரும்ப பெறும் பணத்தின் அளவும் குறைகிறது. எக்ஸிட் லோடின் அளவு பரஸ்பர நிதித் திட்டங்களுக்குத் திட்டம் மாறுபடும். இந்த எக்ஸிட் லோட் அசஸட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தால் பெறப்படுகிறது.

எனினும் இன்னொரு வகையான கொன்டிஜன்ட் டிஃபர்ட் சேல்ஸ் சார்ஜ் (சிடிஎஸ்சி) என்ற எக்ஸிட் லோட் கட்டணமும் உள்ளது. இந்த சிடிஎஸ்சி கட்டணத்தை, முதலீட்டாளர், தனது முதலீட்டை திரும்பப் பெறும் போது செலுத்த வேண்டும். இந்த சிடிஎஸ்சி கட்டணம் திட்டத்திற்கு திட்டம் மாறுபடும்.

ஒரு முதலீட்டாளர் நெடுங்காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால், அவர் தனது முதலீட்டு பணத்தைத் திரும்பப் பெறும் போது அவருக்கு எக்ஸிட் லோட் கட்டணம் விதிக்கப்படாது. ஆனால் அவர் திட்ட காலம் முடிவதற்கு முன்பு தனது முதலீட்டுப் பணத்தை எடுக்க விரும்பினால் அவர் கண்டிப்பாக எக்ஸிட் லோட் கட்டணைத்தை செலுத்த வேண்டும்.

மேலும் ஒரு சில பரஸ்பர நிதித் திட்டங்களில் கட்டணங்கள் விதிக்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட திட்டங்களைப் பற்றி முதலீட்டாளர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+