மும்பை: பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்ட் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஒரு வருடத்திற்கு முன்பே ரிசர்வ் வங்கி கூறியது, ஆனால் இன்னமும் வங்கிகள் அதற்கு 2.5% கட்டணத்தை வசூலிக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களின் பணத்தில் அதிக லாபத்தை அவர்கள் ஈட்டுகிறார்கள். ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI), டெபிட் கார்ட் சேவை கட்டணத்தை NPCI-யின் ருபே நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக நீக்கியதற்கு சென்ற மாதம் பெரிய வங்கிகள் அனைத்தும் எதிர்ப்புகளை தெரிவித்தது.

டெபிட் கார்ட் மூலமாக 2,000 ரூபாய்க்கு குறைவாக நடக்கும் வணிக நடவடிக்கைகளுக்கு 0.75 சதவிதம் கட்டண தொகை வசூல் செய்யும்படி ரிசர்வ் வங்கி வலியுறித்தியுள்ளது. அதே போல் 2,000 ரூபாய்க்கு அதிகமாக செய்யும் வணிகத்துக்கு 1% கட்டணம் வசூலிக்க வலியுறுத்தியுள்ளது. ஆனால் பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்ட் பயன்படுத்துவதற்கு வங்கிகள் இன்னமும் 2.5% கட்டணத்தை வசூல் செய்கிறது.
மற்ற வங்கிகளுக்கு NPCI தகவல் அனுப்பி தன்னுடைய ருபே கார்ட் பயன்பாட்டிற்கு 1%-க்கு மேல் கட்டணம் வசூல் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டுக்கு இந்தியா பதிலளிக்கும் வகையில் NPCI ருபே கார்டுகளை அறிமுகப்படுத்தியது. இதன் வளர்ச்சியை தடுக்கும் வகையில் பல வங்கிகள் கூடி பேசியுள்ளதாக தகவல் கூறுகிறது.
டெபிட் கார்டு இல்லாத கால கட்டத்தில், கிரெடிட் கார்டு வந்த புதிதில் 2.5% கட்டணம் வசூல் செய்யப்பட்டது. வணிக வளாகத்தில் வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டு ஸ்வைப் மெஷினை வைத்துதிருந்தால், அதை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்ய கூடாது என்று வங்கிகள் கடையிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும்.

ஆனால் பெட்ரோல் பம்ப் மற்றும் இந்திய இரயில்வே மட்டும் இதற்கு விதிவிலக்காக கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்கிறது. தங்களுடைய லாப விளிம்பு மிகவும் குறைவு என்பதால் இந்த கட்டணத்தை தாங்களே ஏற்று கொள்ள மறித்து விட்டது.
டெபிட் கார்டு கட்டணங்களை ரிசர்வ் வங்கி நீக்கிய போது, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டில் ஒரே தொகைக்கு வணிகம் செய்திருக்ககூடாது என்று அடிப்படைக் கோட்பாடு ஒன்றை விதித்தது. அதற்கு காரணம், கிரெடிட் கார்டு மூலமாக வணிகம் நடக்கிறது என்றால் பில் தேதி வரை நீங்கள் செலவழித்த பணத்தை வங்கி உங்களுக்கு கடனாக கொடுத்திருக்கிறது என்று அர்த்தமாகும். ஒரு வேலை வாடிக்கையாளர் பணத்தை கட்ட முடியாமல் போனால் அந்த இடர்பாடு வங்கிக்கு தான், எனவே தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
டெபிட் கார்டு பொறுத்த வரை, செலவழித்த பணம் நேரடியாக வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்படும். அதற்கு ஆகும் செலவு என்று பார்த்தால், நெட்வொர்க் பயன்பாட்டின் செலவு வணிக பாதுகாப்பிற்கான செலவாகும். மேற்கு பகுதியில் டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை ஏற்கனவே தள்ளுபடி செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இப்போதெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தி அதிக அளவில் வணிகம் நடைபெறுவதால் வருங்காலத்தில் அது கிரெடிட் கார்டை ஓரங்கட்டி விடும் என்று வங்கிகள் கூறுகின்றனர். ஜூலை 2013-ல், 4.23 கோடி கிரெடிட் கார்டு வர்த்தகமும் 5.24 கோடி டெபிட் கார்டு வர்த்தகமும் நடந்துள்ளது. ஆனால் பண மதிப்பில் பார்க்கும் போது கிரெடிட் கார்டு வர்த்தகம் தான் முன்னிலையில் உள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தி 11,038 கோடிக்கு வணிகம் நடந்துள்ளது. ஆனால் டெபிட் கார்டை பயன்படுத்தி 7,722 கோடிக்கு மட்டுமே வணிகம் நடந்துள்ளது. டெபிட் கார்டு கட்டணத்தை முழுமையாக நீக்கி விட்டால் அதனை பயன்படுத்தி செய்யப்படும் வணிகம் இன்னமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications