சென்னை: எல்ஐசி ஜீவன் ச்சாயா, மானியம் உத்தரவாதம் மற்றும் காப்புறுதி கொண்ட குழந்தை நலத்திட்டமாகும். இத்திட்டம் பாலிஸியின் முழு தவணைக்காலத்திலும், காப்புறுதி அளிக்கப்பட்டவருக்கு இறப்பிற்கெதிரான வாழ்க்கைக் காப்பீடை (Life insurance) வழங்கக்கூடியதாகும். பாரம்பரியமான இதர எல்ஐசி திட்டங்களைப் போன்றே இத்திட்டமும் மாதாந்திர, காலாண்டு, வருடாந்திர அல்லது இசிஎஸ் போன்ற பேமெண்ட் மோட்களில் ஒன்றை தேர்வு செய்ய பாலிஸிதாரரை அனுமதிக்கிறது.
குழந்தை நலத்திட்டமாக செயல்படும் இந்த பாலிஸி, காப்புறுதி அளிக்கப்பட்டவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை பொருட்படுத்தாது, எஸ்.ஏ மதிப்பில் சுமார் 25 சதவீதத்தை பாலிஸி காலத்தின் ஒவ்வொரு கடைசி நான்கு வருட காலத்தின் முடிவிலும் வழங்குகிறது. இந்த தொகையை, குழந்தைக்கான பல்வேறு நிதித்தேவைகளான பள்ளிக்கட்டணங்கள், பல்வேறு தகுதித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், மேற்படிப்புகள் போன்றவற்றிற்கு அக்குழந்தையின் பெற்றோர் உபயோகித்துக் கொள்ளலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது கிடைக்கக்கூடிய ஆதாயம்
இந்த பாலிஸியின் வாடிக்கையாளருக்கு கட்டாயம் கிடைக்கக்கூடியதாக உறுதியளிக்கப்பட்டுள்ள ஆதாயம் என்னவெனில், காப்புறுதி அளிக்கப்பட்டவர் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உறுதியளிக்கப்பட்ட தொகையில் சுமார் 25 சதவீதத்தை பாலிஸி காலத்தின் ஒவ்வொரு கடைசி நான்கு வருட காலத்தின் முடிவிலும் கிடைக்கும்படி செய்வதே ஆகும். மேலும், காப்புறுதி அளிக்கப்பட்டவர் உயிருடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த பாலிஸி, அவ்வப்போது அறிவிக்கப்பட்டு ஒன்று சேர்ந்த போனஸ் தொகையை பாலிஸியின் மெச்சூரிட்டியின் போது மொத்தமாக வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இறக்க நேர்ந்தால் கிடைக்கக்கூடிய ஆதாயம்
ஒருவேளை பாலிஸிதாரர் அல்லது காப்புறுதி அளிக்கப்பட்டவர் பாலிஸியின் தவணைக்காலம் வரை உயிருடன் இருக்க இயலாமல், துரதிர்ஷ்டவசமாக இறக்க நேர்ந்தால், இப்பாலிஸியின் நாமினி, உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு ஈடானதொரு தொகையை உடனடி அடிப்படையில் பெறக்கூடிய தகுதியைப் பெறுவார்.
போனஸ் தொகை
லாபத்துடன் கூடிய குழந்தை நலத்திட்டமான எல்ஐசி சாயா, ஒவ்வொரு 1000 ரூபாய்க்கான எஸ்.ஏ. மதிப்பிற்கு உரியனவாக அறிவிக்கப்பட்ட ரெவர்ஷனரி போனஸ்களாக பெற்ற அனைத்தையும் ஒன்று சேர்த்த போனஸ் தொகையை பாலிஸி தவணைகாலத்தின் மெச்சூரிட்டியின் போது வழங்குகிறது. ஒருவேளை உங்கள் பாலிஸி அந்நிறுவனத்தில் பிரத்யேகமாக குறிப்பிடப்பட்டதொரு உரிமைகாலத்தை நிறைவு செய்து விட்டால், அதற்குரிய கூடுதல் போனஸும் பாலிஸிதாரருக்கு வழங்கப்படுகிறது.
மேலதிகக் கட்டணத்தில் கூடுதல் பாதுகாப்பு
பாலிஸிதாரர் அவரது நிதித் தேவைகளைப் பொறுத்து, குறிப்பிட்ட சில விருப்ப ஆதாயங்கள் தனக்குக் கிடைக்கும்படி பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், அத்தகைய ஆதாயங்களைப் பெற வேண்டுவோர், அதற்கான மேலதிகக் கட்டணங்களை செலுத்த வேண்டியது அவசியம்.
பாலிஸி சரணடைதல்
விரைவான சரணடைதல் மற்றும் பாலிஸியை மூன்று வருடத்திற்கேனும் தொடர்ந்திருத்தல் போன்ற தகுதிகளின் அடிப்படையில் பாலிஸி சரணடைய அனுமதிக்கப்படுகிறது. பாலிஸி 3 வருடங்களுக்கேனும் தொடரப்பட்டிருக்கும் பட்சத்தில், பாலிஸிதாரர் விரும்பினால் அதனை சரணடைய மனு தாக்கல் செய்யலாம்.
உறுதியான எஸ்.வி என்பது முதல் ப்ரீமியம் தொகை, போனஸ் இல்லா பேஸிக் ப்ரீமியம் தொகையில் 30 சதவீதமாகும்


Click it and Unblock the Notifications