
உதாரணமாக, 2013-2014 நிதி ஆண்டுகான உங்களது வருமானவரித் தொகை ரூ.10,000ஐ தாண்டினால், 2013-2014 நிதி ஆண்டு முடியும் முன்னர் நீங்கள் அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டும். இருப்பினும், உங்கள் வருவாயிலிருந்து ஏற்கனவே டிடிஎஸ் பிடிக்கப்பட்டாலோ அல்லது உங்கள் வரித் தொகை 10,000திற்கு குறைவாக இருந்தால், இந்த அட்வான்ஸ் டாக்ஸ் உங்களுக்குப் பொருந்தாது.
தனிநபர்கள் அட்வான்ஸ் டாக்ஸ் பொறுப்பு
நிலையான வைப்புநிதியின் வட்டி வருவாய், சொத்து விற்பனை அல்லது பங்கு முதலீட்டு இலாபம், வணிக வருவாய் உட்பட ஊதியம் அல்லாது வேறு வகையில் வருமானம் ஈட்டும் தனிநபர்கள், நஷ்டம் அல்லது செலவுகளை சரிசெய்த பின்னர் வருமான வரி தாக்கல் செய்து அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டும். ஊதியம் தவிர்த்து வேறு வழிகளில் வருமானம் பெறும் ஊதிய வர்க்க தனிநபர்களும் அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டும்.
அதிக வருமானம் ஈட்டும் வணிக வர்க்கத்தினர் மற்றும் புரோஃபெஷனல்ஸ் (தொழில்முனைவோர்) ஆகியோரும், தாங்கள் கட்டவேண்டிய வரித்தொகை 10,000திற்கு உயர்வாக இருந்தால், அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டும். அதேபோல், நிறுவனங்களும் செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவைகளை, நிதி ஆண்டு முடிவதற்குள் அட்வான்ஸ் டாக்ஸாக செலுத்த வேண்டும்.
சொந்தமாக தொழில் புரியும் புரோஃபெஷனல்ஸ் மற்றும் வணிக வர்க்கத்தினர், 30%, 30% மற்றும் 40% என்ற விகிதங்களில் செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் மூன்று தவணைகளாக அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டும். அதேநேரம் நிறுவனங்கள் அவற்றின் அட்வான்ஸ் டாக்ஸ் நிலுவைகளை, ஜூன் 15, செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் செலுத்த வேண்டும்.
அட்வான்ஸ் டாக்ஸ் அடிப்படைக் காரணம்
அட்வன்ஸ் டாக்ஸ் பெறுவதன் மூலம் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்க உதவும் வகையில், இந்திய வருமானவரித் துறை, அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்துவதை ஊக்குவிக்கிறது.


Click it and Unblock the Notifications