‘இந்தியாபஸ்ட் லைஃப் மணி பாலன்ஸ்' திட்டம் என்பது, முதலீட்டு இடர்பாடுகளை விரும்பாத, பங்கு முதலீடுகளை விட அதிகமாக லாபம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்காக பிரத்தியேகமாக அறிமுகம் செயப்பட்டுள்ளது.
நீங்கள் வயதில் முதியவர்கள் ஆகும் பொழுது, ஆபத்தை எதிர்கொள்ளும் நாட்டம் குறைவது இயல்பு. வழக்கமாக, பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில வருடங்கள் இருக்கும் நிலையில், பலவருடங்களாக உழைத்து சேர்த்த செல்வத்தை பாதுகாக்க விரும்புவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விட அதிகமான லாபம் ஈட்ட விரும்பும் நாம், அதேவேளையில் அதிகளவு ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை.
நீங்கள் வயதில் முதியவர்கள் ஆகும் போது, நம் தேவைகளை ஈடுக்கட்ட, முதலீட்டு மதிப்பேற்றத்துக்கு உதவும் பங்குமுதலீடு மற்றும் சீரான லாபம் ஈட்டகூடிய கடன் நிதி ஆகிய இரண்டும் சேர்ந்த ஒரு சமநிலையான முதலீட்டுத் திட்டம் பொருத்தமாக இருக்கும்.
சீரான அணுகுமுறை
இந்தியாஃபஸ்ட் லைஃப் மணி பாலன்ஸ் திட்டம் நமக்கு இரண்டு நிதித் தேர்வு முறைகளை வழங்குகிறது. அவை பங்கு1 நிதி மற்றும் கடன்1 நிதி திட்டங்களாகும்.
ஒரு நீண்ட நாள் முதலீட்டுக் காலப்பகுதியில் அதிக லாப விகிதத்தை பெறுவது பங்கு1 நிதியின் நோக்கமாகும், அதேவேளை, பணவீக்கத்தை சமாளித்து, ரிஸ்க் இல்லாமல், உறுதியான லாபத்தைப் தருவது கடன்1 நிதியின் நோக்கமாகும்.
பங்கு1 நிதி திட்டத்தில் முதலீடு செய்தால், இதிலிருந்து கிடைக்கும் வருமானத் தொகை ( 10% லாபம் அல்லது அதற்கு மேல்), தானாகவே பாதுகாப்பான கடன்1 நிதிக்கு மாற்றப்படும்.
தானியங்கித் தூண்டுதல்
‘தானியங்கித் தூண்டுதலை' அடிப்படையாகக் கொண்ட இந்த முதலீட்டு உத்தி, பங்கு நிதிக்கும் மற்றும் கடன் நிதிக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான சமநிலையை உறுதி செய்கிறது. மேலும், இதில் ஆயுள் காப்பு (லைஃப் கவர்) வசதி உள்ளதால், இத்திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு செய்திருப்பவருக்கு மரணம் நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டால், உறுதிக்தொகை ( சம் அஷூர்ட்) வழங்கப்படும்.
உள்ளடக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மை
ஒரு குறுகிய காலத்திற்கு (7 வருடங்கள்) முறையாக முதலீட்டுத் தொகை செலுத்துவதன் மூலம், 25 வருடங்களுக்கு தொடர்ச்சியான பயனை அனுபவிக்க முடியும். அதேபோல், ஒரே தவனையில் முதலீட்டுத் தொகை செலுத்தி, அதை 20 வருடங்கள் வைத்துக் கொள்வதன் மூலமும் நீண்ட நாள் பயனை அனுபவிக்க முடியும்.
ஃபண்ட் ஸ்விச்சிங்
உங்கள் தனிப்பட்ட தேவையைப் பொறுத்து, பங்கு நிதிக்கும், கடன் நிதிக்கும் இடையே ஃபண்ட் ஸ்விச்சிங் செய்வதற்கான வசதி இந்தத் திட்டத்தில் உள்ளது. வருடத்திற்கு 52 முறை இலவசமாக ஃபண்ட் ஸ்விச்சிங் செய்ய முடியும். 5 வருடங்களுக்குப் பின்னர், திடீரென உங்களுக்குப் பணத்தேவை ஏற்பட்டால், ஒரு பகுதித் தொகையை திரும்பெறும் வசதியும் உண்டு. திட்டத்தின் முதல் 5 வருடகாலப்பகுதியில், பணத்தேவை ஏற்பட்டால், கடன் பெறக்கூடிய வசதியும் இதில் உள்ளது.
வரி சலுகை
வருமானவரிச் சட்டம் 1961, பிரிவு 80சி மற்றும் 10(10டி)யின் கீழ் உங்களுக்கு வரி சலுகையும் உண்டு.
இறுதிக் குறிப்பு
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடுவதைத் தவிர்ப்பது ஒரு விவேகமான செயலாகும். ஆகவே நீங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும், அதேவேளை தொடர்ந்து லாபம் ஈட்டக்கூடிய முதலீட்டுத் திட்டமாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். எனவே, "இந்தியாபஸ்ட் லைஃப் மணி பாலன்ஸ்"திட்டத்தில் முதலிடு செய்யும் போது, உங்களுக்கு பாதுகாப்பான வருமானமும், மன நிம்மதியும் கிடைக்கும் என்பது உறுதி!!.
More From GoodReturns

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications