ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!: என்டோவ்மென்ட் பாலிசி..

சென்னை: ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்ய நினைத்தால், ஒரு என்டோவ்மென்ட் திட்டத்தை தேர்வு செய்வது என்பது ஒரு புத்திசாலித்தனமான காரியமாகும். இந்த என்டோவ்மென்ட் பாலிசி, நமக்கு அவசியமான ஆயுள் காப்பீட்டை வழங்குவதோடு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நீண்டநாள் சேமிப்புப் பயனையும் வழங்குகிறது. ஆகவே இது காப்பீடு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த ஒரு திட்டமாகும்.

முதலீட்டு காலம் 5 முதல் 20 ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்யபட்டுள்ளது, அதற்குப் பின்னர் தான், பாலிசிதாருக்கு முதிர்வுத் தொகை (மெசுரிடி அமவுண்ட்) வழங்கப்படும். ஒருவேளை பாலிசிதாரருக்கு மரணம் நேரிட்டால், அவரால் நியமிக்கப்பட்டுள்ள நாமினிக்கு இந்த தொகை வழங்கப்படும். ஒரு முறையான டெர்ம் ஆயுள் காப்பிட்டின் பயன்கள், பாலிசிதாரர் மறைவுக்குப் பின்னரே, அவரது நாமினிகளுக்கு கிடைக்கும்.

என்டோவ்மென்ட் திட்டத்தின் அநுகூலம்

என்டோவ்மென்ட் திட்டத்தின் அநுகூலம்

ஏனைய காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, இந்த திட்டத்தில் பிரீமியத்தொகை உயர்வாக இருப்பதால், இவை விலை உயர்வான திட்டங்களாக விமர்சனம் செய்யப்படுகின்றன. ஆனால், புத்திசாலித்தனமாக இதை தேர்வு செய்வதால், மிகச்சிறந்த நீண்ட நாள் பயனைப் பெற முடியும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

என்டோவ்மென்ட் திட்டத்தை கொள்முதல் செய்யும் போது, உங்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகிய இரண்டும் கிடைக்கின்றன. நீங்கள் தேர்வு செய்த திட்டத்தின் முதலீட்டு காலம் முடிவடைந்த பின்னர், பாலிசியின் முதிர்வு தொகை கிடைக்கும். ஆண்டுதோறும் நீங்கள் செலுத்தும் பிரீமியத் தொகை, பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் போனஸ் தொகை, உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், இதன் பயனாக முதலீட்டுக் கால முடிவில் ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்பது உறுதி.ஒருவேளை, திட்ட முதிர்வுக்கு முன்னர், பாலிசிதாரர் மரணம் அடைந்தால், இந்தத் தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

வரிச் சலுகை

வரிச் சலுகை

என்டோவ்மென்ட் திட்டத்தின் கீழ் கிடைக்ககூடிய மொத்த முதிர்வுத் தொகைக்கு வரிச்சலுகை உண்டு என்பது ஒரு சிறப்பான அம்சமாகும். ரூ 1 லட்சம் வரையான பிரீமியத் தொகைக்கு வரி விதிக்கப்படமாட்டாது. மேலும், வருமானவரிச் சட்டத்தின் படி, பாலிசிதாரரின் மரணத்தின் போது நாமினிக்கு வழங்கப்படும் தொகைக்கும் முழுமையான வரி விலக்கு உள்ளது.

சிறப்புமிக்க சேமிப்புகள்

சிறப்புமிக்க சேமிப்புகள்

குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம், பணிஓய்வு ஆகிய எதிர்காலத் தேவைகளுக்கான ஒரு சேமிப்புத் திட்டமாகவே பலரும் என்டோவ்மென்ட் திட்டத்தை வாங்குகின்றனர். பாலிசிதாரர்கள் வயதான காலத்தில் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு ஒரு கணிசமான தொகை கிடைப்பதால், இது பணிஓய்வு நோக்கத்திற்கான மதிப்புமிக்க திட்டம் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்ககூடிய நிதி வருமானம் உயர்வாக இருப்பத்தால், பாலிசிதாரர்கள் என்டோவ்மென்ட் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான வசதியும் உண்டு.

இத்திட்டத்தின் ஆபத்துகள்

இத்திட்டத்தின் ஆபத்துகள்

இந்தக் குறிப்புகள் என்டோவ்மென்ட் திட்டம் ஒரு நல்ல தேர்வு என்பதைக் காட்டும் அதேநேரம், இந்த காப்பீட்டை வாங்குவதற்கு முன்னர், விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிப்பது மிக அவசியம்!!. என்டோவ்மென்ட் திட்டத்தை இடையில் முறிக்கும் சந்தர்ப்பத்தில், நீங்கள் செலுத்திய பிரீமியத் தொகையைவிட குறைவான தொகையே கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு இருந்த போதிலும், நீண்ட நாள் முதலீட்டு திட்டங்களான பொது வருங்கால் வைப்பு நிதி திட்டங்கள் (பிபிஎஃப்) மூலம் கிடைக்கும் தொகையைவிட குறைவான தொகையே என்டோவ்மென்ட் திட்டத்தின் மூலம் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+