வருமான வரித் தாக்கல் செய்ய எளிமையான நடைமுறைகள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் நெருங்கும் நிலையில் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், வருமான வரி தாக்கல் செய்யும் வழிமுறைகள் மீது குழப்பமாக உள்ளதால் அதனை கண்டு அச்சமடைகின்றனர். ஆனால் துறை சார்ந்த வல்லுனர்களோ, அடிப்படை வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், ஒரு மணிநேரத்திற்கு உள்ளாகவே மொத்த பணிகளையும் முடித்து விட முடியும் என தெளிவுபடுத்துகின்றனர்.

ஐந்து லட்சதிற்கு அதிகமாக வருமானம் பெருபவர்கள் தற்போது இணையம் ஊடாக படிவத்தை செலுத்த முடிவதின் மூலமாக அதிக அளவிலான வேலைகள் குறைகின்றது.

சரியான படிவத்தை தேர்ந்தெடுத்தல்

சரியான படிவத்தை தேர்ந்தெடுத்தல்

சம்பளம் மற்றும் வட்டி மூலம் வருவாய் ஈட்டுவோர் தேர்ந்தெடுக்க வேண்டிய படிவம் ITR-1 (Sahaj) and ITR-2. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின் படி, 5000 ரூபாயிக்கும் மேல் வரி விலக்கு பெற்றவர்கள் ITR-1 (Sahaj) என்ற அடிப்படை படிவத்தை பயன்படுத்தமுடியாது. இதுவரை வருமான வரித்துறை இதை பற்றி தெளிவான விளக்கம் அளிக்காத காரணத்தினால், பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

ITR-2 படிவம்

ITR-2 படிவம்

வருமான வரித்துறை விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக ஊதிய வருவாய் பெரும் பெரும்பாலனோர் தற்போது ITR-2 படிவத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் அடிப்படையில், வீட்டு வாடகைப்படி (HRA),போக்குவரத்துப்படி, விடுமுறைக்கால பயணப்படி (LTA) உள்ளிட்ட வரிவிலக்களின் முலம், 5000 ரூபாய் அளவை எளிதில் பலர் கடந்து விடுவர் என்று H&R நிறுவனத்தின் இயக்குனர் வைபவ் சங்களா விளக்குகிறார்.

ITR-1 (Sahaj)

ITR-1 (Sahaj)

பல வல்லுனர்கள் ITR-1 (Sahaj) சரியான படிவம் என வாதிடுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி "வரிவிலக்கு பெற்ற தொகை படிவம் 16 (Form 16) இல் சேர்க்கப்பட்டால், வருமான வரி தாக்கல் செய்போர் ITR-1 (Sahaj) படிவத்தை பயன்படுத்தலாம். இருப்பினும், 5000 ரூபாய்க்கும் அதிகமான வருவாயை, உதாரணமாக லாபப்பங்கின் (dividends) மூலம் பெற்றால், ITR-2 படிவத்தில் தாக்கல் செய்யவேண்டும்."

இரட்டை வரி விலக்கு

இரட்டை வரி விலக்கு

"அதைபோன்றே இரட்டை வரி விலக்கு அளிக்கும் வசதியைக் கோரும் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் ITR-2 படிவத்தை பயன்படுத்த வேண்டும்" என்று ஹுமன் கேபிடல் சேவை நிறுவனத்தின் சோனு அய்யர் கூறுகிறார். கடந்த ஆண்டுவரை இதுபோன்ற அதிகப்படியான விளக்கமான படிவங்களை வருமான வரித்துறை கேட்கவில்லை.

வரிசெலுத்தும் தொகையை சரிபாருங்கள்

வரிசெலுத்தும் தொகையை சரிபாருங்கள்

வரிச்செலுத்துவோர், தங்களுடைய நிறுவனம் ஏதேனும் வரியை முன்கூட்டியே வருமான வரித்துறைக்கு செலுத்தி இருக்கிறதா என்பதை வருமான வரித்துறையின் இணையம் வழியாக கிடைக்கும் 26AS படிவத்தை சரி பார்ப்பதின் மூலம் கண்டுபிடிக்கமுடியும்.

"இந்த தொகையானது 26AS என்ற படிவத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போன்று இருக்கவேண்டும், படிவம் 16 மற்றும் படிவம் 26ASகளில் குறிப்பிடப்பட்ட முன்கூட்டியே கழிக்கப்பட்ட வரித்தொகையானது சமமாக இருக்க வேண்டும்". மேற்கூறிய தகவல்களை தெளிவாக குறிப்பிடாமல் வருமான வரித்தாக்கல் செய்தால் சிக்கலில் மாட்டுவது நிச்சயம் என்றும் எச்சரிக்கிறார்.

 

 

மேலும் எதாவது வரி விலக்குகள் (80G)?

மேலும் எதாவது வரி விலக்குகள் (80G)?

ஏதேனும் விட்டுப்போன வரி விலக்கு விவரங்களை தாக்கல் செய்ய மறக்கவேண்டாம். உதாரணமாக முன்னர் தெரிவித்த சேமிப்பு தொகைக்கு சரியான ரசிதுகளை இணைக்க மறந்திருந்தால், படிவம் 16ல் விட்டுப்போன, பிரிவு 80Dயின் கீழ்வரும் தடுப்பு மருத்துவ சோதனைகளுக்கு ஏற்பட்ட 5000 ரூபாய்க்கு உட்பட்ட செலவுகள், மேற்கூறிய தொகைகளை இம்முறை தாக்கல் செய்யும் போது குறிப்பிடமுடியும். "ITR படிவங்களில் இத்தகைய மேலதிக விவரங்களை குறிப்பிட வேண்டாம். இருப்பினும் மேற்கூறிய செலவுகளின் இரசீது நகல்களை பத்திரப்படுத்துவது நல்லதொரு பழக்கம். பின்னர் வருமான வரித்துறை ஏதேனும் விசாரணை செய்ய எத்தனிக்கும் போது, இந்த நகல்கள் தக்க நேரத்தில் உதவிசெய்யும்.

நன்கொடை தொகைக்கு வரிவிலக்கு

நன்கொடை தொகைக்கு வரிவிலக்கு

அதைபோன்றே, அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்த தொகையை பிரிவு 80Gயின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். " படிவம் 16 ல் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்த தொகை சேர்க்கப்பட்டு இருக்காது, எனவே, வரிச்செலுத்துவொர் வருமான வரித் தாக்கல் செய்யும்போது இத்தகைய வரி விலக்கை பெறமுடியும். நன்கொடை அளித்த தொகை, நிறுவனம், நிரந்தர கணக்கு எண் மற்றும் முகவரி போன்ற தகவல்களை படிவம் ITRல் குறிப்பிட வேண்டும்".

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Simplifying procedure for filing income-tax returns

The deadline for filing income tax returns, July 31, is just week away. Needless to say, many individuals dread the date with I-T department, as they find the entire process very confusing.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X