அதிக லாபம் தரும் பங்கிணைந்தக் காப்பீட்டுத் திட்டம் (ULIP)!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கிணைந்தக் காப்பீட்டுத் திட்டம் (ULIP) இன்றைய நிதிநிலைமையில் மிகவும் பயனுள்ள காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்திட்டம் காப்பீட்டு கூறுகள் மற்றும் முதலீடு கூறுகளை ஒருசேர கொண்டுள்ளதால் சிறப்பானதாக உள்ளது. இந்த திட்டத்தில் காப்பீடு வாங்கும் போது, உங்கள் பணம் ஒரு பகுதியாக காப்பீட்டு நிதியிலும், மீதமுள்ள பணம் நிதி சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதின் விளைவாக சந்தைகளின் செயல்பாட்டை பொறுத்து அதிகமான லாபத்தை ஈட்ட முடியும்.

 

இத்திட்டம் குறிப்பிட்ட இடைவெளியில் விருப்பமான நிதித்தேர்வுகள் செய்ய முடியும் என்பதால் மிகவும்நெகிழ்வான திட்டமாக கருதப்படுகின்றன. தேவைப்பட்டால் விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்கள் யூலிப் (ULIP) திட்டத்தில் இருந்து பணம் திரும்ப பெற முடியும்.

திட்டத்தின் கால அளவு

திட்டத்தின் கால அளவு

குறைந்தபட்ச காலமாக 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் யூலிப் திட்டத்திலிருந்து பணம் திரும்ப எடுக்க முடியும். 5 ஆண்டுகள் நிறையும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது. ஆனால் சில திட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பணம் திரும்பப்பெற முடியும். குறைந்தபட்ச கால உட்கூறு பற்றிய ஆவணங்களை தெளிவாக படிக்கவும்.

தவணை முறையில் எவ்வளவு பணம் எடுக்கமுடியும்?

தவணை முறையில் எவ்வளவு பணம் எடுக்கமுடியும்?

மொத்த பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே திரும்ப பெற முடியும். எவ்வேளையிலும் முழுத் தொகையை திரும்ப பெற முடியாது.அவ்வாறு முழுத் தொகையை திரும்ப பெற வேண்டுமெனில் காப்பீட்டுத் திட்டத்தை ஒப்படைக்க வேண்டும்.

பொதுவாக, எல்லா நேரங்களிலும் ஒரு ஆண்டு தவணைக்குச் சமமான அளவு தொகை யூலிப்பில் இருக்கவேண்டும். உதாரணமாக உங்கள் கணக்கில் ஒரு லட்சமும், ஆண்டு தவணைத்தொகை ரூ .25, 000 என்றால், நீங்கள் அதிகபட்ச மாக ரூ 75,000 திரும்ப பெற முடியும்.

 

 

குறைந்தபட்ச அளவு
 

குறைந்தபட்ச அளவு

அதிகபட்ச அளவைப்போன்றே குறைந்தபட்ச அளவும் இருக்கிறது. பொதுவாக யூலிப் நிதியில் இருந்து ரூ1000 குறைந்தளவு கடன் பெறலாம். ஆனால் அது திட்டத்திற்குள் வேறுபடும்.

முதிர்ச்சித் தொகை

முதிர்ச்சித் தொகை

ஒவ்வொரு முறையும் பணத்தை திரும்ப பெரும் போது, முதிர்ச்சித் தொகை குறைந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட முறை வரை இலவசமாக பணத்தை திரும்ப பெற முடியும். அதற்கு பின்னர் ஒவ்வொரு முறையும் பணத்தை எடுக்கும்போது குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தவேண்டும்.

தவணைத் முறையில் பணம் எடுத்தல்

தவணைத் முறையில் பணம் எடுத்தல்

தவணைகளை சரியாக கட்டிவந்தால் மட்டுமே தவணைத்தொகையில் இருந்து பணம் எடுக்க முடியும். தவணைத்தொகை கட்டுவதில் எதாவது முரண்பாடு இருந்தால் யூலிப்பில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் உண்டாகும்.

முக்கிய ஆலோசனைகள்

முக்கிய ஆலோசனைகள்

இந்த திட்டம் எவ்வாறு வேலை செய்கிறது என தெரியும் வேளையில் நல்ல திட்டமாக விளங்குகிறது. ஆனால் வல்லுனர்கள், முதிர்ச்சித்தொகை குறைவதால் இடையில் பணத்தை திரும்ப எடுக்கவேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். எனவே, பணத்தை திரும்ப எடுப்பதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ULIP திட்டம் நீண்ட காலத் திட்டம் என்பதால் பகுதிப்பணத்தை எடுத்தல் ஒன்றும் தவறு இல்லை. ஆகவே உங்கள் காப்பீட்டுத்திட்டங்களை சரிபார்க்கவும். தேவை ஏற்படுமெனில் மட்டுமே பணத்தை காப்பீட்டில் இருந்து எடுக்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is it a good idea to partially withdraw from a ULIP?

Unit Linked Insurance Plans or ULIPs are considered to be one of the most effective insurance tools available to us today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X