மணி-பேக் திட்டம் என்றால் என்ன?? அவற்றின் செயல்பாடு யாவை??

சென்னை: மணி-பேக் திட்டம் ஒரு கவர்ச்சிகரமான ஆயுள் காப்பீடுத் திட்டமாகும். இந்த திட்டதின் கீழ் வாடிகையாளர்களுக்கு பணம் திரும்பப் வழங்கப்படுவதால் இது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாக தோன்றினாலும், இந்த திட்டத்தின் சில சிறப்பம்சங்கள் அனைவராலும் கவரப்படுகிறது. இதை முறையாக பயன்படுத்தும் போது, நிதி திட்டமிடலுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.

காப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரண்டு அம்சங்களையும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றாக வழங்கும் ஒரு பாரம்பரிய ஆயுள் காப்பீடு, இந்த மணி-பேக் திட்டமாகும். ஆனால் இது ஒரு என்டோவ்மென்ட் திட்டம் இல்லை. என்டோவ்மென்ட் திட்டத்தில், காப்பீட்டு நபர் இறக்கும் போது அல்லது பாலிசி கால முடிவின் போது காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். மணி-பேக் திட்டத்தில், பாலிசி செயற்பாட்டில் இருக்கும் போதே, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கூடுதல் பே-அவுட் வழங்கப்படும்.

மணி பேக் திட்டதின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பணம் செலுத்தப்படுகிறது.

மணி-பேக் திட்டம் என்றால் என்ன?? அவற்றின் செயல்பாடு யாவை??

மணி பேக் திட்டத்தில், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஐந்து வருடகால இடைவெளியில் வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப செலுத்துகிறது (வழக்கமாக மொத்த உறுதித் தொகையில் 20 சதவிகிதம்). காப்பீட்டுநபர் திட்டகாலம் முடியும் வரை உயிரோடு இருந்தால், உறுதித்தொகையுடன் (சம் அஷூர்ட்) போனஸ் தொகையையும் சேர்த்து வரும் மொத்தத் தொகையிலிருந்து, ஏற்கனவே செலுத்தப்பட்டிருக்கும் தொகையைக் கழித்து மீதித் தொகை வழங்கப்படும். இருப்பினும் காப்பீட்டு நபர் திட்டகாலத்திற்குள் இறந்துவிட்டால், பாலிசி காலத்தில் ஏற்கனவே செலுத்தப்பட்டிருக்கும் தொகையைப் பொருட்படுத்தாமல், அவரது வாரிசுதாரர்களுக்கு உறுதித் தொகை முழுமையாக வழங்கப்படும்.

உதாரணமாக: திட்டக்காலம் 20 ஆண்டுகளும் ரூ.4,00,000/- உறுதித் தொகையும் கொண்ட ஒரு மணி பேக் பாலிசியை, திரு.கண்ணன் என்பவர் வாங்குகிறார். 5வது, 10வது மற்றும் 15வது வருடகால முடிவுகளில், ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் அவருக்கு ரூ.80,000/- வழங்கப்படும். 20வது வருடதில், திட்டக்காலம் முடியும்போது, திரு.கண்ணன் காலமுடிவு வரை உயிரோடு இருந்தால், அவருக்கு மீதமுள்ள உறுதித் தொகை ரூ.1,60,000/- (ரூ.4,00,000 - ரூ.80,000 X 3) பிளஸ் ஏதாவது போனஸ் ஈட்டபட்டிருந்தால் அந்தத் தொகையும் வழங்கப்படும்.

மாறாக, திட்டக்காலத்தின் 14வது வருடத்தில் திரு.கண்ணன் இறந்துவிட்டால், 5வது மற்றும் 10வது வருட முடிவுகளில், ஏற்கனவே ரூ.80,0000/- ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் வழங்கப்பட்டபோதிலும், அவரின் பயனாளிகளுக்கு மொத்த உறுதித்தொகை ரூ.4,00,000 + போனஸ் வழங்கப்படும்.

மணி பேக் ஒரு சிறந்த திட்டம் என்பதற்கான காரணங்கள்

மணி பேக் திட்டம் அதிக பிரிமியம் மற்றும் குறைந்த ஆதாயத்தைக் கொண்டிருப்பதால், பல நிதி ஆலோசகர்கள் இந்தத் திட்டத்தை பரிந்துரைப்பதில்லை. மணி பேக் திட்டதில், 7-10 சதவிகிதத்திற்க்கு இடைப்பட்ட வருமான விகிதமே கிடைக்கும், சில வேளைகளில் 6 சதவிகிதத்துக்குக் குறைவாகவும் இருக்கலாம். ஒரு டெர்ம் பிளானில் வருமானம் எதுவும் கிடைப்பதில்லை என்றாலும் மணி பேக் திட்டத்துடன் ஒப்பிடுகையில், டெர்ம் பிளான் பிரிமியத் தொகை 25 தவணைகளுக்கும் குறைவாகும்.

மணி-பேக் திட்டம் என்றால் என்ன?? அவற்றின் செயல்பாடு யாவை??

இருப்பினும், மணி பேக் திட்டத்தில் பல பயன்கள் உண்டு. இதில் முதலீடு செய்யும் தொகையை வேறு எதிலாவது முதலீடு செய்தால், நிச்சயமாக இதைவிட அதிகமாக இலாபம் பெறலாம். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வோரு 5 ஆண்டிலும் உங்கள் கைகளில் மீண்டும் பணம் கிடைக்கும் வாய்ப்புண்டு. இந்தத் தொகை நிச்சயமாக ஒரு அவசர தேவைக்கு உங்களுக்கு கை கொடுக்கும். மேலும், திட்டக்காலதில் ஒரு வேளை, நீங்கள் இறந்து விட்டால், எற்கனவே வழங்கப்பட்ட தொகையைப் பொருட்படுத்தாமல், உங்கள் குடும்பத்தினருக்கு உறுதித் தொகை முழுமையாக வழங்கபடும். பல காப்பீட்டுத் திட்டங்களில், இடைக்கால பாலிசி மதிப்பை பெற முடியாது வேறு சில திட்டங்களில் பாலிசியைத் திரும்பப் பெறுவதற்கும் மற்றும் கடன் பெறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், பின்னர் கிடைக்க வேண்டிய உறுதித் தொகை குறைந்துவிடும்.

மேலும், யுலிப் திட்டங்கள் போலல்லாமல், சந்தைப் போக்குகள் அடிப்படையில், முதலீட்டை ஸ்விச்சிங் செய்யத் தேவையில்லை. ஒரு மணி பேக் திட்டத்தில், முதலீட்டு ரிஸ்க், காப்பீட்டு நிறுவனத்துக்கு இருப்பதால், இந்தத் தொகை ரிஸ்க் குறைவான திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே இலாபம் குறைவாகக் கிடைத்தாலும், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

இது ஒரு சிறந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என கூறமுடியாது என்றாலும், குறிப்பிட்ட காப்பீட்டுத் தேவைகளுடன், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, குறிப்பாக எதிர்கால செலவுகளுக்காக திட்டமிடுபவர்களுக்கு, மணி பேக் திட்டம் பொருத்தமானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+