வாட் என்றால் என்ன?

வால்யூ ஆடெட் டாக்ஸ் (வாட்) என்பது, பொருட்களின் கொள்முதல் விலையின் மீது விதிக்கப்படும் வரியாகும். இழப்பீட்டு வரி வகைகளுள் ஒன்றான வால்யூ ஆடெட் டாக்ஸ், ஒரு மறைமுக வரியாகும். பொருட்கள் மற்றும் இதர சேவைகளின் கடைநிலை நுகர்வோரின் மீது பெரும் சுமையாக அழுத்தி வந்த விற்பனை வரியின் உயர்வை சரிகட்டுவதற்காகவே இவ்வரி முக்கியமாக விதிக்கப்படுகிறது.

இவ்வரி ஒரு பொருளின், கூடுதல் மதிப்பின் மீது மட்டுமே விதிக்கப்படுகிறதேயன்றி, ஒட்டுமொத்த பொருளுக்கும் விதிக்கப்படுவதில்லை. மேலும், இந்த மறைமுக வரி, மதிப்பூட்டல் சங்கிலி அதாவது மூலப் பொருள் வழங்குநர், உற்பத்தியாளர், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் ஆகியோர் மீது ஒரே சீராக முறையில் விதிக்கப்பட்டு வருகிறது. வாட் வரியின் விகிதம், வாங்கப்படும் பண்டத்தைப் பொறுத்து இருக்கும்.

வாட் என்றால் என்ன?

வாட் வரியின் கணக்கீடு:

வாட் விதிப்பின் சமச்சீர் விகிதம் சுமார் 15% என்று வைத்துக் கொண்டு வாட் வரி கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பொருளின் உற்பத்தியாளர், சுமார் 100 ரூபாய் மதிப்பிலான சில மூலப்பொருள்களின் ஆதாரத்தைக் கொண்டிருந்தால், அந்த மூலப்பொருளின் வழங்குநர், அரசாங்கத்துக்கு சுமார் 15 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டும். பின்னர், மொத்த வியாபாரி இந்த 115 ரூபாயில் சுமார் 10% வரையிலான மார்ஜினில், சுமார் 19 ரூபாய் வாட் வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.

அதன் பின், உற்பத்திப் பொருள் சில்லறை வியாபாரிக்கு சுமார் 145.5 ரூபாயில் விற்கப்படும். பின் அவர் சுமார் 10% மார்ஜின் வைத்து, அப்பொருளின் விலையை சுமார் 160 ரூபாயாக நிர்ணயிப்பார். இதிலும் அவர் 15% வாட் வரியாக 24 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, கடைநிலை நுகர்வோர்கள் வாங்கும் போது, அப்பொருளின் இறுதி விலை சுமார் 184 ரூபாய் ஆக உயர்ந்திருக்கும்.

வால்யூ ஆட்டெட் டாக்ஸ் மற்றும் அதன் விளைவுகள்

விற்பனை வரி விதிப்பு

விற்பனை வரி விதிப்பில் சந்திக்கக்கூடிய இன்னல்களை அகற்றுகிறது: மதிப்பூட்டல் சங்கிலியின் பல்வேறு சார்புகள் ஒவ்வொன்றும் வாட் பங்குகளுக்கு தாங்களே முழுக்க முழுக்க பொறுப்பேற்றுக் கொள்வதினால், திறன் குறைவுகள், முன்னர் விதிக்கப்பட்ட விற்பனை வரியினால் எழக்கூடிய இரட்டை வரி விதிப்பின் விளைவாக உயரக்கூடிய அதிகப்படியான விலைகள் போன்றவை சுத்தமாக அகற்றப்பட்டு விடுகின்றன.

வரி தவிர்ப்பு

வரி தவிர்ப்பு ஏதுமின்றி செயல்பட உதவுகிறது: வாட் விதிப்பின் மூலம் இடையீட்டாளர்களால் பொய்யாக உறுதியளிக்கப்படும் வரி விலக்குகளின் அடிப்படையிலான வரி தவிர்ப்பு பிரச்சினைகளைக் களைய உதவுகின்றது.

எளிமையான கணக்கீடு

வரி இணக்கத்தை இலகுவாக்கி எளிதான வரி கணக்கீட்டுக்கு வழி வகுக்கிறது: ஒரு பொருளின் மதிப்புக்கு மட்டுமே வாட் வரி விதிக்கப்படுவதனால் இதன் பல்வேறு சார்புகளே பொறுப்பாகக் கொள்ளப்படுகின்றன. இதனால் வரி இணக்கம் இலகுவாகுவதோடு, வாட் கணக்கீடும் எளிமையாக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+