என்டோவ்மெண்ட் பாலிசி என்றால் காப்பீட்டு மற்றும் முதலீட்டின் சேர்க்கையாகும். அதனால் இன்ஷூரன்ஸ் எடுத்தவருக்கு இரட்டிப்பு பயன் காத்துக் கொண்டிருக்கிறது - ஒன்று ஆயுள் காப்பீடு, மற்றொன்று முதலீடு செய்யக்கூடிய ப்ரீமியம். இந்த முதலீட்டில் பாதுகாப்பு உறுதிபடுதப்பட்டாலும் கூட ஈட்டுத் தொகை சொற்ப அளவிலேயே கிடைக்கும். அதனால் தான் பல நிதி ஆலோசகர்கள் இந்த பாலிசியை பரிந்துரைக்க மாட்டார்கள். இருப்பினும் நீங்கள் என்டோவ்மெண்ட் பாலிசியில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது எல்.ஐ.சி. யின் என்டோவ்மெண்ட் அஷூரன்ஸ் திட்டமாகும்.
இரண்டு அடிப்படை கொடுக்கல்:
எல்.ஐ.சி. என்டோவ்மெண்ட் அஷூரன்ஸ் திட்டம் என்பது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். அதனால் உங்கள் இறப்பினால் ஏற்படும் இழப்பை அது ஈடு கட்டும். சேமிப்பு ரீதியான இந்த பாலிசி, நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஒரு பெரிய தொகையை உங்களுக்கு திருப்பி அளிக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் போதோ அல்லது வேறு வருங்கால செலவுக்கோ இந்த பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விபத்துகளில் இருந்து பாதுகாப்பு:
இந்த என்டோவ்மெண்ட் திட்டத்தில் உள்ள ஒரு பெரிய பயன் - இயலாமை நலன் மற்றும் விபத்து பலன். இயலாமை பலன் என்பது பாலிசி எடுத்தவரை சென்றடையும், பாலிசி எடுத்தவர் 70 வயதிற்குள் நிரந்தர ஊனத்தை அடைந்தால் இது பயன் அளிக்கும். இதற்கு பாலிசி எடுத்த தொகையின் முதல் 20,000 ரூபாய் வரை அனுமதிக்கப்படும். மேலும் இப்பயனை பெற, ஊனமான நேரத்தில் பாலிசி காலாவதி ஆகாமல் இருக்க வேண்டும். அதன் பிறகு பாலிசி எடுத்தவரால் ப்ரீமியம் கட்ட முடியவில்லை என்றாலும் கூட அது பாலிசியை எந்த விதத்திலும் பாதிக்காது.

இது போக, பாலிசிதாரர் விபத்து பயனையும் பெறலாம். அதற்கு பாலிசி தொகையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் கூடுதலாக 1 ருபாய் பிரீமியத்தில் வசூலிக்கப்படும்.
"வித் ப்ராஃபிட்" பாலிசி:
நிறுவனத்தின் வருடாந்திர லாபத்தை அறிந்து கொள்ள என்டோவ்மெண்ட் பாலிசியை "வித் ப்ராஃபிட்ஸ்" பாலிசியாக மாற்றிக் கொள்ள எல்.ஐ.சி. அனுமத்திகிறது. இதன் படி, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் லாபத்தை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். அதனால் பாலிசிதாரர்களுக்கு அதிக அளவிலான போனஸ் கிடைக்கும். ே
ப்ரீமியம் செலுத்துதல்:
மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் என்டோவ்மெண்ட் பாலிசிக்கான ப்ரீமியம் தொகை குறைவாகத் தான் இருக்கும். மேலும் ப்ரீமியம் தொகை செலுத்துவதில் சில சலுகைகள் இந்த பாலிசி அளிக்கிறது. உதாரணமாக பாலிசிதாரர் ப்ரீமையத்தை மாத முறையில் அல்லது காலாண்டு முறையில் அல்லது 6 மாதத்திற்கு ஒரு தவனை முறையில் அல்லது வருடம் ஒரு தவனை முறையில் கட்டலாம். ஐந்தாவதாக ஒரு முறை உள்ளது, அது தான் சம்பள சேமிப்பு திட்டமாகும். இது நம் நாட்டில் சம்பளத்தில் இருக்கும் பல பணியாளர்களிடம் புகழ் பெற்று விளங்கும் ஒரு முறையாகும். மேலும் ப்ரீமியம் கட்டும் காலத்தையும் பாலிசிதாரரே முடிவு செய்து கொள்ளலாம். பாலிசியின் படி, இந்த திட்டத்தின் அதிகப்படியான ஆயுள் 75 வருடமாகும்.

இருப்பினும் ப்ரீமியம் கட்டும் கால கட்டத்தை பாலிசிதாரர் குறைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு பாலிசிதாரரின் சம்பள காலம் வரை ப்ரீமியம் காலத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஒட்டுமொத்த ப்ரீமையத்தையும் ஒரே தவனையைாக கட்டி விடலாம். எதுவாக இருந்தாலும் சரி, பாலிசி காலாவதியான பிறகோ அல்லது இடையே பாலிசிதாரர் இறந்தாலோ தான் ஈட்டுத் தொகை கொடுக்கப்படும்.
குறைந்தது மூன்று வருடமாவது ப்ரீமியம் கட்டிய பின்பு தான் இந்த பாலிசியின் ஈட்டுத்தொகை திரும்ப கிடைக்கும். அதனால் மூன்று வருடம் கழித்து ப்ரீமியம் கட்டுவதை நிறுத்தினால் கூட, நீங்கள் கட்டிய ப்ரீமயத்திற்கு உண்டான ஈட்டுத் தொகை திரும்பி கொடுக்கப்படும். இருப்பினும் வரப்போகும் போனஸ் எல்லாம் கழித்தால் ஈட்டுத் தொகை 250 ரூபாய்க்கு குறைவாக இருக்க கூடாது.
தகுதி..
இந்த பாலிசியை வாங்க குறைந்தது 12 வயதை அடைந்திருக்க வேண்டும். அதே போல் அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும். அதனால் இந்த எல்.ஐ.சி. என்டோவ்மெண்ட் பாலிசி பலதார மக்களுக்கு பயன்படும். கல்வி நிதி, ஓய்வு நிதி போன்றவைகளுக்கு இந்த திட்டம் நன்றாக பயன்படும். பாலிசியின் ஆயுள் 5 வருடம் முதல் 55 வருடங்கள் ஆகும்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications