சென்னை: மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறன், நாம் முதலீடு செய்யப்படும் துறை மற்றும் நிறுவனம் ஆகியவற்றின் வர்த்தக செயல்பாட்டின் அடிப்படையில், அவற்றின் லாபபங்குகள் வேறுபடுகிறது. எனவே இங்கு கடன் சார்ந்த திட்டங்கள் உட்பட, குறைந்த கால மற்றும் நீண்ட கால முதலீடுகளின் போது, நல்ல ஈட்டம் பெறக்கூடிய, 5 சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பின்வருமாறு கூறுப்பிடபட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஃபார்மா- குரோத்
ரிலையன்ஸ் ஃபார்மா- குரோத், கடந்த ஒரு வருட காலத்தில், கிட்டத்தட்ட 13% வரை வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த திட்டத்தில், திவிஸ் லாப்ஸ், சிப்லா மற்றும் சன் ஃபார்மா உட்பட, உயர்தரம் வாய்ந்த ஃபார்மா பங்குகளைக் தனது போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது. இதன் காரணமாக, குறைந்த கால மற்றும் நீண்ட கால முதலீடுகளின் போது நல்ல ஈட்டத்தை உருவாக்கும் திறன் இந்த நிதிக்கு உள்ளது.
சுந்தரம் கில்ட் (Sundaram Gilt)
ஒரு முழுமையான கடன் நிதி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், சுந்தரம் கில்ட் ஒரு சிறந்த தேர்வு. கடந்த ஒரு வருடத்தில், இந்த நிதி கிட்டத்தட்ட 18.56% லாபம் ஈட்டித்தந்துள்ளது.
டாடா டைனமிக் பாண்டு ஃபண்ட்
டாடா டைனமிக் பாண்டு ஃபண்ட், இதுவும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் தான். கடந்த ஒரு வருடத்தில் இந்த நிதி திட்டத்தில் முதலீடு செய்தவரிகளுக்கு சுமார் 11% வருமானம் ஈட்டித்தந்துள்ளது, இதன் தற்போதைய நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) ரூ.18.12 ஆகும். மேலும் இது ஒரு உயர்தர பாதுகாப்பான கடன் பத்திரமாகும்.
ஆக்ஸிஸ் ஈக்யூவிட்டி - ஜி
ஆக்ஸிஸ் ஈக்யூவிட்டி, பெரியளவிலான முதலீட்டு பங்குகளில் கவனம் செலுத்துகிறது. ஐடிசி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்விசஸ் ஆகிய புளு சிப் பங்குகள் இந்த நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் அடங்கும். இதன் தற்போதைய நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) ரூ.12.8 ஆகும்.
பிஎன்பி பரிபாஸ் ஈக்விட்டி - குரோத்
ஆக்ஸிஸ் ஈக்யூவிட்டி போன்றே, பிஎன்பி பரிபாஸ் ஈக்யூவிட்டியும் தரம் வாய்ந்த, பெரியளவிலான புளு சிப் பங்குகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐடியா செல்லுலர், டாடா கன்சல்டன்சி சர்விசஸ் மற்றும் ஐடிசி ஆகியவை இந்த நிறுவனத்தின் போட்ர்ட்ஃபோலியோவில் அடங்கும். இந்த திட்டத்தின் தற்போதைய என்ஏவி ரூ.40.79 ஆகும்.


Click it and Unblock the Notifications