உங்களின் வருமான வரி ரிட்டன் கிடைக்க தாமதமாவது ஏன்?

சென்னை: ஒவ்வொரு வருடமும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த வருடம் இக்கெடுவை ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கச் செய்ததால், வருமான வரி கணக்கை அதிகமானோர் தாக்கல் செய்தனர், மேலும் அவர்கள் வருமான வரி திருப்பலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அனால் வரி செலுத்துவர்களிடம் இருந்து சில முரண்பாடுகள் இருந்ததால், வருமான வரி திருப்பிக்கொடுத்தலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் உங்கள் கணக்கில் அப்பணம் வேகமாக வரவாக வேண்டுமானால் கீழ்கூரியவைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

உங்களின் வருமான வரி ரிட்டன் கிடைக்க தாமதமாவது ஏன்?

அனைத்து முக்கியமான விவரங்களையும் வருமான வரித் துறையிடம் சமர்ப்பித்தல்!!!

வரி செலுத்துபவராக, வருமான வரி ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது, ஒழுங்கில்லா விவரங்கள் மற்றும் போதுமானதாக இல்லாத விவரங்களை சமர்ப்பித்தால் உங்களுக்கு திருப்பி கிடைக்க வேண்டிய பணம் நிராகரிக்க படலாம். அதனால் வருமான வரி ரிடர்னை தாக்கல் செய்யும் போது சரியான தகவல்களை கொடுக்க தவறாதீர்கள்.

ITR V அல்லது அக்னாலெட்ஜ்மெண்ட் ரசீது

உங்கள் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் (DSC) இல்லாமல் உங்கள் வருமான வரி ரிடர்னை சமர்ப்பிக்கும் போது, கண்டிப்பான முறையில் சரிபார்ப்பு நகலை பெங்களூருவில் உள்ள CPC மையத்தின் ஐ.டி. துறைக்கு அனுப்ப வேண்டும். இதனை நீங்கள் இணையதளத்தில் சமர்ப்பித்த நாளிலிருந்து 120 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதனை அனுப்ப தவறினால் உங்கள் ரிடர்ன்ஸ் சரிபார்க்கப்படாமல் நிராகரிக்கப்படும். இப்போது கூட அதனை சரிபார்த்து அதில் ITR V இல்லையென்றால் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

வங்கிக் கணக்கு

உங்கள் வங்கிக்கணக்கின் தகவல்களை பற்றி தெரிவிக்கும் போது அந்த கணக்கு செயல்படும் நிலையில் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். மேலும் வங்கிக் கணக்கின் எண் சரியாகதான் கொடுக்கப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு திருப்பி வர வேண்டிய பணம் செயலாகாமல் அப்படியே நின்று விடும். நீங்கள் ECS வசதியை தேர்ந்தேடுதீர்களானால் பணம் சீக்கிரமே வந்து விடும். ஆனால் தொகை அதிகமாக இருக்கும் போது காசோலையை தேர்ந்தெடுப்பதே நல்லது. அதனால் திரும்பி வரவேண்டிய பணம் சரியாக வர வேண்டுமானால் சரியான முகவரியை கொடுக்க மறந்து விடாதீர்கள். மேலும் உங்களின் நிரந்தர முகவரியை கொடுப்பது இன்னும் சிறந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+