பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு என்பது பணியில் இருப்பவர்களுக்கு தங்களது ஓய்வுகாலத்தை திட்டமிட ஒரு கருவியாக இருக்கின்றது. இத்திட்டத்திற்கு மேலும் இணைப்பாக, நிறுவனங்களுடன் இருக்கும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) கணக்கில் பங்களிக்கலாம். வழக்கமான இபிஎஃப் (EPF) எனப்படுவது நமது சம்பளத்தொகையில் பிடிக்கும் பிடித்தமானது ஒரு தொடக்க வரம்புக்குள் உட்பட்டதாகவே இருக்கும் (12% அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி ). ஆனால் இத்தகைய வரம்பு விபிஎஃப் (VPF) கணக்கில் இல்லை. இதனால், விபிஎஃப் கணக்கில் இருந்து இபிஎஃப் கணக்கு வேறுபட்டு இருகின்றது.
இந்த விபிஎஃப் கணக்கானது, ஊழியர்களின் ஒய்வுக்கால வைப்பு நிதிக்கு அதிகமாக பங்களிக்கச் செய்கின்றது. அதிகபச்சமாக 100% அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி தொகையை அனுமதிக்கச் செய்கின்றது. ஆனால், வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளிகளின் பங்களிப்பு அதிகரித்தாலும், நிறுவனத்தின் பங்களிப்பு அதே அளவில் தான் இருக்கும். மேலும், இபிஎஃப் கணக்குகளில் இருப்பதுபோல் நிறுவனத்தின் பங்களிப்பு 12% மேல் இருக்காது.
விபிஎஃப் கணக்கை தொடங்குவது எப்படி?
விபிஎஃப் கணக்கை ஒரு பணியாளர் மிக எளிதாக தொடங்கலாம். நிறுவனத்திற்கு தேவையான சில அறிவுறுத்தல்கள் சமர்ப்பிக்க வேண்டும். பணியாளரின் சம்பளத் தொகையில் எவ்வளவு சதவீத தொகையை விபிஎஃப் கணக்கிற்கு பங்களிக்க விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிடவேண்டும்.
உறுதியான நெறிமுறையான முதலீடு
சம்பளத்தில் குறிப்பிட்ட வரம்பிலான வழக்கமான பங்களிப்புடன் சேர்ந்து, விபிஎஃப் கணக்கு உங்கள் தரப்பில் இருந்து வழக்கமான முதலீட்டை உறுதி செய்கின்றது.
பிடித்தம் அல்லது பங்களிப்பு
பிடித்தம் அல்லது பங்களிப்பு ஆகியவற்றிக்கு தொடக்க வரம்பு இல்லாததால், விபிஎஃப் ஒருவரது தேவைக்கு ஏற்ப பங்களிக்கச் செய்கின்றது. எவ்வாறு என்றால், மற்ற ஓய்வுக்கால கருவிகளை ஒப்பிடும்போது, உதாரணமாக PPF கணக்கில் ஒரு வருடத்திருக்கு 1 லட்ச ரூபாய் வரைதான் முதலீடு செய்ய முடியும்.
வட்டி வருமானத்திற்கு வரிவிலக்கு
விபிஎஃப் கணக்கு பங்களிப்பு உண்டாக்கும் வட்டி வருமானத்திற்கு இபிஎஃப் கணக்கு போலவே வரிவிலக்கு உண்டு. மேலும், இதில் வரும் வட்டி வருமானமானது இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஏனெனில், விபிஎஃப் கணக்கிற்கு தனியாக ஒரு கணக்கு கிடையாது, இபிஎஃப் கணக்கிலேயே அவை சேர்க்கப்படும். அதனால், விபிஎஃப் முதலீட்டில் ஈட்டிய வட்டிக்கு வரிவிலக்கு உண்டு.
ஒய்வு காலம்
இதனால், நமது வழக்கமான முதலீடுகளை தவிர்த்து, விபிஎஃப் கணக்கு நமக்கு ஒய்வுகாலத்தில் மிகையான தொகையை அளிக்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications