ஆன்லைன் மூலம் பயணக் காப்பீடு பெறுவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வணிக வேலையாக அல்லது விடுமுறைக்கு வெளிநாடு செல்ல திட்டமிடும் போது, பயணக்காப்பீடு தவிர்க்க முடியாத மற்றும் மிக முக்கியமான ஒன்று. பயணக்காப்பீட்டை பெற்றுக்கொள்ளும் செயல்முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது, சந்தடிகள் இல்லாமல், எளிதான முறையில் ஆன்லைன் மூலம் இதைப் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

இருப்பினும், நேரடியாக காப்புறுதி நிறுவனத்திலிருந்து இதை வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டுமோ, அவை அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கும் போதும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பயணக்காப்பீடு வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய, தவிர்க்க முடியாத சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

1. திட்ட வகை (plan type) மற்றும் கவரேஜ் டைப்
2. திட்டத்திலுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் அதற்கான செலவு
3. பயணம் மற்றும் மருத்துவம் தொடர்பான அம்சங்கள்
4. புதுப்பித்தல்

ஆன்லைன் மூலம் பயணக்காப்பீடு பெறுவதற்கான நடைமுறைகள்.

பயணக்காப்பீடு

பயணக்காப்பீடு

பயணத் தேதிக்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே ஆன்லைன் மூலம் பயணக்காப்பீட்டை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சில காப்பீட்டு நிறுவனங்கள் கட்டணத் தொகையை செலுத்திய உடனே, விண்ணப்பத்தை பரிசீலித்து காப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து விடும். ஆனால் இது எல்லா நிறுவனங்களிலும் சாத்தியமில்லை. சில காப்பீட்டு நிறுவனங்கள், உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, பயணத்தின் போது தேவையான பாலிசி டாக்குமென்டுகளை கையில் வழங்குவதற்கு ஒரு வார காலம் தேவைப்படும்.

காப்புறுதி நிறுவனம்

காப்புறுதி நிறுவனம்

உங்கள் வாடிக்கையான காப்புறுதி நிறுவனம் எதுவோ, அந்த இணையத்தளத்திலே ஆன்லைன் பயணக்காப்பீட்டை வாங்குங்கள்: நீங்கள் வாடிக்கையாக காப்பீடு வாங்கும் நிறுவனத்திடம், உங்களுக்கு பொருத்தமான, பயணத்திற்கு தேவையான அம்சங்கள் அடங்கிய முறையான பயணகாப்பீட்டுத் திட்டம் இருந்தால், அவர்களிடமே அதை பெற்றுக்கொள்ளுங்கள், இதனால், நம்பகத்தன்மை அடிப்படையில் சலுகை விலையில் பெற்றுகொள்வதற்கு வாய்ப்பு உண்டு.

திட்டத்தை தேர்வு செய்ய முறை
 

திட்டத்தை தேர்வு செய்ய முறை

பயணிகள் மற்றும் கவரேஜ் தேவைகளை பட்டியலிடுங்கள்: பயணம் செய்வோர் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட கவரேஜ் தேவைகள் அடிப்படையில் உங்களுக்கு பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் இதன் அடிப்படையிலே, செலுத்த வேண்டிய ப்ரீமியத் தொகை கணக்கிடப்படும். அதேபோல், மருத்துவம் சம்பந்தமான தேவைகள் அடிப்படையிலும், காப்புறுதி நிறுவனம் ப்ரீமியத் தொகையை நிர்ணயிக்கும். நீங்கள் அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்பவராக இருந்தால், சிங்கில் (single) ட்ரிப் இன்ஸ்சூரன்ஸ் ப்லான் பதிலாக மல்ட்டி (multi) ட்ரிப் இன்ஸ்சூரன்ஸ் ப்லானை தேர்வுசெய்து சிறந்தது.

திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவை

திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவை

குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் அனைத்திற்கும் போதுமான கவரேஜ் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்: பாலிசி அல்லது ப்ரிமீயம் தொகையை முடிவுசெய்வதற்கு முன்னர், உங்களுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் அந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எதிர்பாராத சம்பவங்களுக்கு கவரேஜ்

எதிர்பாராத சம்பவங்களுக்கு கவரேஜ்

அவசர மருத்துவச் செலவுகள், லக்கேஜ், விமானத்தை தவறவிடுதல், கார் விபத்துக்கள், இயற்கை விபத்துக்கள் போன்ற அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அதேபோல் உங்கள் வீட்டுப் பாதுகாப்பையும் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பதையும் ஆய்வுசெய்து கொள்ளுங்கள். இருப்பினும் பயணத்திற்கு என்ன அவசியமோ அதற்கு பொருத்தமான திட்டத்தை தேந்தெடுப்பதால், ப்ரீமியச் செலவைக் குறைத்துக்கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தல்

தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தல்

சில நோய்கள் சம்பந்தமான அம்சங்கள் உள்ளடக்கப்படுவதற்கு அதற்குத் தேவையான விபரங்களை வாடிக்கையாளர்கள் காப்புறுதி நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். அதே போல், காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது உடல் ஆரோக்கியம் பற்றிய ஆதாரங்களை சமர்ப்பித்தல் உங்களது கடமை.

பாதுகாப்பான இணையத்தள

பாதுகாப்பான இணையத்தள

காப்பீட்டு கவரேஜ், ப்ரீமியத் தொகை மற்றும் கிடைக்கக்க்கூடிய நன்மைகள் பற்றி உங்களுக்கு திருப்தி என்றால், உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி சம்பந்தமான தகவல்களை பூர்த்தி செய்யும் முன், நிறுவனத்தின் இணையத்தள சர்வர் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

கன்ஃபெர்மேஷன் மெயிலை உறுதிசெய்தல்

கன்ஃபெர்மேஷன் மெயிலை உறுதிசெய்தல்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலமாக ப்ரீமியம் செலுத்திய பின்னர், உங்களுக்கு கன்ஃபெர்மேஷன் மெயில் வரும் அதை உறுதி செய்ய வேண்டும். காப்பீடு செய்திருக்கும் நபர், தேவையான ஆவணங்களோடு சேர்த்து, கன்ஃபெர்மேஷன் மெயில் காபியையும் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to purchase travel insurance online?

When planning a trip abroad either for business or a holiday travel insurance cannot be neglected.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X