சென்னை: நம் தற்போதய பொருளாதர சரிவை சற்றே தூக்கி நிறுத்தும் வகையில் இரு முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன, யு.எஸ் ஃபெட் கூட்டம் மற்றும் இந்திய மானிட்டரி பாலிஸி ஆகியவை முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆர்பிஐ அதன் மானிட்டரி பாலிஸியில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள அதே வேளையில், எஃப்ஓஎம்சி கூட்டத்தில் வாபஸ் பெறக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபெட் திட்டம் வாபஸ் பெறப்படவில்லை.
எனினும், கடந்த வெள்ளியன்று யு.எஸ் ஃபெடரல் ரிசர்வ் செயின்ட் லூயிஸ் ஃபெட் பிரசிடென்ட் ஜேம்ஸ் புல்லார்ட் அவர்கள் அக்டோபர் மாதவாக்கில் ஃபெட் குறைக்கப்படக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து யு.எஸ் சந்தைகளில் உருவான அசுரத்தனமான மாற்றங்களால் டோவ் ஜோன்ஸ் சுமார் 180 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.
வருவாய் ஈட்டுவதற்கு தோதான காலமாகவே இருப்பினும் அடுத்த வாரத்தில் சந்தைகள், சோர்வளிக்கக்கூடிய வகையில் மேலும் குறைவான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கக்கூடும். எனவே, கடந்த 3 வருட காலகட்டத்தில் சென்செக்ஸ் புள்ளிகளில் அதிகபட்ச நிலையாகக் கருதப்படும் தற்போதைய சூழல், பங்குகளை விற்பதற்கு ஏற்ற வாய்ப்பாகக் கூறப்படுகிறது.
ஆர்பிஐ
ஆர்பிஐ ரிப்போ விகிதங்களை உயர்த்தியுள்ளதனால், வங்கி சார்ந்த பங்குகள் அடுத்த வாரம் மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. எனினும், ரிப்போ விகிதங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, கட்டாயமாக மார்ஜின் அழுத்தத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி விட முடியாது, ஏனெனில் வங்கிகள் தங்களின் மார்ஜின்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, இந்த விலை அதிகரிப்பை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டவே முனையும்.
டெபாசிட் மற்றும் லெண்டிங் ரேட்
டெபாசிட் ரேட்களை உயர்த்த வேண்டியுள்ளதால், லெண்டிங் ரேட்களும் உயரும் சாத்தியம் இருப்பதாக எஸ்பிஐ சேர்மனாகிய பிரதிப் சௌதரி அவர்கள் கூறியுள்ளார்.
வங்கி பங்குகள்
வங்கி சார்ந்த பங்குகள் எதிர்தரப்புக்கு சாதகமான வகையில் அடுத்த வாரத்தில் நிலையற்றதாகக் காணப்படும்.
ரியல் எஸ்டேட் துறை
உண்மையில், வட்டி விகிதங்களைப் பொறுத்து மாறக்கூடிய மற்றொரு துறையான ரியல் எஸ்டேட் துறையும் விற்பனையில் தொடர்ந்து அழுத்தமான நிலையை எதிர்கொள்ளும். விகிதங்களை குறைக்கும் ஆர்பிஐயின் தீர்மானத்தைத் தொடர்ந்து ஏற்கெனவே வெள்ளியன்று டிஎல்எஃப் சுமார் 11% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதர பல ரியல் எஸ்டேட் லெண்டர்களின் நிலையும் இதுவே.
ஃபார்மா மற்றும் ஐடி துறை
இந்நிலையில், பாதுகாப்பானவையாகக் கருதப்படும் ஃபார்மா மற்றும் ஐடி துறை சார்ந்த முதலீடுகளில் பதுங்கலாம் என்பதே முதலீட்டாளர்களின் விருப்பமாக இருக்கும். இத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்கெனவே யானை விலை, குதிரை விலை விற்கின்றன. இத்துறையைச் சேர்ந்த சில பங்குகளின் ஏற்றவீச்சை நோக்குகையில் இந்த ஐடி நிறுவனங்களின் ரிசல்ட்கள் எவ்வாறு இருக்கும் என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.
ஆலோசனை
நிலையாமை தான் நமது இந்த நிலைக்கு மூலகாரணம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பங்குகள், 15 வர்த்தக தொடரில், நிஃப்டியுடன் சுமார் 800 புள்ளிகள் வரையிலான மீட்சியை அடைந்துள்ளன. இப்போதே உங்கள் பங்குகளை விற்று, அடுத்து வரக்கூடிய வீழ்ச்சியினால் உங்களுக்கு உண்டாகக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கப் பாருங்கள்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications