
ரிஸ்க் எடுத்துப் பார்க்கலாம் என்ற மனநிலையில், நீங்கள் ஈக்யூட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகளவு பணத்தை முதலீடு செய்திருப்பீகள், இத்தகைய செயல் பாராட்டுக்குறியதே. ஆனால் கடன் நிதிகளில் முதலீடு செய்வது எப்போதுமே ஒரு நல்ல யோசனை. கடந்த ஒரு வருடகாலத்தில், எல்லா ஈக்யூட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் அதிக வருவாயை பெற்றுத் தரவில்லை, ஃபார்மா, ஐடி மற்றும் எஃப்எம்சிஜி ஆகியவையே நல்ல முறையில் செயல்பட்டுள்ளன. இதனால் மற்ற துறைகளில் முதலீடு செய்தவர்களின் நிலை சற்று கவலைக்கிடமாகவே இருக்கிறது.
கடன் நிதி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பதோடு, கிட்டத்தட்ட 6-10% நிகர வருமானத்தை (வரிக்கு பின்) பெற்றுத் தரக் கூடியவை. கடன் நிதி திட்டங்கள், பொருளாதாரத்தில், வட்டி விகித இயக்க அடிப்படையில் வருமானம் ஈட்டித்தருகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆர்பிஐ சமிபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தி இருப்பதால், பொருளாதாரத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆகவே, வட்டி விகிதம் உயரும் என்பதால், இந்த சமயத்தில் கடன் நிதிகளிலிருந்து நல்ல லாபம் பெற முடியும் என்பதற்கு சந்தேகமில்லை.
நீங்கள் கடன் நிதி திட்டங்களை தேர்வுசெய்யும் போது, டிவிடென்ட் முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவற்றிக்கு வரி விதிப்பு இருக்காது.
கடன் நிதிகள் எங்கு முதலீடு செய்யப்படுகின்றன?
அரசு முதலீட்டுப் பத்திரங்கள், பெரிய நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் (சிடி) போன்றவற்றில் கடன் நிதி மியூச்சுவல் ஃபண்ட் நிதிகள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யப்படுகின்றன. அரசு முதலீட்டுப் பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானது. பெரிய நிறுவன கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை, பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், நம்பகமான ஏஏஏ தகுதியுள்ள நிறுவனங்களில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது.
பிர்லா சன் லைஃப், எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மற்றும் பல உயர் தரம்வாய்ந்த, சிறப்பாக செயல்படும் கடன் நிதி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், வருமானத்தை அதிகரிக்க, நிதி நிபுணர்களின் உதவியை நாடவில்லையென்றால், முதலீட்டாளர்கள் இந்த திட்டம் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம், அதேபோல் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications