மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி நாம் அறிய வேண்டியவை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: சாலை வழிப் பயணம் என்பது ஆபத்துகள் நிறைந்தவையாகும். ஒரு விபத்து உயிர்களை பலி கொள்வதோடு, குடும்பங்களையும் நொடியில் சிதைத்து விடுகிறது. அது போன்ற ஒரு துயர நிகழ்வின் போது, தேவைப்படக்கூடிய நிதியுதவியை உடனடியாக வழங்கி உதவக்கூடியது இன்சூரன்ஸ். மோட்டார் இன்சூரன்ஸின் சில வடிவங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எனவே, மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி நாம் அறிய வேண்டியவை!!

செய்ய வேண்டியவை:

* இது போன்ற பாலிஸிகளை யார் மூலமும் வாங்கிக் கொள்ளலாம் என்றும், உங்கள் வாகன டீலர் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று எவ்வித நிபந்தனையும் கிடையாது என்றும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் வாகன டீலர் மூலம் இன்சூரன்ஸுக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், விண்ணப்பப் படிவத்தை நீங்களே நிரப்பவும்.

* விண்ணப்பப் படிவத்தை மிகவும் கவனமாகவும், முழுமையாகவும், உண்மையான தகவல்களின் அடிப்படையிலும் நிரப்புங்கள்.

* பரஸ்பர ஒப்புதலுக்குப் பின் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் நகல் ஒன்றை பத்திரமாக ஆவணப்படுத்திக் கொள்ளுங்கள்.

* பாலிஸி பற்றிய தகவல் தொகுப்பேட்டை கவனமாகப் படித்துப் பார்த்து, அந்த இன்சூரன்ஸுக்குள் அடங்கக்கூடியவை எவை, அடங்காதவை எவை என்பது பற்றி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

* இதில் கூடுதலாகப் பெறக்கூடிய பாதுகாப்பு பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொண்டு, அவற்றில் எது உங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்

* ஆர்சி புத்தகம், பெர்மிட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை சரிபார்ப்புக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பியுங்கள்.

* இந்த ஆவணங்கள் அனைத்தையும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமானது.

செய்யக்கூடாதவை:

* உங்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேறு யாரையும் அனுமதிக்காதீர்கள்.

* படிவத்தில் எந்த கட்டத்தையும் நிரப்பாமல் வெறுமையாக விட வேண்டாம்

* உங்கள் பாலிஸியை இடைவெளி விடாது உரிய நேரத்தில் புதுப்பித்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

* ஏற்கெனவே லைசென்ஸ் எடுக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்ட காரை வாங்கும் போது, சரியான நடைமுறை என்ன என்பது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

* நீங்கள் இன்சூர் செய்யும் வாகனத்தின் உபயோகத்தைப் பற்றிய பொய்யான தகவல்களைக் கொடுப்பது தவறான செயல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What to do and what to avoid when taking a motor insurance?

Travelling by road is a reality and filled with danger. An accident can destroy life and families. Insurance helps with timely financial aid in case of such a tragedy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X