
முதலீட்டுப் பாதுகாப்பு நிதி பின்வரும் நோக்கங்களுக்கு உகந்ததாகும்.
முதலீடு குறித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களைக் கொண்ட ஒரு முதலீட்டாளர் என்றால், நீங்கள் நிச்சயமாக இந்த முதலீட்டு திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.
உறுதியான நிதி திட்டம்
முதலீட்டுப் பாதுகாப்பு நிதிகள் குளோஸ்ட் என்டெட் (மூடிய முனை) திட்டங்களாக இருப்பதால், இது ஒரு உறுதியான நிதி இலக்கைக் கொண்ட, 3-5 வருட கால முதலீட்டுத் திட்டமாகும். மேலும், முலதன பாதுகாப்பு நிதி திட்டங்கள் பங்குச் சந்தைப் பட்டியலில் இருந்த போதிலும், இவற்றின் லிக்யூடிடி தன்மை மிகவும் குறைவாகும்.
மூலதனப் பாதுகாப்புடன், முதலீட்டு மதிப்பேற்றம்
வங்கி நிலையான வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புத் திட்டங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் இலாப விகிதத்தை ஒப்பிடு செய்து, அதனை விட அதிக லாபம் ஈட்டக்கூடிய மற்றும் முதலீட்டு பாதுகாப்பை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது பொருத்தமான திட்டமாகும்.
இருப்பினும், உங்கள் முதலீட்டிலிருந்து நீங்கள் 30%-40% வரை உயரிய லாப விகிதத்தை எதிர்பார்த்தால், இவ்வாறான முலதன மதிப்பேற்ற நிதிகளின் மூலம் இதை ஈட்ட முடியாது.
முதலீட்டுப் பாதுகாப்பு
வழக்கமாக மூலதன பாதுகாப்புக் குறித்து எந்தவொரு உறுதியான உத்தரவாதம் இல்லை என்ற போதிலும், பெரும்பாலான நேரங்களில், இது போன்ற சில நிதித் திட்டகளில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் மொத்த தொகையில், 70%-80% கடன் பத்திரங்களிலும், 20%-30% பங்கு சந்தைகளிலும் முதலீடு செய்யப்படுகிறது.
எனவே 3-5 வருட முதலீட்டுக் காலத்தில், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து வட்டி வருமானமும், முதலீட்டு மதிப்பேற்றமும் ஒரு உறுதியான சதவிகிதத்தில் கிடைக்கும். ஆகவே, பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் நஷ்டம் ஏற்பட்டாலும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து கிடைக்கக் கூடிய லாபம், பங்குகளில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்து, மூலதன பாதுகாப்பு நோக்கத்தை அடைய வழிசெய்கிறது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications