சென்னை: இந்தியாவில் அதிகரித்து வரும் ஏ.டி.எம் கொலை, கொள்ளை காரணமாக ஏ.டி.எம் இயந்திரங்களை பயன்படுத்துவதில் உள்ள வசதிகளை விட, பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை முதன்மையான விஷயங்களாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஏ.டி.எம்-களில் நடக்கும் திருட்டுக்கள் பற்றி முழுமையான தகவல்கள் நம் காதுகளில் எட்டாமல் இருந்தாலும், உள்ளூர் செய்தித் தாள்களில் இவ்வாறான செய்திகள் தினசரி வந்து கொண்டு தான் இருக்கிறது. இவற்றில் இருந்து நாம் எப்படி தப்புவது என்பதை பற்றி தான் இந்தக் கட்டுரை. கவனமாக படிங்க பாஸ்.
பழக்கப்பட்ட ஏடிஎம்
வங்கிகளிலேயே பணப் பட்டுவாடா செய்யும் கேஷ் மெஷின் இயந்திரங்களை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருந்தாலும், ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவது சரியான தேர்வு இல்லை.
உஷாரா இருக்கனும்...
ஏற்கனவே பாதுகாப்புகளுக்காக நாம் பின்பற்றி வந்த சில செயல்களை ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும் போது பயன்படுத்தினாலேயே போதும், இது போன்ற திருட்டுக்களுக்கு நீங்கள் பலியாகாமல் இருக்க முடியும்.
குறிப்பாக பணத்தை எடுக்கும் போதும் அதனை பர்ஸ் அல்லது பேக்குகளில் வைக்கும் வரை உஷாராக இருக்க வேண்டும்.
முக்கியமான வழிமுறைகள்
மின்னணு பண மாற்ற அமைப்பு (Electronic Funds Transfer Association) ஏ.டி.எம் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு டிப்ஸ்களை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளனர்.
ஏ.டி.எம் பயன்படுத்தும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ..
பாதுகாப்பான இடம்
ஏ.டி.எம் இருக்கும் இடம் மற்றும் உங்கள் சுற்றுப் புறத்தை எப்பொழுதும் சற்றே கவனமுடன் கண்காணியுங்கள். கட்டிடத்தின் மூனையில் உள்ள ஏ.டி.எம்-களை தவிர்த்து கட்டிடங்களின் மத்தியப் பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம்-களை பயன்படுத்தவும். பொதுவான மற்றும் நல்ல வெளிச்சமான இடங்களில் உங்கள் ஏ.டி.எம் செயல்பாடுகளை மேற்கொள்ளவும். இந்த இடங்கள் எந்தவிதமான அலங்காரங்களாலும் மறைக்கப்பட்டிருக்கக் கூடாது.
புதிய நபர்கள்
நீங்கள் பணப்பரிமாற்றத்தை முழுமையாக நிறைவேற்றும் வரையிலும் உங்கள் சுற்றுப்புறத்தை நன்றாக கவனித்து வாருங்கள். ஏ.டி.எம் பரிமாற்றங்களை செய்யும் போது, உங்களுக்கு உதவியாக புதிய நபர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம்.
தப்பிக்கும் வழிகள்
ஏ.டி.எம்-களை விட்டு வெளியே செல்லும் போது உங்களை யாரும் பின் தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி ஏதேனும் நடந்தால் போலீஸ் அல்லது தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கவும் அல்லது ஜன சந்தடியுள்ள, வெளிச்சமான அல்லது வியாபார தளங்களுக்குள் புகுந்து கொள்ளவும்.
ஆபத்து நிறைந்த ஏடிஎம்
சந்தேகத்திற்கிடமான அல்லது உங்களுக்கு பரிச்சயமில்லாத வகையில் இருக்கும் ஏ.டி.எம்-களை பயன்படுத்த வேண்டாம்.
பின் நம்பர்
நீங்கள் இரகசிய எண்ணை டைப் செய்யும் போது உங்கள் பின்னாலிருந்து யாரையும் அந்த எண்ணைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். மேலும், இரகசிய எண்ணை ஏ.டி.எம் அட்டையின் பின் பகுதியில் எழுதி வைக்க வேண்டாம்.
மெஷினில் அட்டை சிக்கிக் கொண்டால்
ஏ.டி.எம்-மெஷினில் உங்கள் அட்டை சிக்கிக் கொண்டால், இரகசிய எண்ணை மீண்டும் அழுத்தாமல், சம்மந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும்.
விலை உயர்ந்த பொருட்கள்
விலை உயர்ந்த நகைகளையோ அல்லது பிற பொருட்களையோ ஏ.டி.எம்-ற்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்வது நாம் பிறருடைய கவனத்தை ஈர்த்து, நம் மீது தாக்குதல் நடத்தத் தூண்டும்.
பணத்தை எண்ண வேண்டாம்
ஏ.டி.எம் உள்ளேயோ அல்லது வெளிப்படையாகவோ பணத்தை எண்ண வேண்டாம். உங்களுடைய கார் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வரும் வரை பொறுமையாக இருக்கவும்.
சாலையோர ஏ.டி.எம்கள்
நீங்கள் சாலையோர ஏ.டி.எம்-களை பயன்படுத்தினால், உங்கள் எஞ்சினை அணைக்காமல், கதவுகளை மட்டும் மூடி வைக்கவும். காருக்கும் உங்களுக்கும் இடையில் போதிய இடைவெளியும் இருக்குமாறு கவனித்துக் கொள்ளவும்.
டெபாசிட் உறைகள்
பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய பயன்படுத்தும் டெபாசிட் உறைகளை உங்கள் கார் அல்லது வீடுகளில் வைத்திருக்கவும். அனைத்து விதமான எழுத்துப் பணிகளையும் ஏ.டி.எம்-ற்கு செல்வதற்கு முன்னரே சரியாக எழுதி எடுத்துச் செல்லவும். இதன் மூலம் ஏ.டி.எம்-ல் நீங்கள் செலவழிக்கும் நேரம் குறையும்.
வங்கி கணக்கு
உங்களுடைய வங்கி கணக்கு விபரங்களை கவனமாக பரிசீலித்து வரவும். அதே போல உங்களுடைய நிலுவை தொகை மற்றும் உடனடி அறிக்கை மற்றும் வங்கி தொடர்பான எந்த பிரச்னையையும் அவ்வப்போது கவனித்து வரவும்.
புகார்
உங்களிடம் யாராவது பணம் பறிக்கும் நிலையை எதிர்கொள்ள நேரிட்டால், பீதி அடையாமல் போலீசாரிடம் புகார் கொடுக்கவும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications