சென்னை: விடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது நமக்கு மிகவும் துணையாகவும், உதவியகவும் இருப்பது வீட்டுக் கடன் திட்டங்கள் தான். ஏனெனில், இத்திட்டத்தின் மூலம் நமக்கு வீடு மற்றும் மனை கிடைப்பதுடன், வரியை குறிப்பிட்ட அளவு சேமிக்கவும் உதவுகிறது. ஆனால், இத்திட்டத்தில் பல பிரச்னைகள் புதைந்துள்ளது. இப்பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால் நீங்கள் சரியான வீட்டு வசதி கடன் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் வீட்டு வசதி கடன் தி்ட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன் யோசிக்க வேண்டிய சிலவற்றை நாங்கள் இங்கே வழங்குகிறோம். சிக்கலான இந்த செயல்பாட்டை நீங்கள் சற்றே எளிதாக புரிந்து கொள்ளவும் மற்றும் உங்களுடைய பணத்தை சேமிக்கவும் இந்த வழிமுறை உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.
முன் ஆராய்ச்சி
இந்நாட்களில் குறைந்த வட்டி விகிதம் மற்றும் துணைத் திட்டங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வீட்டு வசதி திட்டங்கள் உள்ளன. எனவே, முன்னதாகவே இந்த திட்டங்களின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை படித்துத் தெரிந்து கொள்வது நல்லது. நீங்கள் ஒரு வீட்டு வசதி கடனை உறுதிப் படுத்தும் முன்னர் அது தொடர்பாக வரும் எந்தவொரு சந்தேகத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், எந்தவொரு குறிப்பிட்ட விதி தொடர்பாகவும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் அது தெடர்பான கேள்வியை விற்பனையாளரிடம் கேட்க தயங்க வேண்டாம்.
ஈஎம்ஐ மிகவும் முக்கியம்
உங்களால் எவ்வளவு EMI (தவணை) செலத்த முடியும் என்பதை முன்னதாகவே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் தற்பொழுது செய்யும் வேலையை மனதில் கொண்டு, உங்களால் எவ்வளவு EMI-ஐ செலுத்த முடியும் என்பதை கணக்கிடுங்கள். ஏனெனில், EMI-ஐ கட்ட முடியாமல் அபராதம் செலுத்தும் போது அது உங்களுக்கு மிகவும் பிரச்னைக்குரிய விஷயமாகி விடும். மேலும், நீங்கள் தற்காலிகமாக வேலை செய்து வந்தால், நீங்கள் கவனிக்க வேண்டிய பல்வேறு விஷயங்களும் இருக்கும். எனவே முடிவெடுக்கும் முன்னர் இந்த விஷயங்களையும் யோசிப்பது சாலச் சிறந்தது.
வட்டி விகிதத்தில் பேரம் நடத்துங்கள்
பொதுவாகவே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள் பேரம் பேசி குறைக்க முடியாதவையாக இருந்தாலும், சில நேர்மையான காரணங்களுக்காக அதிகமாக இருக்கும் விலையில் சற்றே மாறுதல்களை அவர்களால் செய்து கொடுக்க முடியும்.
மாதத்தின் கடைசி நாள்
மாதத்தின் கடைசி நாட்களாக இருந்தால், அது உங்களுக்கு சற்றே பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் விற்பனை பிரதிநிதிகள் அடைய வேண்டிய இலக்கு எண்ணிக்கை உங்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே, குறிப்பிட்ட இலக்கினை அடைய வேண்டியிருந்தால், அவர்கள் உங்களுக்கு சில சலுகைகளை தர முன் வருவார்கள்.
கடனுக்கான தகுதி
நீங்கள் கடன் வாங்கும் போது உங்களுடைய கடன் வரலாறு பற்றிய ஆவணங்களையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் உங்களுடைய எல்லா கிரெடிட் கார்டுகள் மற்றும் வாகன கடன்களை குறித்த காலத்திற்குள் செலுத்தியிருந்தால், கடன் விண்ணப்ப தகுதியில் சற்றே மேல் நிலையை நோக்கி உங்களால் முன்னேற முடியும். உங்களுடைய கடன் வரலாறு, உங்களுக்கு சாதகமாக குறித்த காலத்தில் நீங்கள் அவற்றை செலுத்தியுள்ளீர்கள் என்று இருந்தால், நீங்கள் கடன் விண்ணப்பத்தை அளிக்கும் போது அது உங்களுக்கு சாதகமாகப் இருக்கும். மேலும், கடனை செலுத்தும் கால அளவையும் கவனியுங்கள்.
கூடுதல் கட்டணங்கள்
நீங்கள் வீட்டு வசதி கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போது, கடன் வழங்குபவர்கள் அந்த திட்டத்துடன் விதிக்கப்படும் பல்வேறு பிற கட்டணங்களைப் பற்றி அறிய வேண்டியது அவசியம். அவர்கள் நிர்வாகம் மற்றும் சேவைக் கட்டணங்கள் அல்லது செயலாக்க கட்டணங்களை உங்கள் கடனுடன் சேர்ப்பார்கள். இந்த அதிகபட்ச பணமானது உங்களுடைய பெயரில் அனுமதிக்கப்படும் மற்றும் நீங்கள் கையில் பெறும் பணத்துடன் சேர்க்கப்படாது. எனவே உங்களுடைய வியாபாரத்தை நீங்கள் உறுதிப்படுத்தும் முன்னதாக, இது போன்ற கூடுதல் கட்டணங்களைப் பற்றி கவனமாக பார்ப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.
ஓப்பந்தத்தை கவனமாக படிக்கவும்
உங்களுடைய வங்கியுடன் நீங்கள் மேற்கொள்ளும் வீட்டு வசதி கடன் ஒப்பந்த ஆவணம் பெரியதாக இருந்தாலும், அதனை நீங்கள் முழுமையாக படிப்பதை உறுதி செய்யுங்கள. சில நேரங்களில், கடன் வழங்குபவர்கள் ஏற்றுக் கொண்ட சில கருத்துக்களை, கடைசியில் காகித வடிவத்தில் கொடுக்கும் போது கவனத்தில் கொள்ள மாட்டார்கள். அந்த ஆவணத்தை படிக்க சற்றே அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டாலும், பின்வரும் காலத்தில் நீங்கள் பிரச்னைகளில் மாட்டிக் கொள்வதை அது தவிர்க்கும். மேலும், விற்பனை பிரதிநிதி உங்களை கேட்டுக் கொண்டால் கூட வெற்று கடன் பத்திரத்தில் நீங்கள் கையெழுத்திட வேண்டாம்.


Click it and Unblock the Notifications