டெல்லி: இந்தியவின் மொபைல் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமாக்ஸ், தனது நிறுவனத்தின் புதிய ப்ராண்ட் அம்பாசிடராக ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மானை நியமித்துள்ளது. இதன் மூலம் கடல்கடந்த சந்தைகளில் தனது விற்பனையை தொடங்க உள்ளது.
மைக்ரோமாக்ஸ் நிறுவனம் ஹாலிவுட் நடிகரை ப்ராண்ட் அம்பாசிடராக நியமிக்கும் முதல் இந்திய மொபைல் நிறுவனமாகும்.
மைக்ரோமாக்ஸ் நிறுவனம்
"உலகளவில் உள்ள சர்வதேச சந்தைகளில் தனது கால்தடத்தை விரிவுபடுத்துவும் புதிதாக சில நாடுகளில் கால் பதிப்பதை முன்னிறுத்த, உலக புகழ்பெற்ற ஹக் ஜாக்மானுடனான சேர்க்கை ஒரு சிறந்த கூட்டமைப்பு என்றும் இதன்மூலம் மக்களுடனான எங்களது தொடர்பு விரிவுபடுத்தப்படும்." என்று மைக்ரோமாக்ஸ்யின் முதன்மை மார்கெடிங் அதிகாரி சுபோதீப் பால் அறிக்கையில் தெரிவித்தார்.
X-மேன் ஹீரோ
"நான் இந்தியாவை பெரிதும் காதலிப்பவன். என்னெனில், அது உலகில் சிறந்த நாடுகளில் ஒன்றாகும். மேலும், இந்தியரகள் கிரிக்கெட் விளையாட்டை பெரிதும் காதலிப்பவர்கள். மொபைல் போன்கள் நமது நேரத்தை சேமிக்கும் கருவிகளாக இருந்து வருகின்றது. மேலும், இந்நாளில் அதன் பயன்பாடு பேசுவதற்கும் மட்டும் அல்லாமல் பல வகையான் சூழ்நிலைகளில் மொபைல் போன்கள் உதவி புரிகின்றது. " என்று X -மென் படவரிசையின் நாயகன் கூறினார்.
மொபைல் விற்பனையில் டாப் 2
"சாம்சுங் நிறுவனத்திற்கு அடுத்து இந்தியாவில் மொபைல் விற்பனையில் இரண்டாவதாக இருப்பது மைக்ரோமாக்ஸ் நிறுவனம் தான்" என்று , மார்க்கெட் ஆராய்ச்சி மற்றும் ஆய்வாளர் நிறுவனமான ஐடிசி (IDC) தனது இரண்டாம் காலாண்டு மொபைல் போன் ஷிப்மெண்ட் இலக்குகள் 2013 யில் வெளியிட்டுள்ளது.
மைக்ரோமாக்ஸ் கான்வாஸ்
மைக்ரோமாக்ஸின் கான்வாஸ் வரிசை ஸ்மார்ட் போன்களின் விளம்பரங்களில் ஹாலிவுட் நடிகர் இனி உடன்படுவார். இந்திய சந்தைகளில், மைக்ரோமாக்ஸ் ஸ்மார்ட்போன் -கான்வாஸ் டர்போ போன்களின் விற்பனையை இந்நிறுவனம் கூடிய விரைவில் தொடங்க இருகின்றது என்று மைக்ரோமாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
கான்வாஸ் டர்போ
மேலும் மைக்ரோமாக்ஸ் ஸ்மார்ட்போன் -கான்வாஸ் டர்போ போன்களின் விளம்பரங்களை நீங்கள் இப்பொழுது டிவியிலும், இணைய தளத்திலும் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications