எஃப்.சி.என்.ஆர் வைப்பு நிதிகள் மீதான வட்டி விகிதத்தை 1% உயர்த்தியது: சின்டிகேட் வங்கி
சென்னை:வெளிநாட்டுகளில் வசிக்கும் இந்தியர்களின் எஃப்.சி.என்.ஆர் (பி) கணக்குகள் மீதான, அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு நாணய வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை சின்டிகேட் வங்கி உயர்த்தியுள்ளது. இதன் முலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகள் மீது 1 சதவிகிதம் வட்டியை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு ஆகஸ்ட் 22 முதல் அமுலுக்கு வரும் என பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 4.78 சதவிகிதம், நான்கு ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 5.17 சதவிகிதம் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 5.56 சதவிகிதம் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வட்டி உயர்வினால் எஃப்.சி.என்.ஆர் கணக்குகளில் அதிக அளவிலான டாலர்கள் வைப்பு நிதிகளில் வந்து சேரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
Share This Article
English summary
Syndicate bank revises FCNR (B) deposits by 1%
The rate of interest on FCNR (B) deposits in US Dollar of three years to five years has been increased by 1 per cent.
Story first published: Monday, August 26, 2013, 12:05 [IST]