புரொஃபஷனல் வரி என்பது இந்திய மாநிலங்கள் மற்றும் சில உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் ஒரு மறைமுக வரியாகும். இந்த வரியானது அரசாங்கம் அல்லது தனியார் துறை நிறுவங்களில் வேலை பார்க்கும் தனி நபர், அல்லது தொழில் முறை நிபுணர்களான பட்டய கணக்காளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அல்லது ஒரு தொழில் அல்லது வணிக நிறுவனங்களை நடத்தி வரும் தனிநபர்களுக்கு விதிக்கப்படுகிறது.
புரொஃபஷனல் வரியை கட்டுப்படுத்தும் சட்டத்தின் முதல் அட்டவணையில், புரொஃபஷனல் வரியை செலுத்த வேண்டிய நபர்கள் என சுமார் 21 தனி நபர் பிரிவுகளை அடையாளப் படுத்துகிறது. புரொஃபஷனல் வரியானது பல்வேறு மாநில அரசாங்கங்களின் வருவாய்க்கு ஆதாரமாக உள்ளது. மேலும் இந்த வரியின் மூலம் திரட்டப்படும் வருவாயானது வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதில் மாநில அரசாங்கங்களுக்கு உதவுகின்றன.
புரொஃபஷனல் வரி விதிக்கும் மாநில அரசு
இந்தியாவில் ஆந்திர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, மேகாலயா, மத்திய பிரதேசம், ஒரிசா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் புரொஃபஷனல் வரி விதிக்கப்படுகிறது. எனினும் ஹரியானா, உத்திர பிரதேசம், மற்றும் டெல்லி, சண்டிகர் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களில இந்த நடைமுறை இல்லை.
பொறுப்பு
ஒரு நிறுவனத்தில் சேவையில் உள்ள நபர்களுக்கான புரொஃபஷனல் வரி, அவருடைய சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டு, அவர் பணிபுரியும் அலுவலகம் அல்லது நிறுவனம் அமைந்துள்ள மாநில அரசுக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்பிற்கோ செலுத்த வேண்டிய பொறுப்பு அந்த அலுவலகம் அல்லது நிறுவனத்தை நடத்தும் முதலாளிக்கு உண்டு. வருமான வரி செலுத்துவதைப் போன்று புரொஃபஷனல் வரியை செலுத்துவதும் அத்தியாவசியமானதாகும். மேலும், புரொஃபஷனல் வரியானது வருமான வரியின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புரொஃபஷனல் வரி சான்றிதழை கோரிப் பெறுதல்
புரொஃபஷனல் வரியைச் செலுத்த வேண்டிய நபருக்கான பொறுப்புகளை அந்த நபர் தகுந்த அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு பதிவுச் சான்றிதழைப் பெற வேண்டும். அந்தப் பதிவுக்கான அதிகபட்ச காலம் ஒரு மாதம் ஆகும். குறிப்பிட்ட நபர் என்பது ஒரு நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் அதனுடைய சம்பளப் பட்டியலில் ஊழியர்களை நியமித்த பிறகு பொறுப்புச் சான்றிதலை அந்த நிறுவனம் பெற வேண்டும். மேலும் அந்த நிறுவனம் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்தால் அது ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புரொஃபஷனல் வரி விகிதம்
புரொஃபஷனல் வரி விகிதம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது. மேலும், மாநில அரசாங்கங்கள் ஒருவருடைய தொழில், அந்தத் தொழிலில் அவருக்கு உள்ள அனுபவம், மொத்த டேர்ன்ஓவர் அல்லது கிடைக்கக் கூடிய வருமானம் போன்றவற்றை பொறுத்து வரி வசூலிக்கலாம். ஒரு ஆண்டுக்கான அதிக பட்ச புரொஃபஷனல் வரி ரூபாய் 2,400 ஆகும். இந்த வரி தனிநபரின் சம்பளத்தின் முன் குறிப்பிட்ட விகிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. புரொஃபஷனல் வரி படிவம் VIII ஐ பயன்படுத்தி கட்டப்படுகிறது.
புரொஃபஷனல் வரி செலுத்துவதற்கான முறைகள்
இந்தியா டைம்ஸ் அறிக்கையின் படி சமீபத்தில் ராஜ்கோட் முனிசிபல் கார்ப்பரேஷன் (RMC) புரொஃபஷனல் வரி செலுத்துவதற்கான ஆன்லைன் வசதியை தொடங்கி உள்ளது. இத்தகைய நடவடிக்கை மூலம், இப்பகுதியில் தொழில் வரி செலுத்த வேண்டிய நபர் வரி செலுத்துவதற்காக இனி தனிப்பட்ட முறையில் குடிமை மையத்தை அணுக வேண்டியதில்லை. இதைத் தவிர புரொஃபஷனல் வரி செலுத்துபவர்களின் வசதிக்காக அந்த முனிசிபல் கார்பரேஷனில் விரைவில் நெட் பேங்கிங் வசதியும் வழங்கப் பட உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications