பிரையாரிட்டி பாங்கிங் என்றால் என்ன?

இது, வங்கிகள் தங்களின் முக்கியத்துவம் வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையாகும். வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சில வாடிக்கையாளர்களை முன்னுரிமை வாய்ந்த வாடிக்கையாளர்களாக பாகுபடுத்துகின்றனர். சில வங்கிகள் 1 லட்ச ரூபாய்க்கு மேலான டெபாசிட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இதற்கு அப்படியே நேர்மாறாக, மற்ற சில வங்கிகள் நெடு நாட்களாக தங்களின் வங்கி சேவைகளை உபயோகித்து வரும் நீண்ட நாள் வாடிக்கையாளர்களை முன்னுரிமை வாய்ந்தவர்களாகக் கருதுகின்றன.

இவ்வாறு முன்னுரிமை பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் சில பிரத்யேக சேவைகளையும், விசேஷ சலுகைகளையும் அளித்து அவர்களின் பாங்கிங் அனுபவத்தை வசதியானதாகவும், இன்னல்கள் அற்றதாகவும் ஆக்குகின்றன. சில சமயம், முன்னுரிமை வாய்ந்த வங்கி சேவைகள், பிரமோஷனல் ஆஃபராக புது வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

பிரையாரிட்டி பாங்கிங்

பிரையாரிட்டி பாங்கிங்

பிரையாரிட்டி பாங்கிங் பிரிவின் கீழ் வழங்கப்படும் சேவைகள், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வங்கி சேவைகளைப் பெறும் பொருட்டு ஏற்பாடு செய்யப்படும் கிளையண்ட்-ரிலேஷன்ஷிப் மேனேஜர்கள் சந்திப்பிற்கான அப்பாயிண்ட்மென்ட், வங்கியின் இன்டெர்நெட் சேவைகளை உபயோகித்துக் கொள்ள இலவச அனுமதி, கியூவில் நெடுநேரம் நிற்க வேண்டிய அவசியமின்றி எளிதாகச் செய்யக்கூடிய வங்கி டிரான்ஸாக்ஷன்கள் போன்ற சில சேவைகளை உள்ளடக்கியுள்ளன. நிதி ஆலோசனையையும் பிரையாரிட்டி பாங்கிங் சேவைகளின்

வரம்புக்குள் வருகின்றது.

வரம்புக்குள் வருகின்றது.

இந்திய சூழலில், பிரையாரிட்டி பாங்கிங் என்பது புதிதான ஒரு திட்டமாதலால், வங்கிகள் வரிந்து கட்டிக்கொண்டு இத்திட்டத்தின் பலன்களை தம் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்கு தயாராகி வருகின்றனர். உதாரணத்திற்கு, ஆக்ஸிஸ் வங்கி அதன் பிரையாரிட்டி பாங்கிங் சேவைகளின் ஒரு பகுதியாக, பிரத்யேகமான முன்னுரிமை வாய்ந்த பிளாட்டினம் கார்டை வழங்குகின்றன.

வித்டிராயல் வரையறை

வித்டிராயல் வரையறை

மேலும், இக்கார்டைக் கொண்டு சுமார் 1 லட்சம் வரை அதிகரிக்கப்பட்ட வித்டிராயல் வரையறைகள், அனைத்து திரைப்பட டிக்கெட்களிலும் சுமார் 25% கேஷ் பேக் (ஒரு காலண்டர் ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூபாய் 1000 வரை) போன்ற பல்வேறு பலன்களையும் பெறலாம்.

சலுகைகள்

சலுகைகள்

இது தவிர, இவ்வங்கி அதன் முக்கியத்துவம் வாய்ந்த மாத சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, வரையறையற்ற காசோலைப் புத்தகங்கள்; பிரையாரிட்டி பிளாட்டினம் டெபிட் கார்டுக்கான ஆண்டு கட்டணங்களில் இருந்து முழு விலக்கு.

டீமாட் அக்கவுன்ட்

டீமாட் அக்கவுன்ட்

வங்கியில் ஒரு டீமாட் அக்கவுன்ட்டை தொடங்கிய முதல் ஆண்டில் அதனை பராமரிப்பதற்கான ஆண்டுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு போன்ற பல்வேறு விசேஷ சலுகைகளை வழங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+