டபிள்யூபிஐ (WPI) மற்றும் சிபிஐ (CPI) பணவீக்கங்களின் வேறுபாடு என்ன?

டபிள்யூபிஐ (WPI) மற்றும் சிபிஐ (CPI) பணவீக்கங்களின் வேறுபாடு என்ன?
பொதுவாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த விலையின் அளவில் வரக்கூடிய அதிகரிப்பே பணவீக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. பணவீக்க விகிதம் என்பது ஒரு முக்கிய அளவீடாகும். இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு நாணயம் மற்றும் நிதிக் கொள்கைகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்மொழிகிறது. நாணயக் கொள்கை பிரதானமாக விலை ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்திகிறது; அதனால் பணவீக்கத்தின் மீதான அதன் சார்பை வெளிப்படையாக உணரலாம்.

பணவீக்க அளவீட்டின் குறியீடுகள்

மொத்த விற்பனை விலை இன்டெக்ஸ் (டபிள்யூபிஐ) மற்றும் நுகர்வோர் விலை இன்டெக்ஸ் (சிபிஐ) ஆகிய இரண்டும் பணவீக்கத்தின் பிரதான அளவீடுகளாகும். இவ்விரண்டு பணவீக்க அளவீட்டு இன்டெக்ஸ்களுக்கு இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ளும் முன், ஒரு இன்டெக்ஸ் என்பது எதைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்வோம்.

இந்த இன்டெக்ஸ் எண் என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய வேரியபில்கள் அடங்கிய ஒரு தொகுதியில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும், ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஏற்படும் மாற்றத்தைப் குறிக்கும். எனவே, விலை இன்டெக்ஸ் என்பது உற்பத்தியாளர் அல்லது நுகர்வோர் செலுத்தும் விலையின் அளவில் ஏற்படக்கூடிய மொத்த மாற்றத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒன்றாகும். இந்திய சூழலைப் பொறுத்தவரை, டபிள்யூபிஐ மற்றும் 4 சிபிஐ இன்டெக்ஸ்கள் உள்ளிட்ட 5 தேசிய இன்டெக்ஸ்கள் தாம் பணவீக்க அளவீட்டுக்கு கணக்கிடுகிறது.

டபிள்யூபிஐ இன்டெக்ஸ்

டபிள்யூபிஐ இன்டெக்ஸ், மொத்த விற்பனை சந்தையில் வாங்கப்படும் அல்லது விற்கப்படும் பொருட்களின் சராசரி விலை ஏற்ற இறக்கங்களை பிரதிபலிப்பதாகும். இந்தியாவில் டபிள்யூபிஐ இன்டெக்ஸ், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகரின் அலுவலகத்தால் வெளியிடப்படுகிறது. மேலும், டபிள்யூபிஐ இன்டெக்ஸுக்கான தகவல், அதன் உருவாக்கத்தில் பங்கு பெற்றிருக்கும் 676 பொருட்களை கருத்தில் கொண்டு, வார அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. டபிள்யூபிஐ இன்டெக்ஸை மதிப்பிடுவதற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் பல்வேறு பண்டங்களும் பிரதான பொருள், எரிபொருள் மற்றும் மின்சக்தி, மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என்ற பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.

உணவுப் பொருட்கள், உணவு அல்லாத பொருட்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை டபிள்யூபிஐ இன்டெக்ஸ் மதிப்பீட்டுக்கான பிரதான பொருட்கள் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. எரிபொருள் மற்றும் மின்சக்தி பிரிவு, விளக்குகள் மற்றும் உராய்வு காப்புப் பொருட்கள், மின்சாரம், நிலக்கரி சுரங்கத் தொழில் மற்றும் கனிம எண்ணை ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

உற்பத்தி செய்யப்பட்டப் பொருட்கள் பிரிவின் கீழ், உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், புகையிலை மற்றும் புகையிலை சேர்க்கப்பட்ட பொருட்கள்; மரம் மற்றும் மரத்தாலான பொருட்கள்; துணி வகைகள், பேப்பர் மற்றும் பேப்பராலான பொருட்கள்; அடிப்படை உலோகங்கள் மற்றும் உலோகக்கலவைகள்; ரப்பர் மற்றும் ரப்பராலான பொருட்கள்; இவை அல்லாத இன்ன பிற பொருட்கள் ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், மொத்த விற்பனை விலை இன்டெக்ஸ் (டபிள்யூபிஐ) சேவைகளுக்கான கட்டணங்களை உள்ளடக்குவதில்லை.

மேலும், டபிள்யூபிஐ இன்டெக்ஸ், பொருட்களின் பொதுவான விலை அளவில் ஏற்படும் மாற்றங்களை மொத்த விற்பனை கண்ணோட்டத்திலேயே பார்ப்பதினால், கடைநிலை நுகர்வோர் சுமக்க வேண்டிய உண்மையான பாரத்தை அது கருத்தில் கொள்ள தவறி விடுகிறது.

இந்திய நாட்டில் பணவீக்கத்தை ஆராய்வதற்கான பிரதான அளவீடாக மத்திய அரசினால் உபயோகிக்கப்படும் டபிள்யூபிஐ, சிபிஐ, விலைவாசியில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை விநியோக நிலையின் தொடக்கத்திலேயே கணக்கிடக்கூடியதாகும்.

இதற்கு அப்படியே நேர்மாறாக, சிபிஐ இன்டெக்ஸ், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் மேல் ஒரு வெயிட்டட் ஆவரேஜை செயல்படுத்தி கணக்கிடப்படுகிறது. சிபிஐ கணக்கீடானது, விலை மாற்றங்கள் மற்றும் கடைநிலை நுகர்வோரை பாதிக்கக்கூடிய நிஜமான பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொள்கிறது. எனவே, சிபிஐ இன்டெக்ஸ் என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட நுகர்வோர் கூட்டத்தால் வாங்கப்படும் குறிப்பிட்ட சில பொருட்கள் மற்றும் சேவைகளின் சில்லறை விலைகளில் ஏற்படும் மாற்றங்களின் பிரதிபலிப்பாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+