தனிநபர் கடனை தவிர்க்க 6 சிறந்த கடன் திட்டங்கள்!!!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் பணத்தின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது. சொல்லபோனால் பணத்தின் முன்பு, நாம் கைதியாகி உள்ளோம். மேலும் இன்றளவில் ஒரு தனி மனிதனுடைய மரியாதை அவனிடத்தில் உள்ள பண பலத்தை பொருத்தே அமைகிறது.

 

மேலும் நாம் அனைவரும் பணத்தின் தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்குவது இயல்புதான் ஆனாலும் இத்தகைய கடனை பெரும் வட்டி தொகை கொண்ட தனிநபர் கடன் பெறுவதை விட வட்டி தொகை குறைந்த கடனை பெருவது தான் சரி.

ஆனால் வங்கிகள், தனிநபர் கடன்களை அளிப்பிதல் தாராளமாக இருக்கும், மற்ற கடன்களை அளிப்பதில் தயக்கமும், காலம் தாளத்தி வரும். ஏனெனில் இத்தகைய கடன்களில் வட்டி தொகை மிகவும் குறைவு, சில வங்கிகள் வாடிக்கையாளர்களின் அவசரத்தை சாதகமாக பயன்படுத்து தனிநபர் கடனை அளிப்பதில் ஆர்வம்காட்டி வரும்.

எனவே தனிநபர் கடனை தவிர 6 சிறந்த கடன் திட்டகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம், தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.

வைப்பு நிதிக்கு எதிரான கடன்

வைப்பு நிதிக்கு எதிரான கடன்

அவசர தேவைக்கு கடன் பெறுவதை விட உங்கள் வைப்பு நிதியை முறித்து பணத்தை பெறலாம், அல்லது வைப்பு நிதிக்கு எதிராக கடன் பெறலாம். இத்தகைய கடன்களுக்கு வட்டி விகிதம் தனிநபர் கடன்களை விட குறைவாக தான் இருக்கும். மேலும் இத்தகைய வைப்பு நிதியில் கடன் பெற்ற பிறகும் வைப்பு நிதிக்கான வட்டி தொகை கிடைக்கும்.

தங்க கடன்

தங்க கடன்

தங்கத்தில் இப்பொழுது முதலீடு செய்வது தவறான முடிவு, ஆனால் தங்கத்தை வைத்து கடன் பெறுவது உண்மையில் ஒரு சிறந்த யோசனை தான். இத்தகைய கடனில் தேவையற்ற கட்டணம் எதுவும் இருக்காது.

பங்குகளுக்கு எதிரான கடன்
 

பங்குகளுக்கு எதிரான கடன்

சில வங்கிகள், குறிப்பிட்ட சில நிறுவன பங்குகளுக்கு எதிராக கடன் அளித்து வருகிறது. அனைத்து வங்கிகளும் இத்தகைய திட்டதை செயல்படுத்துவதில்லை.

மேலும் பங்குகளுக்கான கடன் தொகைக்கு எந்த வரைமுறையும் இல்லை, இது முற்றிலும் கடன் பெறுபவரை மட்டும் சார்ந்தது.

ஆயுள் காப்பீட்டுக்கு எதிரான கடன்

ஆயுள் காப்பீட்டுக்கு எதிரான கடன்

காப்பீட்டு என்பது ஒரு சிறந்த சேமிப்பு திட்டம், மேலும் ஆயுள் காப்பீடு நம்மை மட்டும் அல்லாது நம் குடும்பத்தை ஆபத்து காலத்தில் பாதுகாக்கும். ஆனால் அத்தகைய காப்பீடுக்கு எதிராக வங்கியில் கடன் பெறும் வசதி உள்ளது. இத்தகைய கடன்களுக்கு 9 முதல் 13 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும்.

பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) எதிராக கடன்

பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) எதிராக கடன்

தனிப்பட்ட கடன் பெறுவதை விடுத்து, பொது வருங்கால வைப்பு நிதிக்கு எதிராக கடன் பெறலாம். ஆனால் இத்தகைய கடனை நாம் 2 வருடத்திற்குள்ள செலுத்த வேண்டும்.

சொத்துகளுக்கு எதிரான கடன்

சொத்துகளுக்கு எதிரான கடன்

பண தேவைக்காக சிலர் சொத்துகளை விற்பதை பார்த்திருப்போம். ஆனால் இத்தகைய செயல் முற்றிலும் தவறானது. பண தேவைக்கான தருனத்தில் சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 Best Alternatives To Personal Loan

As life is unpredictable, it’s very difficult to stay intact with money matters. Many people opt for personal loan when they are in the urgent need of money. Most often, personal loans are the easiest option compared to other type of loans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X