ஃபிக்ஸ்செட் மெச்சுரிடி பிளான் ஏன்றால் என்ன??: இத்திட்டத்தில் முதலீடு செய்தால் லாபமா??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலையான முதிர்வு திட்டம் (FMP) என்பது குளோஸ்ட்-என்டெட் (மூடிய-முனை) மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இவ்வாறான திட்டங்களின் முதலீட்டுத் தொகை, ட்ரெஷரி பில்கள், வைப்புச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் (CPs), பொது நிறுவன மற்றும் அரசு முதலீட்டுப் பத்திரங்கள் ஆகிய கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். மேலும் இந்த திட்டதின் முதலீடுத் தொகையானது, வர்த்தக பத்திரம் போன்ற ஒரே ஒரு முதலீட்டுப் பத்திரத்திலோ அல்லது வெவ்வேறு கடன் பத்திரங்களிலோ பிரித்து முதலீடு செய்ய முடியும்.

இதுபோன்ற குளோஸ்ட்-என்டெட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், சப்ஸ்க்கிரிப்ஷனுக்காக எஃப்எம்பி (FMP) திறந்து வைக்கப்பட்டிருக்கும் போதும் மட்டுமே முதலீடு செய்ய முடியும், குளோசிங் செய்த பின்னர் எஃப்எம்பி கொள்முதல் செய்வது சாத்தியமில்லை. மேலும் இந்த திட்டதின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் யூனிட்டுகளை முதிர்வுத் தேதிக்கு முன்னர் விற்பனை செய்ய முடியாது. இருப்பினும், இந்த யூனிட்டுகளை வாங்குவதற்கு ஒருவர் இருந்தால், பரிமாற்ற நிபந்தனைகளின் கீழ் இதை உரிமைமாற்றம் செய்ய முடியும்.

வேறுபட்ட முதிர்வு காலங்களில் எஃப்எம்பி திட்டங்கள்

வேறுபட்ட முதிர்வு காலங்களில் எஃப்எம்பி திட்டங்கள்

எஃப்எம்பி திட்டங்கள் பல்வேறு முதிர்வு கால அடிப்படையில் வழங்கப்படுகின்றன; இவை மூன்று மாத குறுகிய காலம் அல்லது 3-4 ஆண்டுகள் நீண்டகாலமாகவும் இருக்கலாம். எனவே, முதலீட்டுகால விருப்ப அடிப்படையில், உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்யலாம்.

இத்திட்டத்தின் செலவுகள்

இத்திட்டத்தின் செலவுகள்

எஃப்எம்பி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் சில கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், சில ஒழுங்குமுறையற்ற வரிவிதிப்புகளை தடுக்க, முதலீட்டுத் தொகையின் சராசரி நிகர சொத்து மதிப்பில் (என்ஏவி) சில சதவிகிதங்கள் கட்டணமாக வசூலிக்கப்படும்.

எஃப்எம்பி லாபம் நிர்ணயம்செய்தல்

எஃப்எம்பி லாபம் நிர்ணயம்செய்தல்

எதிர்பார்க்கப்பட்ட அளவு லாபம் ஈட்டுவதற்கான உத்தரவாதம் இல்லை என்ற போதிலும், எந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையில், ஒரு எஃப்எம்பி திட்டத்தில் இருந்து பெறக்கூடிய ஈட்டம் நிர்ணயம் செய்யப்படும். உதாரணமாக, பெரிய நிறுவனங்கள் தங்கள் குறுகிய கால கடன் தேவைகளை சந்திப்பதற்கு, பண சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வர்த்தக பத்திரங்களில் எஃப்எம்பி முதலீடு செய்யப்பட்டால், 10.45-10.55% லாபம் பெற முடியும். திட்ட செலவுகளுக்காக வசூலிக்கப்படும் எனைய கட்டணங்களை கணக்கிடுவதன் மூலம், ஒரு எஃப்எம்பி திட்ட லாபம் கணிக்கப்படும். இந்த செலவுகள் கொடுக்கப்படாவிட்டால், எஃப்எம்பி சாராசரி செலவு விகிதம் கழிக்கப்பட்டு, வருடாந்த லாபம் நிர்ணயம் செய்யப்படும்.

வரி பயன் உறுதித் திட்டம்

வரி பயன் உறுதித் திட்டம்

எஃப்எம்பி அதிகளவில் வரி சலுகை பெறக்கூடிய திட்டமாகும். ஒரு வருடத்துக்கும் அதிகமான முதிர்வுக் காலம் கொண்ட ஒரு எஃப்எம்பி திட்டத்தில், முதலீட்டாளர்களுக்கு இன்டெக்ஸேஷன் சலுகை (benefit of indexation) வழங்கப்படும், அதாவது கிடைக்கக்கூடிய லாபத்தொகை பணவீக்கத்துக்கு எதிராக அட்ஜஸ்ட் செய்யப்படும். முதலீட்டு வளர்ச்சி தேர்வுடனான, ஒரு வருட முதிர்வுகாலம் கொண்ட எஃப்எம்பியில் முதலீட்டு வரி விதிக்கப்படும், அதாவது இன்டெக்ஸேஷனுடன் 20% அல்லது இன்டெக்ஸேஷன் இல்லாமல் 10% வரி செலுத்த வேண்டும். இன்டெக்ஸேஷன் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள். உயர் பணவீக்க காலங்களில், இன்டெக்ஸேஷன் பயன் அதிகமாக இருப்பதால், மூலதன வரி சலுகை பெறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.

வரி சலுகை திட்டம்

வரி சலுகை திட்டம்

ஆகவே, வங்கி நிலையான வைப்புகளிலிருந்து (FDs) பெறும் வட்டித் தொகை மொத்த வருமானத்துடன் கூட்டப்பட்டு வருமான வரி கணிக்கப்படுவதால், 20% அல்லது அதற்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, எஃப்எம்பி திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். மாறாக. ஒரு வருடத்துக்கும் குறைந்த முதிர்வுக் காலத்தைக் கொண்ட எஃப்எம்பி திட்டங்களுக்கு பொருத்தமான விகித அடிப்படையில் வரி விதிக்கப்படும், ஆகவே இது வங்கி நிலையான வைப்பு வருமானத்தை ஒத்தது.

எஃப்எம்பியில் முதலீடு செய்ய உகந்த நேரம்

எஃப்எம்பியில் முதலீடு செய்ய உகந்த நேரம்

பணச் சந்தை சார்ந்த ஒரு திட்ட கலவையாக இருப்பதால், ஒரு எஃப்எம்பியிலிருந்து தற்போது ப்ரீ-டாக்ஸ் வருமானமாக 9.5% முதல் 10% வரை பெற முடியும். நடப்பு காலத்தில் தங்களது பணத்தை லாக்-இன் செய்திருக்கும் வாடிகையாளர்கள், வருடங்களுக்கு பிறகு இரட்டிப்பாக வருமானம் பெற முடியும். மேலும், தற்போதைய பொருளாதார நிலையில், கடன் சந்தைகளின் விதி எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது, ஆகவே ஸ்தீரத்தன்மை கொண்ட மேற்குறிப்பிட்ட முறையில் எஃப்எம்பிகளைத் தேர்வுசெய்வது சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fixed Maturity Plans or FMPs: What are they?

Fixed maturity plans are closed-ended debt oriented fixed maturity mutual fund schemes. The corpus amount of such schemes is invested in debt instruments, including treasury bills, certificate of deposits, commercial papers (CPs) and corporate and government bonds.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X