ரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்ட் (RTGS) என்றால் என்ன?

ரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்ட் (RTGS) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் ஒரு ஆன்லைன் நிதி பரிமாற்ற யுக்தியாகும். ஆர்டிஜிஎஸ்ஐ (RTGS) பயன்படுத்தி எந்த விதமன தாமதம் இல்லாமல் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நிதியை மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த ரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்டில், பரிவர்த்தனைகள் அனைத்தும் மொத்தமாக மேற்கொள்ளப்படாமல், ஒவ்வொரு பரிவர்த்தனையாக பரிசீலிக்கப்படுகின்றது.

ஆர்டிஜிஎஸ்ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் குறைந்த பட்சம் சுமார் 2 லட்சம் ருபாயை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம். எனினும், இதில் உட்ச பட்ச எல்லை என்பது வரையறுக்கப்படவில்லை. ஆர்டிஜிஎஸ் மூலம் நிதியை மாற்ற ஒரே ஒரு நிபந்தனை தான் உள்ளது. அதாவது பணத்தை அனுப்பும் மற்றும் பணத்தை பெறும் வங்கிகள் இரண்டும் ஆர்டிஜிஎஸ் வசதியை பெற்றிருக்க வேண்டும்.

ஆர்டிஜிஎஸ்ன் செயல்பாடு

ஆர்டிஜிஎஸ்ன் செயல்பாடு

ஆர்டிஜிஎஸ் ஆன்லைன் நிதி பறிமாற்றத்தை பயன்படுத்துவதற்கு, வங்கி ஆன்லைன் வசதியை பயன்படுத்தி மூன்றாம் நபருக்கு பணப் பறிமாற்றும் வசதியைப் பெறவேண்டும். மூன்றாம் தரப்பு பணப் பரிமாற்ற வசதியைப் பயன்படுத்தி, பணம் செலுத்தும் நபர், பயனாளியின், கணக்கு எண், கிளை, வங்கியின் பெயர் மற்றும் பயனாளியின் கிளைக்கான IFSC குறியீடு உட்பட பயனாளியின் விவரங்களை செலுத்த வேண்டும்.

மேற்கண்ட விவரங்களைப் பணம் செலுத்தும் நபர் வழங்கிய பின்னர், வங்கி பயனாளியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். இந்த நடைமுறைக்கு 12 முதல் 24 மணி நேரம் பிடிக்கும். வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு, வங்கி புதிய பயனாளிக்கு பணம் பறிமாற்றும் வசதியை வழங்குகின்றது. இந்த செயல்பாட்டை கொண்டு, ஆர்டிஜிஎஸ் வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் நபர் பயனாளியின் கணக்கில் உடனே பணத்தை மாற்ற முடியும்.

 

மின்னணு நிதி பரிமாற்றம்

மின்னணு நிதி பரிமாற்றம்

ஆர்டிஜிஎஸ் என்பது மின்னணு நிதி பரிமாற்ற முறையாகும், மேலும் இதில் நிகழ்கால நேரத்தில் பணம் பறிமாற்றப் படுகின்றது. நீங்கள் விடுமுறை நாட்களில் பணப் பறிமாற்ற விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் அது அடுத்த வேளை நாளில் பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆஃப்லைன் பரிமாற்றம்

ஆஃப்லைன் பரிமாற்றம்

ஆர்டிஜிஎஸ் ஐ பயன்படுத்துவதற்கு ஆன்லைன் வசதி வேண்டுமே என்கிற கவலை தேவை இல்லை. பணம் செலுத்தும் நபர் அவருடைய வங்கிக் கிளைக்கு சென்று RTGS விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஆஃப்லைன் மூலமாகவும் பணத்தை பயனாளிக்கு மாற்றலாம்.

குறைவான செலவு

குறைவான செலவு

ஆர்டிஜிஎஸ்ஐ பயன்படுத்தி பணத்தை மாற்றுவதற்கான செலவு மிகவும் குறைவு. இதில் வங்கி வரைவோலை ​​போன்ற பிற நிதி பரிமாற்ற முறைகளில் உள்ளது போன்ற செலவு இல்லை.

கட்டணம்

கட்டணம்

ஆர்டிஜிஎஸ் நிதி பரிமாற்ற நடைமுறை ஒப்பீட்டளவில் குறைந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகின்றது. மேலும் இந்த நடைமுறையில் கட்டணமும் மிகக் குறைவு. வங்கிகள் ரூ 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வெளிநோக்கிய பணபறிமாற்றத்திற்கு ரூ 30 க்கு மிகாமல் கட்டணமாக வசூலிக்கின்றன. ஒருவருடைய பயனாளியின் கணக்கிற்கான உள்நோக்கிய பணப் பறிமாற்றத்திற்கு எந்த விதமான கட்டணமும் இல்லை. 5 லட்சத்திற்கும் அதிகமான பணப் பறிமாற்றத்திற்கு வங்கிகள் ரூ 55 ஐ கட்டணமாக வசூலிக்கின்றன.

பாதுகாப்பானது

பாதுகாப்பானது

ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு பாதுகாப்பான நிதி பரிமாற்ற இயங்குமுறை ஆகும். மேலும் பிற நிதி பரிமாற்ற நடைமுறைகளான வங்கி காசோலை மற்றும் வரைவோலை போன்றவற்றில் உள்ள தொலைந்து போவது போன்ற ஆபத்துகள் இதில் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+