"பான் எண்" தெரியும், அது என்ன "டான் எண்"?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: டான் (TAN) எண் என்று அழைக்கப்படும் 1௦ இலக்க எண் வரிமூல வசூல் அல்லது வரி கழித்தல் சேவைகளை வழங்கவும் மற்றும் வருமான வரி சார்ந்த பணிகளையும் செய்யவும் இந்த எண் பயன்படுகிறது. எனவே இந்த எண்ணை வருமான வரி செலுத்தும் அனைத்து அமைப்புகளும் மற்றும் தனி நபர்கள், நிறுவனங்கள் உட்பட அனைவரும் கட்டாயம் பெறவேண்டும். இந்த 1௦ இலக்க டான் எண் வருமானவரித் துறையினறால் வழங்கப்படுகிறது.

 

டான் எண்ணை ஏன் வாங்க வேண்டும்?

வருமான வரி சட்டப் பிரிவு 203 அ வின்படி "வரிமூலவசூல் அல்லது வருமான வரிப்பிடித்தம் உட்பட்ட சேவைகளை பொது மக்களுக்கு வழங்கும் அனைத்து அமைப்புகளும், நிறுவனங்களும் மற்றும் தனி நபர்களும் கட்டாயம் டான் எண்ணை வருமான வரித்துறையிடம் விண்ணப்பித்து பெற வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வருமான வரி சட்டத்தின் அப்பிரிவு (மின்னணு உட்பட) வருமான வரி மூலக்கழித்தல்/வருமான வரி வசூல் விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் மற்றும் கட்டணப்படிவங்கள் போன்றவற்றில் டான் எண் குறிக்கப்பட வேண்டும். TDS/TCS படிவங்களில் டான் எண் சேர்க்கப்படாவிட்டால், அப்படிவங்கள் குறிப்பிட்ட அலுவலக அதிகாரிகளைச் அல்லது அலுவலகங்களை சென்று சேராது, அதாவது டான் எண் சேர்க்கப்படாத விண்ணப்பங்கள் வருமான வரித்துறையினரால் பரிசீலீக்கப்படாது . இதேபோல், வங்கிகளும் டான் எண் சேர்க்கப்படாத TDS/TCS படிவங்களை ஏற்காது.

யார் டான் எண் வாங்க வேண்டும்?

தனிநபர், தனிநபர் தொழில் நிறுவன கிளைகள், தனி நபர்களின் சங்கம் (AOPs)/ தனிநபர்களின் கூட்டமைப்பு (BOIs)/ செயற்கை நீதி துறை நபர், நீதி நிறுவனம் அல்லது கிளை; நிறுவனம் அல்லது கிளை, தன்னாட்சி / சட்டரீதியான அமைப்புகள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் உட்பட்டோர் டான் எண்ணைப் பெறமுடியும்.

 

டான் எண்ணின் விளைவுகள்

மேற்கூறிய சேவைகளை,பணிகளை வழங்கக்கூடிய தனி நபர்கள், அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் டான் எண்ணைப் பெறாவிட்டால் அல்லது தேவையான சான்றிதழ்களில் டான் எண்ணை குறிக்க தவறிவிட்டால் 1௦,௦௦௦ ரூபாய் முதல் அல்லது அதற்கும் அதிகமான அளவிலும் அபராதம் விதிக்கப்படும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

டான் எண் பெறவிரும்பும் மேற்கூறிய தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், அமைப்புகள் (49B) என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து tin nsdlயின் இணையம் வழியாகவோ அல்லது TIN மையங்களிலோ சமர்ப்பிக்க முடியும். உங்களுக்கு அருகாமையிலுள்ள TIN மையங்களை கண்டறிய http://tin.nsdl.com அல்லது www.incometaxindia.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள்.

TIN மையங்களில் நேரடியாகச் சென்று சமர்ப்பிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் எந்தவித சான்றிதழ்களையும் இணைக்கத் தேவை இல்லை. ஆனால் இணையம் ஊடாக செலுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் NDLS இணையம் வழங்கிய ஒப்புமைச் சீட்டையும் இணைக்கவேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பத்தில் தரப்பட்ட முகவரிக்கு டான் எண் அனுப்பப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is TAN or Tax deduction and Collection Account Number?

Tax deduction and collection account Number or TAN is a ten digit alphanumeric number that must necessarily be obtained by all entities responsible for deducting or collecting tax on behalf of the government.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X