நாம் கிரெடிட் கார்டு பரிசு புள்ளிகளின் பலன்களை ஏன் பெறுவதில்லை??

உங்கள் கிரெடிட் கார்டில் உள்ள பரிசு புள்ளிகளுக்கு ஈடான பொருட்களை கடைசியாக எப்போது கோரினீர்கள்? கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கிடைக்கப் போகும் பரிசு பொருட்களில் ஈர்க்கப்பட்டு தான் அதனை நாம் வாங்குகிறோம். அப்படி வாங்கிய நாம் பல நேரம் அந்த பரிசு புள்ளிகளுக்கு ஈடான பொருட்களை பெருவது இல்லை. இது ஆச்சரியமாக இருந்தாலும் அது தான் உண்மை. இந்த புள்ளிகளுக்கான பொருட்களை கோரவில்லை என்றால் அது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். ஏன் இந்த புள்ளிகளுக்கான பொருட்களை நாம் கோருவதில்லை என்பதை பற்றியும் அதை எப்படி தவிர்ப்பது என்பதை பற்றியும் விலாவரியாக பார்க்கலாம்.

முதலில் இந்த புள்ளிகளுக்கான பொருட்களை நாம் ஏன் கோருவதில்லை என்பதற்கு உள்ள பல காரணங்களை இப்போது பார்க்கலாம்:

நாம் கிரெடிட் கார்டு பரிசு புள்ளிகளின் பலன்களை ஏன் பெறுவதில்லை??

1. பரிசுகளில் பயன் இல்லாமல் இருப்பது

உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளில் விருப்பம் இல்லாமல் இருப்பது. உங்களுக்கு வெளியே ஹோட்டல்களில் சாப்பிட பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கிடைத்த பரிசுகளோ ஹோட்டல்களில் சாப்பிட தள்ளுபடி கூப்பனாக இருக்கலாம். நீங்கள் யோகாவை விரும்பலாம், ஆனால் உங்களுக்கு கிடைத்த பரிசு ஸ்பா சிகிச்சைகளுக்கு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். முக்கால்வாசி நேரம் நாம் விரும்பிய பரிசுகள் நமக்கு கிடைக்காமல் போவதால் அதை நாம் கோராமல் விட்டு விடுவோம்.

இதனை எப்படி தவிர்ப்பது

புது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதே அந்த கார்டுக்கு உண்டான பரிசுகளை படித்து தெரிந்து கொண்டால் மேற்கூறிய பிரச்சனையை தவிர்க்கலாம். பொதுவாக இந்த விவரத்தை அந்த கிரெடிட் கார்டு நிறுவனம் உங்களுக்கு அளிக்கும். அதனை பொறுத்து உங்களுக்கு தேவையான கார்டை வாங்கிக் கொள்ளவும்.

2. சரியான புரிதல் இல்லாமை

பரிசு புள்ளிகளுக்கான பல பொருட்கள் கோரப்படாமல் போவதற்கு மற்றறொரு காரணம் அதனை பற்றிய விவரம் தெரியாமல் போவதால் தான். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது அதில் சேரும் புள்ளிகளை பொறுத்து பரிசுகள் கிடைக்கும் என்ற விஷயமே பலருக்கு தெரியாது. பல நேரம் வங்கிகளில் இருந்து வரும் தள்ளுபடி விவரங்கள் சம்பந்தப்பட்ட அழைப்புகளை நாம் நிராகரித்து விடுவோம். அப்படி எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் பரிசுகளின் அமைப்பை பற்றி வரும் விவரத்தை பற்றியும் நாம் ஒழுங்காக படிப்பதில்லை.

இதனை எப்படி தவிர்ப்பது

பரிசுகளின் அமைப்பு பற்றி உங்களுக்கு புரியவில்லை என்றால் கிரெடிட் கார்டை பயன்படுத்திய சிலரிடம் சென்று அதன் விவரத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர் சேவையிடமும் தொடர்பு கொள்ளலாம், அவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தகவலை கொடுப்பார்கள். மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் வரும் தள்ளுபடிகளின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான தள்ளுபடிகள் கிடைக்கும் போது அதனை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?

3. பரிசு புள்ளிகள் இருப்பதில்லை

உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்தின் பழைய வாடிக்கையாளராக நீங்கள் இருக்கலாம். மேலும் கிரெடிட் கார்டு வாங்கிய போது பரிசு புள்ளிகள் என்று ஒன்று இல்லாமலேயே இருந்திருக்கலாம். முன்னாட்களில் வாடிக்கையாளர்களாக ஆனவர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை இது. போன தலைமுறை ஆட்களான அவர்களுக்கு புதியதை ஆய்வு செய்ய தோன்றுவதில்லை. இன்றைய நவீனத்துவத்தில் இருந்து அவர்கள் சற்று விலகி இருப்பதால் அவர்களுக்கு வரும் தகவல் சற்று மெதுவாக தான் வந்து சேரும்.

இதனை எப்படி தவிர்ப்பது

உங்கள் புரிதலை நீங்கள் துரிதப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும். கணிப்பொறியின் அடிப்படை அறிவையும் கைபேசி உபயோக்கிப்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இதனை பற்றி உங்களுக்கு யாரேனும் சொல்லி கொடுப்பார்கள் என்றால் அவர்களிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள்.

4. விலை உயர்ந்தவையாக இருக்கலாம்

பரிசுகளின் அமைப்பை நாம் ஆய்வு செய்யும் போது அதில் இருக்கும் ஏதவாது ஒரு பொருளின் மீது நம் கவனத்தை பதித்திருப்போம். ஆனால் அதுவோ மிகுந்த விலை உயர்ந்த பொருளாக இருக்கலாம். இந்த பொருளை நாம் அடைய அதிக பணத்தை நம் கிரெடிட் கார்டு மூலமாக செலவு செய்திருக்க வேண்டும். அப்படி முடியாமல் போவதால் சற்று ஏமாற்றம் அடைவதோடு மட்டுமல்லாமல் வேறு பரிசுகளின் மிதும் ஆர்வம் இருக்காது.

இதனை எப்படி தவிர்ப்பது:

பரிசுகள் பல வகையில் இருக்கின்றன. ஒன்றை அடைய முடியாமல் போவதால் நாம் மற்றவரை பற்றி கவனிக்க தவறக்கூடாது. உங்களால் அடைய முடிந்ததை தேர்ந்தெடுங்கள், முக்கியமாக இலவசமாக கிடைக்கிறதா என்பதை கவனியுங்கள். இது உங்கள் செலவை குறைக்கும். மேலும் இந்த தள்ளுபடி எல்லாம் ஒரு முறை மட்டும் போடுவது கிடையாது. இவ்வகை தள்ளுபடிகள் திரும்ப திரும்ப கொடுத்துக் கொண்டே இருக்கப்படும்.

5. தள்ளுபடி

நீங்கள் பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினாலும் அவர்கள் அளிக்கும் பரிசு பொருட்களின் மீது உங்களுக்கு நாட்டம் இருப்பதில்லை.

இதனை எப்படி தவிர்ப்பது:

இந்த காரணத்திற்காக உங்கள் புள்ளிகளுக்கு உரிய பொருட்களை கோராமல் விடக்கூடாது. ஏனென்றால் அந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் வேறு யாரவது பயன்படுத்தலாம் அல்லவா?

முடிவுரை:

மேற்கூறிய டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் பரிசு புள்ளிகள் காலாவதியாவதற்கு முன் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். அவை உங்களின் சம்பாத்தியம் ஆகும். அதனை அப்படியே விட்டு விட கூடாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+