சென்னை: மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது, நாம் உடல் ரீதியாக மட்டும் பாதிப்புக்குள்ளாகுவது இல்லை. மாறாக நிதி/பணம் சமபந்தமாகவும் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகிறோம் என்பதுதான் உண்மை. தற்போது சந்தையில் அறிமுகமான இந்தியாஃபஸ்ட் மெடிகிளைம் திட்டம் இத்தகைய இக்கட்டான தருணங்களில் உதவும் கரமாக விளங்குகிறது.
உடல் நலமின்மை மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுதல் ஆகிய சூழ்நிலைகள், உடல் ரீதியான ஆபத்துக்களை மட்டும் இன்றி, நிதி சார்ந்த ஆபத்துக்களையும் எதிர்நோக்கும் சூழ்நிலையையும் உருவாக்குகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. நமது உடல் நிலையை சரி செய்யவதற்கு மருத்துவர்கள் உள்ளனர். அதேவேளை ஒருவர் தனது உணர்வு ரீதியான தாக்களை எதிர்த்து போராட வேண்டியது அவசியம். ஆனால், நிதிச்சுமைகளை யார் கவனிப்பது என்பது ஒரு மிகபெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் இந்தியாஃபஸ்ட் மெடிகிளைம் திட்டம் நம்மைக் காப்பாற்ற வருகிறது. அத்திட்டதை பற்றி முழுமையாக அறிய கீழே உள்ள ஸ்லைடரில் பார்ப்போம்.
முழுமையான மருத்துவக் காப்பீடு
இந்தத திட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த குடும்ப ஆரோக்கியத்ற்கான காப்பீடு செய்ய முடியும் ( மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள்)
ஹெல்த் கிளைம் கார்ட்
அவசர நிதித் தேவைகள் ஏற்படும் சூழ்நிலையில், இந்தியாஃபஸ்ட் ஹெல்த் கிளைம் கார்ட் பயன்படுத்துவதற்கு மிக வசதியானது. மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது நீங்கள் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய கவலை இல்லை. உங்கள் கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் போன்று, ஹெல்த் கிளைம் கார்டை சும்மா ஸ்வைப் செய்தால் போதும்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது, இந்த கார்டை முதல் தடவையாக ஸ்வைப் செய்யுங்கள்: உங்கள் சொந்த விபரங்கள் அனைத்தும் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவியில்லை.
டிஸ்சார்ஜ் ஆகும் போது இரண்டாம் முறையாக ஸ்வைப் செய்யுங்கள்: உங்கள் தகுதியை சரிபார்த்த பின்னர், நமது கால் சென்டர் உடனடியாக கிளைம் அப்புறுவல் வழங்கும்.
சிறந்த மருத்துவர்களை அணுகமுடியும்
இந்த திட்டதின் முதல் ஆண்டு காலத்தில், ‘சிறந்த மருத்துவர்கள்' நெட்ஒர்க் சேவை மூலம், நாடு முழுவதிலும் உள்ள சுமார் 50,000ற்கும் மேற்பட்ட சிறந்த மருத்துவர்களை அணுக முடியும்.
200 டே (பகல்) மருத்துவ வசதி
அவசியமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்படத் தேவையில்லை - இரவு நேரங்களில் மருத்துவமனையில் தங்காமலே, 200 டே மருத்துவ கேர் மூலம் முழுமையான மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
அனைத்து மருத்துவ செலவுகளையும் திரும்பப் பெறமுடியும்
மருத்துவ செலவுகளை திரும்பப பெறுதற்கான வரையறை இல்லை - உங்கள் மருத்துவ செலவுகள் அனைத்து திருப்பித் தரப்படும். மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் ஏற்படும் அனைத்து மருத்துச் செலவுகளும் இந்தத் திட்டதின் கீழ் உள்ளடக்கப்படும்.
உத்தரவாதமான பிரீமிய விகிதம்
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படாமலிருந்தால், முதல் மூன்று வருடங்களுக்கு ஒரே அளவு பிரீமியத் தொகை உத்தரவாத பயனை அனுபவிக்க முடியும்.
இரட்டை பயன்கள்
‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என்ற பயனை அனுபவிக்க முடியும் - இந்த திட்டதின் கீழ் இந்தியாபஸ்ட் டெர்ம் ரைடர் எடுத்துக்கொள்வதன் மூலம், ஆயுள் காப்பு (லைஃப் கவர்) + மருத்துவக் காப்பு ( ஹெல்த் கவர்) பயன்களைப் பெற முடியும்.
வரிச் சலுகைகள்
வருமான வரிச்சட்டம் 1961, பிரிவு 80டி யின் கீழ், நீங்கள் செலுத்தும் மருத்து காப்பீட்டு பிரீமியத் தொகைக்கு வரிச்சலுகை வழங்கப்படும். மேலும் ஆயுள் காப்பிற்கு ரைடர் பிரீமியம் செலுத்தினால், வருமான வரிச்சட்டம் 1961, பிரிவு 80சி யின் கீழ், இந்தத் தொகைக்கு வரிச்சலுகை வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications