புது மாப்பிள்ளைகளுக்கு சில நிதியியல் ஆலோசனை!!

சென்னை: ரூபாய் வீழ்ச்சி, பங்குச்சந்தையின் தேக்க நிலை, காய்கறி விலை ஏற்றம், வீட்டுக்கடன் வட்டி விகித உயர்வு போன்ற பொருளாதார கொந்தளிப்புகள் மத்தியில், புதிதாக மணமுடித்த தம்பதியர்களுக்கு சேமிப்பது அல்லது ஒரு அழகான விடுமுறைக்குச் செல்லவது அல்லது வீடு வாங்குவது அல்லது கார் வாங்குவது ஆகியவறிக்கு ஒரு தொடர் போராட்டமாகவே இருந்து வருகிறது. அநேக நேரங்களில், பண மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுவதில்லை. இது தம்பதியர்கள் வாழ்க்கையில் ஆழமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

ஒரு சீரான நிதி வாழ்க்கைக்கு, புதிதாக திருமணமானவர்கள் பின்பற்றக் கூடிய நிதித் திட்டமிடல் தொடர்பான சில அம்சங்களை நாம் பார்க்கலாம்.

பட்ஜெட் தயார்செய்தல்

பட்ஜெட் தயார்செய்தல்

இருவரும் ஒன்றாக உட்கார்ந்து, தற்போதுள்ள EMIகள், வாடகை, வீட்டுச் செலவுகள், எரிபொருள், விருப்புரிமை செலவுகளான ஷாப்பிங், வெளியில் விருந்துக்குச் செல்லுதல், பொழுதுபோக்கு மற்றும் பெற்றோருக்கான பங்களிப்பு ஆகிய மாதாந்த மற்றும் ஆண்டு அடிப்படையிலான செலவுகள் பற்றி குறிப்பு எழுத வேண்டும்.

இது செலவு வரம்புகளை அமைப்பதற்கும், செலவுகளை கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதற்கும் இது கண்டிப்பாக உதவும். கணவன், மனைவி இருவரும் வேலை செய்தால், ஒரு கூட்டு வங்கிக் கணக்கைத் திறந்து அதில் மாதாந்தம் ஒரு நிலையான தொகையை பொதுச் செலவுக்காக பங்களிப்பு செய்ய தீர்மானிக்கலாம்.

முதலீடுகளை ஒன்றிணைத்தல்

முதலீடுகளை ஒன்றிணைத்தல்

இது ஒரு முக்கியமான செயல், ஆனால் பல தம்பதியர்கள் இதைச் செய்வதற்கு நீண்டநாள் எடுத்துக் கொள்கிறார்கள். திருமணத்துக்கு முன்னர் நீங்கள் சில முதலீடுகள் செய்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே திருமணத்துக்கு பின்னர், இவற்றை ஒருங்கிணைத்தல் அவசியம் மற்றும் இந்த முதலீடுகளால் வீட்டுசெலவுகளில் பாதிப்பு எற்படுகிறதா? அல்லது இவற்றை மீள்முதலீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா என மீளாய்வு செய்ய வேண்டும். உதாரணமாக, தம்பதியர் இருவரும் சேமிப்புக்காக ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்துவந்திருந்தால், அவர்களின் எதிர்கால இலக்குகளுக்கு இது சரியான முதலீடாக உள்ளதா என்பதை மீள்பார்வை செய்யாமல் தொடரும் போது, அவர்கள் நிதி பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வேண்டி ஏற்படும்.

எதிர்கால நிதி இலக்குகள் பற்றிய ஆலோசனை

எதிர்கால நிதி இலக்குகள் பற்றிய ஆலோசனை

தம்பதியர்கள் ஒன்றாக உட்கார்ந்து, எதிர்காலத்தில் அவர்கள் அடைய விரும்பும் சில விஷயங்கள் பற்றி விவாதிப்பது அவசியம். இது சொத்துவாங்குதல் அல்லது கார் வாங்குதல், குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் பணிஓய்வு போன்றவையாக இருக்க முடியும். ஒரு சில இலக்குகள் பொதுவானதாகவும், வேறு சில தனிப்பட்டதாகவும் இருக்கும். தனிப்பட்ட இலக்குகளை ஒருவர் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதால், உங்கள் கனவுகளில் அவர்களை ஈடுபடுத்துவது மட்டுமன்று, இவை ஏன் உங்களுக்கு முக்கியம் என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும். ஒருபக்கம் இது வாதங்கள் அல்லது மாறுபட்ட கருத்துக்களுக்கு வழிவகுத்தாலும், வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதால், ஒரு நடுத்தர நிலையை அடைய முடியும்.

எதிர்பாராத தேவைகள்

எதிர்பாராத தேவைகள்

புதிதாக திருமணமானவர்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் எதிர்பாராத நிதி மிகவும் அவசியமானதாகும். 4-6 மாத கால வருமானத்தைப் பாதுகாப்பாக ஒரு லிக்விடிட்டி முதலீட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த எதிர்பாராத நிதியை கொண்டு வழக்கமான செலவுகளுக்காக எடுக்கப்படக் கூடாது, அவசர மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு ஆகிய தேவைகளுக்காக கண்டிப்பான முறையில் தனியாக வைக்கப்பட வேண்டும்.

கடன்களை ஒருங்கிணைத்தல்

கடன்களை ஒருங்கிணைத்தல்

கடன் அளவை கட்டுபடுத்தல் மிக அவசியம். கணவர் ஒரு தனிநபர் கடனை லுத்தவேண்டியிருக்கும் அதே வேளை, மனைவி அவரது பணத்தை நிலையான வைப்பிலிடுவது அர்த்தமற்றது. அந்த தொகையை பண நிலுவை, கடனைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். மீண்டும், உங்கள் கடன்களை ஒன்றிணைத்து, எது முதலில் அடைக்கப்பட வேண்டும் என பார்த்து, அதை முதலில் அடைக்க வேண்டும். எனக்குச் எது சிறந்தது என்ன என்பதை விட நமக்கு எது சிறந்தது என்ன என்பதே திருமணத் தம்மதியர்கள் யோசிப்பது அவசியம்.

நிதி ஆவணங்களைப் புதுப்பித்தல்

நிதி ஆவணங்களைப் புதுப்பித்தல்

இதுவும் ஒரு முக்கியமான செயல், ஆனால் பலர் இதைப் புறகணிக்கின்றனர். கையில் வைத்திருக்க வேண்டிய, அவசியமான முதல் ஆவணம் ‘திருமணச் சான்றிதழ்' ஆகும். மனைவியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டால், பான் கார்ட், பாஸ்போர்ட் ஆகிய முக்கியமான ஆவணங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். மேலும் பழைய ஆவணங்களில் பெற்றோர்கள் நாமினியாக இருக்கலாம் அல்லது நாமினேஷன் இல்லாமலே இருக்கலாம். காப்பிடு, வருங்கால வைப்பு நிதி, வங்கிக் கணக்குகள் ஆகிய முக்கிய ஆவணங்களில் மனைவி அல்லது கணவன் பெயர் நாமினேஷன் செய்யப்பட வேண்டும்.

அபாயப் பாதுகாப்பு

அபாயப் பாதுகாப்பு

தம்பதியர் இருவரும், போதுமான அளவு ஆயுள், சுகாதாரம் மற்றும் சொத்து அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் வீட்டுக் காப்பீடு ஆகிய முக்கிய காப்புகள் அவசியமாகும்.

சேமிப்பின் மகத்துவம்

சேமிப்பின் மகத்துவம்

சேமிப்புக்களை உருவாக்கி அவற்றை நீண்ட கால நோக்கத்திற்காக முதலீடு செய்தல் - செலவுகள் பட்ஜெட் செய்யப்பட்டவுடன், எவ்வாறு சேமிக்க முடியும் என்பது பற்றி தம்பதியர்கள் மத்தியில் ஒரு திட்டம் கண்டிப்பாக இருக்க வேண்டும். தம்பதியர்கள் திட்டமிட்டபடி, எதிர்கால நோக்கத்தோடு இணைந்த சரியான முதலீட்டுத் திட்டத்தில், தமது சேமிப்பை முதலீடு செய்ய வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+