எல்.ஐ.சியின் சூப்பரான காப்புறுதித் திட்டங்கள் - ஒரு பார்வை!

சென்னை: ஆயுள் காப்புறுதி (லைஃப் கவர்) முதல் என்டோவ்மென்ட் திட்டங்கள், குழந்தைத் திட்டங்கள் வரை, எல்.ஐ.சியில் பல வகையான காப்பீடுத் திட்டங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் மிகப் பிரபலமான சில திட்டங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

அன்மோல் ஜீவன் 1 (Anmol Jeevan I)

எல்.ஐ.சியின் சூப்பரான காப்புறுதித் திட்டங்கள் - ஒரு பார்வை!

எல்.ஐ.சியின் இந்தத் திட்டம், மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கக் கூடிய, ஆயுள் காப்புறுதித் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் சேர, வயது வரம்பு குறைந்தது 18 முதல் அதிகப்படியாக 55 வருடங்கள் ஆகும். இந்த திட்டத்தின் முதிர்வுக்காலம் (மெச்சுரிடி டெர்ம்), அதிகப்படியாக 65 வயது வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியின் குறைந்த பட்ச உறுதித் தொகை (சம் அஷுர்ட்) ரூ.5 லட்சம், அதிகப்படியாக ரூ.25 லட்சத்திற்குக் குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். பிரீமியம் செலுத்துத்துவதற்கு, ஒராண்டு, அரையாண்டு மற்றும் ஒரே தவணைப் முறை ஆகிய தவணைக் கால தேர்வு முறைகள் உள்ளன. வருடாந்திர தவணைக் கால முறையில் பிரீமியம் செலுத்தும் பாலிசிதாரர்களுக்கு, பிரீமியத் தொகையில் 1% தள்ளுபடி வழங்கப்படும்.

இந்தப் பாலிசி, முழுமையான ஒரு ஆயுள் காப்பு (பியூர் டெர்ம் கவர்) திட்டம் என்பதால், அன்மோல் ஜீவன் 1 இல் ஒப்புவிப்புத் தொகையோ(சரண்டர் வாலியூ) அல்லது கடன் வசதியோ கிடையாது. பாலிசி காலாவதியானால் (லாப்ஸ்), நிறுவனத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தேவையான ஆவணகளைச் சமர்ப்பித்து, இந்தப் பாலிசியை ரிவைவல் செய்ய முடியும்.

பின்வரும் உதாரணம் மூலம், இந்த குறைந்த செலவிலான அன்மமோல் ஜீவன் 1 திட்டத்தை புரிந்துகொள்ளலாம். 28 வயதுடைய ஒருவர், வருடாந்திர பிரீமியத் தொகையாக ரூ.2,505/- அல்லது அரையாண்டு பிரீமியத் தொகையாக ரூ.1,265/- அல்லது ஒரே தவணைப் பிரீமியத் தொகையாக ரூ.16,530/- செலுத்தி, ரூ.10 லட்சம் உறுதித் தொகை (சம் அஷூர்ட்) கொண்ட, பத்து வருட பாலிசி காலத்திற்கான அன்மோல் ஜீவன் 1 திட்டத்தை தேர்வுசெய்வதன் மூலம், எதிர்காலத்தில் நிகழக்க்கூடிய எதிர்பாராத ஆபத்துக்களிலிருந்து தனது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஜீவன் அமுல்யா பாலிசி:

இது ரூ.25 லட்சத்திற்கு மேல் உயர் உறுதி தொகையை (சம் அஷூர்ட்) விரும்பும் தனி நபர்களுக்கான எல்.ஐ.சியின் ஆயுள் காப்புத் திட்டம் (டெர்ம் பிளான்) ஆகும். இது ஒரு முழுமையான ஆயுள் காப்பு ( பியூர் டெர்ம் கவர்) திட்டம் என்பதால், இந்தத் திட்டதில் காப்புறுதி செய்யப்பட்டுள்ள நபர், காப்புறுதி காலம் முடியும் வரை உயிரோடு இருந்தால், எந்தவித முதிர்வு கால பயன்களும் (மெச்சுரிடி பெனபிட்டுக்கள்) அவருக்குக் கிடைக்காது. இருப்பினும், தவணைகாலதில், துரதிஷ்டவசமாக காப்புறுதி செய்யப்பட்டுள்ள நபருக்கு மரணம் நேர்ந்தால், உறுதித் தொகைக்கு (சம் அஷூர்ட்) ஈடான தொகை நாமினியாக நியமிக்கப்பட்டுள்ள நபருக்கு வழங்க்கப்படும்.

வயது வரம்பு 18-60 வரையுள்ளவர்கள் இந்தத் திட்டத்தை வாங்க முடியும். இந்தத் திட்டத்தின் அதிகபட்ச முதிர்வுக்கால எல்லை 70 வயது வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனைய மரபுவழி பாலிசிகள் போன்று, இந்தத் திட்டத்திலும் ஓராண்டு, அரையாண்டு மற்றும் ஒரே தவணையில் பிரிமியம் செலுத்தும் தேர்வுமுறைகள் உள்ளன. ஒப்புவிப்புத் தொகையோ(சரண்டர் வாலியூ) அல்லது கடன் வசதியோ இந்தத் திட்டத்திற்கு கிடையாது.

எல்.ஐ.சி பீமா கோல்ட்:

இந்த நிறுவனத்தின் பொன்விழாவையொட்டி, 2006 ஆம் ஆண்டில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பீமா கோல்ட் ஒரு பிரபலமான என்டோவ்மென்ட் அஷுரென்ஸ் மணி-பாக் பாலிசி ஆகும். இந்தத் திட்டதில், பிரீமியமாக செலுத்தப்பட்ட தொகை, குறிப்பிட்ட கால இடைவேளையில், தவணைமுறையில் பாலிசி தாரர்களுக்கு , திரும்பச் (மணி-பாக்) செலுத்தப்படும்.

மேலும், எல்.ஐ.சி பீமா கோல்ட் திட்டத்தில், திட்டக்காலம் வரை ஆயுள் காப்புறுதி ( லைஃப் கவர்) வழங்கப்படுகிறது, அதாவது பாலிசி டெர்ம் வரை கிடைக்கக் கூடிய பாதுகாப்பிற்கு மேலாக, பாலிசி டெர்ம் முடிவடைந்த பின்னரும், பாலிசி டெர்மின் பாதிக்கால அளவிற்குத் தொடர்ந்து லைஃப் கவர் வழங்கப்படும். இந்த திட்டதில், மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு பிரீமியம் செலுத்துமுறைகள் பாலிசிதாரர்களின் வசதியைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட முடியும். பாலிகாலத்தில் ஒவ்வொரு 4 ஆண்டுகளிலும், உறுதித் தொகையில் 15% தொகை அஷூர்ட் சர்வைவல் பெனஃபிட்டாக பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும்.

திட்ட முதிர்வில், மொத்த பிரீமியத் தொகை மற்றும் ஏனைய உறுதி சேர்க்கைகள் ஆகியவற்றின் மொத்த தொகையிலிருந்து, பாலிசிகாலத்தில் மீள் செலுத்தப்பட்ட சர்வைவல் பெனஃபிட் தொகையைக் கழித்து மீதி உள்ள தொகை பாலிசிதாரகளுக்கு கிடைக்கும். காப்பீடு நபருக்கு, பாலிசி காலத்தில் மரணம் ஏற்பட்டால், உறுதித் தொகை (சம் அஷூர்ட்) செலுத்தபடும். மேலும் ஒரு நீடிக்கப்பட்ட காலத்திற்கு, உறுதித் தொகையில் 50% பெறுவதற்கு நாமினியாக நியமிக்கப்பட்டவர் அனுமதிக்கப்படுவார்.

ஜீவன் ஆனந்த்:

இது எண்டோமென்ட் மற்றும் முழுமை ஆயுள் காப்பு (ஹோல் லைஃப்) இரண்டும் சேர்ந்த ஒரு திட்டாமாகும். இதில் காப்பீடு செய்யப்பட்டுள்ள நபருக்கு ஆயுள் பாதுகாப்பு கிடைப்பதுடன், ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவருக்கு சர்வைவல் பெனஃபிட்டாக ஒரு மொத்தத் தொகையும் வழங்கப்படும். இது ஒரு லாபம் ஈட்டும் திட்டம் என்பதால், பாலிசி முடிவுக் காலத்தில் அல்லது காப்பிட்டு நபருக்கு மரணம் ஏற்படும் போது, அந்த நேரத்தில் கிடைக்கும் மொத்தத் தொகையுடன் சேர்த்து, பாலிசித் தொகையில் ஈட்டப்பட்டிருக்கும் போனஸ் தொகையும் வழங்கப்படும். இதைத் தவிர்த்து, ஒரு குறிப்பட்ட வருட காலத்திற்கு பாலிசி செயற்பாட்டில் இருந்தால், குறிப்பிட்ட மேலதிக நன்மைகளும் வழங்கப்படும். பாசிலி முடிவுகாலம் வரை, காப்பீடு செய்யப்பட்ட நபர் உயிர்ரோடு இருந்தால், பாலிசி முதிர்வில், உறுதித்தொகையுடன் (சம் அஷூர்ட்) சேர்த்து வெஸ்டட் போனஸும் வழங்கப்படும். பாலிசி காலம் (பாலிசி டெர்ம்) முடிவடைந்த பின்னர், காப்பீட்டு நபர் இறக்க நேரிட்டால், ஒரு மேலதிக உறுதித்தொகை ஜீவன் ஆனந்த் திட்டத்தில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சி ஜீவன் அங்குர்

எல்.ஐ.சியின் சூப்பரான காப்புறுதித் திட்டங்கள் - ஒரு பார்வை!

எல்.ஐ.சியின் இந்த கான்வென்ஸெனல் சைல்ட் பிளான்(குழந்தைகளுக்கான திட்டம்), 17 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு உகந்தது. சிங்கிள் மற்றும் ரெகுலர் பிரீமியம் செலுத்தும் முறைகளுடன், காப்பீட்டு நபரின், சர்வைவல் நிலைகளில் ஒழுக்கீனம் ஏற்படும் சர்ந்தர்ப்பதில், குழந்தைகளின் தேவைளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் இந்தத் திட்டம் இயங்குகிறது. இந்தத் திட்டத்தில், பெற்றோருக்கும் மற்றும் நாமினியாக நியமிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கும், ரிஸ்க் கவர் (அபாய நேர்வுக் காப்பு) வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச காப்புத் தொகை ரூ.1 லட்சம், அதிகபட்ச காப்புத் தொகை வரையறை இல்லை. பாலிசி முதிர்வுக் காலத்தில் குழந்தையின் வயது என்னவாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் பாலிசி காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில், காப்பீட்டு நபருக்கு திடீர் மரணம் எற்பட்டால், நாமினியாக நியமிக்கப்பட்டவருக்கு, அடிப்படை உறுதித் தொகைக்கு (பேசிக் சம் அஷூர்ட்) ஈடான தொகை வழங்கப்படும். மேலும் பாலிசி காலம் முடியும் வரை, உறுதித் தொகையில் 10%, நாமினியாக நியமிக்கப்பட்டவருக்குத் தொடர்ந்து வழங்கப்படும். ஒருவேளை, குழந்தைக்கு அல்லது நாமினிக்கு மரணம் ஏற்பட்டால், இன்னுமொரு குழந்தையை நாமினியாக நியமித்து அல்லது வாரிசுதாரர் ஒருவரை நியமித்து பாலிசியைத் தொடர முடியும். திட்ட முதிர்வுக்காலத்தில், சில உறுதிச் சேக்கைகளும் (லயாலிடி அட்டிஷன்கள்), பாலிசியின் ஒரு பகுதியாக வழங்கப்படும். இக்கட்டான உடல்நலகேடு (கிரிட்டிகல் இல்னெஸ்) மற்றும் விபத்துக்காப்பு (ஆக்ஸ்சிடென்ஷியல் ரைடெர்கள்) ஆகியவை ஒரு கூடிய விலை செலுத்துவதன் இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+