மாணவர்கள் வெளிநாடுகளில் தங்களது கல்வியினை தொடர திட்டமிடும் போது, பயண தொடர்பான ஆவணங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தேவையான பொருட்களை பொதி செய்தல் போன்றவற்றில் முன்னெச்சரிக்கையாக பல பிரச்சனையை சிந்திக்கின்றனர். ஆனால் வரியிலிருந்து தம்மை காப்பாற்ற, சட்டத்துடன் இணைப்பை ஏற்படுத்த, நிதி திட்டமிடல் அவசியம் என்பது அவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.
ஏற்கனவே நீங்கள் ஒரு என்.ஆர்.ஐ மாணவராக இருந்தால் அல்லது என்.ஆர்.ஐ மாணவராவதற்குரிய தயார் நிலையில் இருந்தால், ஒரு சில விஷயங்களை நினைவில் வைத்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
உள்நாட்டு சேமிப்பு வங்கி கணக்கு
என்.ஆர்.ஐ மாணவர்கள் தங்களது உள்நாட்டு சேமிப்பு வங்கி கணக்குகளை கண்டிப்பாக மூட வேண்டும். உள்நாட்டு சேமிப்பு வங்கி கணக்கின் மீது பிடிக்கப்படும் வரி தொகையானது (TDS), வெளிநாட்டில் வசிப்போருக்கான சேமிப்பு வங்கி கணக்கின் (NRO Savings Account) மீது பிடிக்கப்படும் வரி தொகையை விட மிக மிக குறைவானது. எனவே வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பலர் உள்நாட்டு சேமிப்பு வங்கி கணக்குகளை தொடர்ந்து வைத்திருக்கின்றனர்.ஆனால் ஒரு இந்தியர் என்.ஆர்.ஐ ஆன பின்னர், உள்நாட்டு சேமிப்பு வங்கி கணக்கை வைத்திருப்பது சட்டவிரோதமாகும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
என்.ஆர்.ஓ வைப்பிற்கு பதிலாக என்.ஆர்.இ வைப்பு நிதியே பயனுள்ளது
என்.ஆர்.ஐ மாணவர்கள் கல்லூரி நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் வேலை செய்து அதன் மூலம் பெறும் ஊதியத்தை அல்லது வருமானத்தை சொந்த நாட்டிற்கு அனுப்பி ஒரு NRE நிலையான வைப்பு கணக்கில் சேமிப்பது அர்த்தமுள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
என்.ஆர்.ஓ மற்றும் என்.ஆர்.இ நிலையான வைப்பு கணக்குகளுக்கு ஒரே அளவு வட்டி விகிதம் வழங்கபடுகிறது. ஆனால் என்.ஆர்.இ வைப்பு மீது கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் என்.ஆர்.ஓ வைப்பு மீது கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விதிப்பு உள்ளது.
இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தச் சான்றிதழ் ( DTAA சான்றிதழ்)
நீங்கள் வசிக்கும் நாடு இந்தியாவுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்திருந்தால், இந்தியாவில் நீங்கள் குறைந்த அளவே வரி (TDS) செலுத்த வேண்டி இருக்கும். உதரணமாக, நீங்கள் சரியான முறையில் DTAA கடிதம் தயார் செய்து அதை உங்கள் வங்கியில் சமர்ப்பித்தால், அவர்கள் 30% TDSற்க்கு பதிலாக என்.ஆர்.ஓ மீது உள்ள நிலையான வரி விகிதம் 10% TDS வசூலிப்பார்கள்.
ஒரு மாணவராக இருந்து, வேலை செய்து, நீங்கள் வசித்து வரும் நாட்டில் வரி செலுதுபவராக இருந்தால் இது உங்களுக்கும் சாத்தியமாகும். நீங்கள் வசித்து வரும் நாட்டில் உங்கள் வருமானம் மீது ஏற்கனவே வரி விதிக்கப்படுகிறது என்றால், அதே வருமானம் மீது மீண்டும் இந்தியாவில் வரி விதிக்கப்பட கூடாது என்பதை DTAA கடிதம் குறிப்பிடுகிறது.
வரி விலக்கு வருமான பிரிவுகள்
ஒரு இந்திய மாணவர், என்.ஆர்.ஐ ஆகும் போது, தனது அந்நிய செலாவணி வருவாய் மற்றும் இதர வருமானம் போன்றவை மீது இந்தியாவில் வரி விதிக்கப்படமாட்டாது. வருங்கால வைப்பு நிதி கணக்கை (PPF) தொடர்ந்து வைத்திருக்க முடியும்.
ஒரு என்.ஆர்.ஐ மாணவர் எற்கனவே உள்ள தனது வருங்கால வைப்பு நிதி கணக்கை அதன் முதிர்வு காலம் வரை என்.ஆர்.ஓ அல்லது என்.ஆர்.இ கணக்கிலிருந்து தொடர்ந்து செலுத்த முடியும். ஆனால் ஏற்கனவே என்.ஆர்.ஐ ஆன ஒருவர் புதிதாக வருங்கால வைப்பு கணக்கு ஒன்றை திறந்தால் அது சட்டவிரோதமானது.
என்.ஆர்.இ/என்.ஆர்.ஓ கணக்கு
இருவர் சேர்ந்து ஒரு என்.ஆர்.இ/என்.ஆர்.ஓ கணக்கு வைத்திருந்தால், இரண்டாவது நபர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க முடியும்.
உங்கள் பெற்றோர் அல்லது மனைவி இந்தியாவில் வசித்து, இரண்டாவது கூட்டு நபராக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த கணக்கு ஒரு என்.ஆர்.ஓ கணக்காக கருதப்பட்டு, அதன் மீது அதிக அளவு வரி (TDS) விதிக்கபடும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications