வருமானவரியை வங்கியில் செலுத்த உதவும் சில முக்கிய படிவங்கள்..

சென்னை: இந்திய வருமானவரித் துறை மூலமாக பல்வேறு பிரிவுகளில் வசூலிக்கப்படும் வரியை செலுத்துவதற்கு வெவ்வேறு படிவங்கள் (சலான்) நடைமுறையில் உள்ளன. சரியான படிவத்தை நிரப்பி உரிய தகவல்கள் மற்றும் கணக்கிடப்பட்ட வரித்தொகையுடன் எந்த ஒரு அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை மற்றும் தனியார் வங்கியில் செலுத்தும் வசதி உள்ளது. மேலும் ‘ஆன்லைன்' மூலமாக செலுத்தும் வசதியும் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. எந்தெந்த வரிகள் செலுத்த எந்தெந்த படிவங்களை பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

படிவம் 280

இந்த படிவத்தின் மூலம் செல்ஃப் அசெஸ்மெண்ட் டாக்ஸ் (சுய மதிப்பீட்டு வரி), அட்வான்ஸ் டாக்ஸ், ரெகுலர் அசெஸ்மெண்ட் டாக்ஸ், யூனிட் பங்குதாரர்களின் வருமானத்தின் மீதான வரி, உள்நாட்டு நிறுவனங்களின் ‘டிஸ்டிரிபியூட்டட் பிராஃபிட்ஸ்' மீதான வரி போன்றவற்றை செலுத்தலாம். வருமானவரித்துறையின் இணையத் தளத்திலிருந்தே இந்த படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இருப்பினும் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுக்கு தனித்தனியான படிவங்களில் நிரப்பி செலுத்தவேண்டும். நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் எந்த வகைப்பிரிவு போன்றவற்றை தெளிவாக குறிப்பிடுவது பின்னர் ஏற்படக்கூடிய குழப்பங்களை தவிர்க்க உதவியாக இருக்கும்.

வருமானவரியை செலுத்த ஈசியான வழி!!!.

படிவம் 281

நிறுவனங்கள் மற்றும் தனிநபர் குழுமங்கள் இந்த படிவத்தை பயன்படுத்தி டிடிஎஸ் (TDS) மற்றும் டிசிஎஸ் (TCS) வரிகளை செலுத்தலாம். இந்த படிவங்களில் அந்த நிறுவனம் அல்லது குழுமத்தின் டிஏஎன் (TAN) எண்னை தெளிவாக குறிப்பிடுவது அவசியம். தவறான TAN எண்னை குறிப்பிட்டால் - 1961ம் ஆண்டு வருமான வரி சட்டம் 272 BB பிரிவின்படி, ரூ.10,000/- அபராதமாக செலுத்த வேண்டிவரும்.

படிவம் 282

சொத்துவரி, செக்யூரிட்டீஸ் டிரான்சாக்ஷன் டாக்ஸ் (STT), கிஃப்ட் டாக்ஸ், எஸ்டேட் டியூட்டி, வட்டி வரி, ஆடம்பர ஹோட்டல் செலவு வரி போன்றவைகளை இந்த படிவத்தின் மூலம் செலுத்தலாம். தவறான PAN நம்பரை குறிப்பிட்டால் - 1961ம் ஆண்டு வருமான வரி சட்டம் 272 BB பிரிவின்படி, ரூ.10,000/- அபராதமாக செலுத்தவேண்டி இருக்கும்.

இந்த படிவம் மூலம் வங்கியில் வரிப்பணத்தை செலுத்தும்போது அளிக்கப்படும் ஒப்புகை ரசீதில் அந்த வங்கிக்கிளையின் BSR குறியீடு, தேதி, படிவத்தின் எண் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றதா என்று சோதித்துக் கொள்வது நல்லது. இந்த தகவல்கள் யாவையும் நீங்கள் வருமான கணக்கை காட்டும்போது குறிப்பிட வேண்டியிருக்கும்.

வருமானவரியை செலுத்த ஈசியான வழி!!!.

படிவம் 283

பேங்கிங் டிரான்சாக்ஷன் டாக்ஸ் மற்றும் ஃபிரிஞ்ச் பெனிஃபிட் டிரான்சாக்ஷன் டாக்ஸ் (FBT) போன்றவற்றை செலுத்துவதற்கு இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.

வங்கிகள்

பல்வகையான பிரிவுகளில் வரிப்பணத்தை செலுத்துவதற்கு வசதியாக மத்திய ரிசர்வ் வங்கி அமைப்பு இந்தியாவிலுள்ள 29 வங்கிகளை அங்கிக்கரித்துள்ளது. இவற்றில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இரண்டுமே அடக்கம். வரி செலுத்துவோர் இறுதித்தேதிக்கு முன்னதாக வரியை இந்த வங்கிகளில் செலுத்தலாம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்ஸி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அவை தவிர ஆந்திரா பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் பேங்க், தேனா பேங்க், ஐடிபிஐ பேங்க், இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், சிண்டிகேட் பேங்க், யூகோ பேங்க், யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் & ஜய்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் பாடியாலா போன்ற வங்கிகளும் வரிச்செலுத்துவதற்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+